சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அத்துடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு காரில் செல்ல இருக்கிறார். இதற்காக, வழிநெடுகிலும் தடபுடலான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானத்தில் வந்த கார்கள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் இன்று பிற்பகலில் சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளன. சீன அதிபர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய பல்வேறு சுவாரஸ்யங்களை தொடர்ந்து காணலாம்.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஹாங்கி பிராண்டின் பாரம்பரியம்

சீனாவின் பாரம்பரியம் மிக்க ஹாங்கி நிறுவனம் தயாரித்துக் கொடுத்த விசேஷ கார்களையே அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வருகிறார். கடந்த 1958ல் துவங்கப்பட்ட ஹாங்கி நிறுவனம் தற்போது எஃப்.ஏ.டபிள்யூ வாகன குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

கம்யூனிச பாரம்பரியம்

ஹாங்கி என்றால் செங்கொடி என்று அர்த்தமாகிறது. அதாவது, சீனாவின் கம்யூனிச கொள்கையின் பாரம்பரியத்தை போற்றும் விதத்தில் இந்த பெயர் வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே, ஒரு சிலரை தவிர, பெரும்பாலான சீன அதிபர்கள் ஹாங்கி கார்களையே அதிகாரப்பூர்வ கார்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அதிகாரப்பூர்வ கார்

ஹாங்கி நிறுவனமானது 1981ம் ஆண்டு வரை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே கார்களை தயாரித்து வந்தது. பின்னர், 1990ல் இருந்து சாதாரண மக்களுக்கான கார்களை தயாரிக்க துவங்கியது. இந்த நிலையில், ஹாங்கி நிறுவனம் தயாரித்துக் கொடுத்த கார்களையே சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தி வருகிறார்.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

நடைமுறையை மாற்றிய ஜின்பிங்

மேலும், சீன அதிபர்கள் வெளிநாடு செல்லும்போது, அந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் கார்களையே பயன்படுத்தும் நடைமுறையை பின்பற்றி வந்தனர். இந்த நடைமுறையை கடந்த 2014ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மாற்றினார். அதாவது, வெளிநாடு செல்லும்போதும், தான் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்களையே விமானம் மூலமாக கொண்டு சென்று பயன்படுத்த துவங்கினார்.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

கார் மாடல் விபரம்

அதன்படி, ஜி ஜின்பிங் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தி வரும் ஹாங்கி நிறுவனத்தின் எல்-5 கார்கள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன. ஹாங்கி நிறுவனத்தின் பிரபலமான சிஏ770 என்ற காரின் வழித்தோன்றலாக அறிமுகம் செய்யப்பட்ட ஹாங்கி எல்-5 கார் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

குண்டு துளைக்காத வசதி

சீன அதிபரின் ஹாங்கி எல்-5 கார் மாடலானது குண்டு துளைக்காத வசதியுடன் மிக விசேஷ கட்டமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அடிப்பாகமும், கண்ணி வெடி தாக்குதல்களில் இருந்து காக்கும் திறன் வாய்ந்தது. பஞ்சர் ஆகாத சிறப்பு கொண்ட ரன் ஃப்ளாட் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read:ரியல் ஹீரோ... சொந்த பணம் 15 லட்ச ரூபாயை செலவு செய்து இந்தியாவையே கண் கலங்க வைத்த இளைஞர்

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

பிரம்மாண்ட கார்

இந்த கார் 5.55 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட மிக பிரம்மாண்டமான லிமோசின் வகை கார் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆக்சில்களுக்கு இடையிலான வீல் பேஸ் நீளம் 3.4 மீட்டர் என்பதால் உட்புறத்தில் மிக மிக தாராளமான இடவசதியை அளி்கும். அதாவது, மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் மாடலைவிட மிக பெரிய கார். இந்த கார் 3.15 டன் எடை கொண்டது.

Most Read:ஹூண்டாய் வெனியூ காரின் டாப் வேரியண்ட்டில் டியூவல் டோன் தேர்வு!

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சொகுசு வசதிகள்

மிக விசாலமான இடவசதியையும் அளிக்கும் சொகுசு இருக்கைகள், சிறந்த ஏசி சிஸ்டம், ரோஸ் உட் மர அலங்கார வேலைப்பாடுகள், 1.1 மீட்டர் கால் வைப்பதற்கான இடைவெளியுடன் கூடிய பின் இருக்கைகள் என அசத்தலான பல வசதிகளை பெற்றுள்ளது. காரில் செங்கொடியை பிரதிபலிக்கும் வகையில் விளக்குகள், கொடி மற்றும் பாரம்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Most Read:என்னது ஹுண்டாய் வெனியூ காருக்கே கடும் போட்டியா...? மிக மிக மலிவு விலையில் தயாராகும் புதிய ரெனோ கார்!

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சேட்டிலைட் போன் வசதி

இந்த காரில் சேட்டிலைட் போன் வசதி மூலமாக அவசர நேரத்தில் உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ள முடியும். அதேபோன்று, ஏராளமான ரகசிய பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் கட்டமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

எஞ்சின்

இந்த காரில் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 ரக எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 381 எச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

எரிபொருள் கலன்

இந்த பிரம்மாண்டமான கார் 0 - 100 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் தொடும் வல்லமை கொண்டது. இந்த காரில் 105 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சீனாவின் விலை உயர்ந்த கார்

சீனாவிலேயே மிக மிக விலை உயர்ந்த கார் மாடலாக விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.5.69 கோடி இந்திய மதிப்பில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு கார்களைவிட அதிக சிறப்பம்சங்களை இந்த கார் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை மறுதினம் இந்த கார் சென்னை சாலைகளிலும் தடம் பதிக்க உள்ளது பெருமைக்குரிய விஷயமாகவே கருதலாம்.Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here are some interesting facts about Chinese President Xi Jinping official cars. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X