உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்களை பற்றிய உண்மைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

பிஎம்டபிள்யூ, ஹார்லி டேவிட்சன், யமஹா, சுஸுகி மற்றும் கவாஸாகி உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று உலகம் முழுவதும் பைக் விற்பனையில் கொடி கட்டி பறந்து வருகின்றன. இந்நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் நீங்களும் கூட ஒருவராக இருக்கலாம்.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

ஆனால் மேற்கண்ட மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் பற்றிய ஒரு சில உண்மைகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த உண்மைகள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவ்வளவு ஏன்? நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகவும் கூட இருக்கலாம். அவ்வாறான சுவாரஸ்ய தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

பிஎம்டபிள்யூ:

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த 1916ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஏர்கிராஃப்ட் இன்ஜின் உற்பத்தி நிறுவனமாகதான் பிஎம்டபிள்யூ ஆரம்பிக்கப்பட்டது. பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடங்கப்பட்ட சமயத்தில், முதலாம் உலகப்போர் நடைபெற்று கொண்டிருந்தது. முதலாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வர ஏராளமான சமாதான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

இதில், வெர்செயில்ஸ் ஒப்பந்தம் (Treaty of Versailles) மிகவும் முக்கியமானது. இந்த வெர்செயில்ஸ் ஒப்பந்தமானது, ஜெர்மனி விமான படைக்கு தடை விதித்தது. இதுதவிர ஜெர்மனியில் ஏர்கிராஃப்ட்களை உற்பத்தி செய்யவும் தடை கொண்டு வரப்பட்டது. எனவேதான் பிஎம்டபிள்யூ நிறுவனம் வேறு பக்கம் கவனத்தை திருப்பியது.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

இதன்படி ஏர் பிரேக்குகள், தொழில்துறை இன்ஜின்கள், விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் ஆபீஸ் பர்னிச்சர்கள் ஆகியவற்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் உற்பத்தி செய்ய தொடங்கியது. அதன் பின்பே மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களின் உற்பத்தியை பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடங்கியது. இன்று பிஎம்டபிள்யூ வாகனங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ளன.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

ஹார்லி டேவிட்சன்:

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் பைக் கடந்த 1903ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வில்லியம் ஹார்லி மற்றும் ஆர்தர் டேவிட்சன் ஆகியோர்தான் இந்த பைக்கை உருவாக்கினர். இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் முதல் பைக் ஒரு மர கொட்டகையில்தான் உருவாக்கப்பட்டது.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

இன்று ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் உலகம் முழுவதும் ஏராளமானோரின் கனவு வாகனமாக திகழ்ந்து வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் வரலாறு ஒரு மர கொட்டகையில் இருந்து தொடங்குகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த உண்மையை நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

யமஹா:

கடந்த 1887ம் ஆண்டு பியானோ உற்பத்தி நிறுவனமாகதான் யமஹா தொடங்கப்பட்டது. இன்று பைக்குகள் தவிர, படகுகள், கார் இன்ஜின்கள், தொழில்துறை ரோபோட்கள், வீல்சேர்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றையும் யமஹா நிறுவனம் தயாரித்து வருகிறது. அவர்கள் இன்றும் கூட மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமெண்ட் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

சுஸுகி:

ஜப்பானின் பட்டு தொழில்துறைக்கு தேவையான நெசவு தறிகளை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகதான் கடந்த 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுஸுகி தொடங்கப்பட்டது. பின்னர் அதன் நிறுவனரான மிச்சிகோ சுஸுகி, கடந்த 1930களில் இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இன்ஜின்கள் மற்றும் சிறிய கார்களை உற்பத்தி செய்வதற்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

சுஸுகி நிறுவனத்தின் முதல் பைக் கடந்த 1952ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது பவர் ஃப்ரீ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தற்போது மோட்டார்சைக்கிள்கள் தவிர, கார்கள், மரைன் இன்ஜின்கள், வீல்சேர்கள் ஆகியவற்றையும் சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

உலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா? கண்டிப்பா நம்ப மாட்டீங்க

கவாஸாகி:

கவாஸாகி நிறுவனம் பைக்குகளை மட்டும்தான் உற்பத்தி செய்கிறது என நினைத்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் எண்ணத்தை உடனடியாக மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் கவாஸாகி நிறுவனம் பைக்குகள் தவிர, ஏவுகணைகள், ஸ்பேஸ் ராக்கெட்கள், ஹெலிகாப்டர்கள், ஜெட் இன்ஜின்கள் மற்றும் ரயில்கள் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது.

Image Source: Wheelstreet

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts About BMW, Harley-Davidson, Yamaha, Suzuki, Kawasaki. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X