ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

உலகின் முதல் தர கார் பந்தயமாக போற்றப்படும் ஃபார்முலா-1 சரித்திரம் பல சாதனையாளர்களை பார்த்திருக்கிறது. ஆனால், அதில் சிலர்தான் ஃபார்முலா-1 வரலாற்றில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றனர். ஃபார்முலா-1 வரலாற்றை இவர்கள் பெயர் இல்லாமல் எழுத முடியாது. அந்த வகையில், ஃபார்முலா-1 உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படும் ஃபான்ஜியோ பற்றிய பல சுவாரஸ்யமான வரலாற்று உண்மைகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

ஆதிக்கம்

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் 1950ல் துவங்கப்பட்ட ஃபார்முலா - 1 கார் பந்தயம் உலக அளவில் பல்வேறு கார் பந்தய வீரர்களின் கனவாக மாறியது. அப்போது, ஃபார்முலா-1 போட்டிகளின் முதல் தசாப்தத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வீரர்தான் ஜூவான் மேனுவல் ஃபான்ஜியோ.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

இளமை காலம்

அர்ஜென்டினாவில் 1911ம் ஆண்டு பிறந்தவர் ஃபான்ஜியோ. இளம் வயதிலேயே படிப்பில் கவனம் செலுத்தாமல், மோட்டார் பந்தயங்கள் தீராத மோகம் கொண்டிருந்தார். 13 வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு, வாகன மெக்கானிக்கிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். மேலும், கால் பந்து ஆடுவதிலும் அதிக ஆர்வம் காட்டினார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

கில்லி டிரைவர்

கார் மெக்கானிக்கிடம் உதவியாளரிடம் சேர்ந்த பின்னர் அங்கு வரும் கார்களை ஓட்டி பழகத் துவங்கினார். ஆனால், அரசு விதிகளின்படி, அவர் கட்டாய ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். அங்கு அவரது ஓட்டுனர் திறமையை பார்த்து, அவரது கமாண்டர் பாராட்டி இருக்கிறார். அதன் பின்னர் வெளியில் வந்த அவர் சொந்தமாக மெக்கானிக் ஷெட் துவங்கி, முதலில் உள்ளூர் கார் பந்தயங்களில் அசத்தி வந்தார்

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

தேசிய சாம்பியன்

உள்ளூர் போட்டிகளில் இருந்து அடுத்து தேசிய அளவிலான கார் பந்தயங்களில் பங்குகொள்ள துவங்கினார். தனது அசாத்திய திறமையால் 1940 மற்றும் 41 ஆண்டுகளின் அர்ஜென்டினா தேசிய மோட்டார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் நடைபெறும் மோட்டார் பந்தயங்களில் பங்கேற்கு அசத்தத் துவங்கினார். அதன்பின்னர், தீவிரமாக முயற்சித்து ஃபார்முலா-1 போட்டியில் களம் புகுந்தார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

சிங்கம்லே

ஃபான்ஜியோ களத்திற்குள் வந்துவிட்டால் சக வீரர்களுக்கு கலக்கம்தான். அவர் இருந்தவரை பந்தய களத்தில் பிற வீரர்களுக்கு வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. வெளி உலகில் அனைவருடனும் நட்புடனும், மென்மையாகவும் பழகும் சுபாவம் பெற்றிருந்த ஃபான்ஜியோ பந்தய களத்தில் புகுந்து விட்டால், சிங்கம் போல மாறிவிடுவார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

சமயோஜிதம்

பந்தய களத்தில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நேரத்தில் கூட யாரும் எதிர்பாராத விதமாக முன்னேறி வெற்றிக் கனியை பறிந்துவிடுவார். மனதிடம், உடல் திடம், சமயோஜிதம் போன்றவற்றை வைத்து இவர் ஒவ்வொரு முறையும் தனது வெற்றியை உறுதி செய்துவிடுவார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

5 முறை சாம்பியன்

இதுவரை ஃபார்முலா 1 பந்தயங்களில் மைக்கேல் சூமேக்கர் (7 முறை சாம்பியன்), லூயிஸ் ஹாமில்டன் (6 முறை சாம்பியன்) ஆகியோருக்கு அடுத்து ஃபார்முலா 1 சாம்பியன் பட்டங்களை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை ஃபான்ஜியோ (5 முறை சாம்பியன்) வென்ற பெருமைக்குரியவர். இவர் 1951, 54, 55, 56 மற்றும் 57 ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றார். மொத்தம் பங்கு கொண்ட 51 பந்தயங்களில் 29 முறை போடியம் ஏறி அசத்தி உள்ளார். இதேபோன்று, அதிவேகமாக ஒரு சுற்றை கடந்ததிலும் இவர் சாதனை படைத்துளளார். இவ்வாறு பல விஷயங்களில் இவரது சாதனை பட்டியல் நீள்கிறது.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

துணிச்சலானவர்

1950 முதல் 60 வரையிலான ஃபார்முலா 1 பந்தயங்களின் முதல் தசாப்தத்தில் இப்போது உள்ள அளவுக்கு அதீத பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வரைமுறைகள் இல்லை. ஆனால், ஃபான்ஜியோ தனது தீராத வேட்கையாலும், சமயோஜிதம் மற்றும் துணிச்சலால் ஒவ்வொரு முறையும் ரசிகர்களையும், சக போட்டியாளர்களையும் வியக்க வைத்தார். அந்த நேரத்தில் ஃபார்முலா-1 போட்டிகளில் மிக அதிக அளவில் வீரர்கள் உயிரிழப்புகள் நேரிட்டன. அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், மிக அசாத்திய வேகத்தில் காரை செலுத்தி சிலிர்க்க வைப்பார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

போட்டா போட்டி

பந்தய களத்தில் இவரது அணுகுமுறை, யுக்திகளை கண்டு சக வீரர்களும், போட்டியாளர்களும் வியந்திருக்கின்றனர். இதனால், இவரை தன் அணியின் சார்பில் களமிறக்க ஆல்ஃபா ரோமியோ, மஸேரட்டி, மெர்சிடிஸ் பென்ஸ், ஃபெராரி உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டா போட்டி போட்டன. தான் பங்கு கொண்ட ஒவ்வொரு அணிக்காகவும் உலக சாம்பியன் படம் பெற்று தந்த பெருமையும் இவருக்கு உண்டு. மைக்கேல் சூமேக்கர் மற்றும் ஹாமில்டன் ஆகியோரைவிட இது தனித்துவமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

கடத்தப்பட்ட ஃபான்ஜியோ

1958ம் ஆண்டு பிப்ரவரி 23ந் தேதி கியூபாவை சேர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் கீழ் செயல்பட்ட கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஃபான்ஜியோவை கடத்தியது. அப்போது இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

Image Courtesy: Wiki Commons

பிடித்தமான அணி

ஆனால், அவர் தனக்கு மிகவும் பிடித்தமான அணியாக மஸேரட்டியை தெரிவித்துள்ளார். தன் தாய், தந்தையுடன் இருக்க வேண்டியும், தனிப்பட்ட முறையிலும் ஃபார்முலா-1 பந்தயங்களிலிருந்து விலகினார். ஓய்வுக்கு பிறகு மெர்சிடிஸ் பென்ஸ் கார் விற்பனையகத்தை நடத்தியதுடன், தான் ஓட்டி ரேஸ் கார்களை பார்வையாளர்கள் முன்னிலையில் இயக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு சேர்த்தார்.

திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், ஆன்ட்ரியா பேரூட் என்ற பெண்ணுடன் நெருங்கி பழகினார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். 1960ல் ஆன்ட்ரியா ஃபான்ஜியோவைவிட்டு பிரிந்து சென்று விட்டார்.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

Image Courtesy: Agridecumantes/Wiki Commons

இமாலய விலைக்கு ஏலம் போன கார்கள்

இவரது ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டு அவர் ஓட்டிய ஃபெராரி 290எம்எம் கார் சில ஆண்டுகளுக்கு முன் 185 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அந்த அளவுக்கு ஃபான்ஜியோ மீது ஃபார்முலா 1 உலகம் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறது. இவரது போட்டிகளை காண்பவர்கள் சிலிர்த்து போவது நிதர்சனமான உண்மையாக இருந்தது. கடந்த 1995ம் ஆண்டு இவர் சிறுநீரக கோளாறு, காய்ச்சல் காரணமாக தனது 84வது வயதில் அர்ஜென்டினாவில் காலமானார்.

அதேபோன்று, 1954 மற்றும் 55ம் ஆண்டுகளில் ஃபான்ஜியோ பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ்W196R ரேஸ் கார் மாடலானது கடந்த 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூ.220 கோடி விலைக்கு ஏலம் போய் பிரம்மிக்க வைத்தது.

ஃபார்முலா - 1 உலகின் மிகச் சிறந்த வீரர் ஃபான்ஜியோ... சிலிர்க்க வைக்கும் சாதனைகள்!

Image Source: MVSRS/YouTube

டாக்குமென்ட்ரி

இந்த நிலையில், ஃபான்ஜியோவின் சாதனைகளையும், நினைவுகளையும் போற்று விதத்தில், 'A Life Of Speed' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள டாக்குமென்ட்ரி வீடியோ நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. ஃபான்ஜியோ பங்கு கொண்ட பந்தயங்கள், அவர் சந்தித்த சவால்களை அவரே நேரடியாக கூறும் நேர்காணல், அவரை பற்றி ஃபார்முலா-1 உலகின் முக்கிய பிரபலங்கள் தெரிவிக்கும் சுவாரஸ்ய கருத்துக்களுடன் இந்த டாக்குமென்ட்ரி படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

ஃபார்முலா-1 மற்றும் மோட்டார் பந்தய ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான டாக்குமென்ட்ரியாக இதனை கூறலாம். இப்போது ஊரடங்கு அமலில் இருக்கும் இவ்வேளையில், நெட்பிலிக்ஸில் பலரும் மூழ்கி இருக்கின்றனர். அவர்களுக்கு ஃபான்ஜியோ பற்றிய தி லைஃப் ஆஃப் ஸ்பீடு டாக்குமென்ட்ரி மிகச் சிறந்த விஷயங்களையும், உணர்வையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
We are compiled some interesting facts about formula 1 legend Juan Manuel Fangio. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X