80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

சைக்கிள் என்பதே பெரிய விஷயமாக நேரத்தில், 80களில் பைக்குகள் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக இருந்த நேரம் அது. தற்போது உள்ள அளவுக்கு வாகன சந்தை அவ்வளவு பக்குவப்பட்டதாக இருக்கவில்லை. அந்த நேரத்தில், துணிந்து இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட்டில் புதிய பாதை வகுக்க அடித்தளம் போட்டது தமிழகத்தை சேர்ந்த சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் ( இப்போது டிவிஎஸ்).

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

முதல் 100 சிசி பைக்

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவின் முதல் 100 சிசி பைக்கை களமிறக்கியது. IND-SUZUKI AX-100 என்ற பெயரில் வந்த அந்த பைக்தான் இந்தியாவின் முதல் 100 சிசி பைக் மாடல். இது 2 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வாடிக்கையாளர்களை கிறங்கடித்தது. 70 - 80 களுக்கு இடையில் பிறந்தவர்களுக்கு இந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகளை தங்களது கனவாக பார்க்கத் துவங்கினர்.

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

கவர்ச்சி

அலாதியான 2 ஸ்ட்ரோக் எஞ்சினின் சைலென்சர் சப்தம், வசதியான இருக்கை, அச்சமயத்தில் கவரும் வடிவமைப்பு, சரியான விலை ஆகியவை இந்த பைக்கிற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுத் தந்தது.

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

பொக்கிஷம்

இந்த பைக்கை வைத்திருந்த உரிமையாளர்கள் இதனை பொக்கிஷமாக பாதுகாத்ததை பலரையும் வியக்க வைத்தது. சிலர் ஞாயிறு விடுமுறை தினத்தின் பெரும்பாலான நேரத்தை பைக்கை சுத்தம் செய்வதிலேயே கழிப்பதிலேயே நடந்தது. அந்த கால இளைஞர்கள் ஓட்டிய முதல் கியர் பைக் மாடலாகவும் பெரும்பாலானவர்களின் நினைவுகளை மீட்டும் சிறப்புடையது.

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

அறிமுகம்

1984ம் ஆண்டு இந்த்- சுஸுகி ஏஎக்ஸ்100 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜப்பானில் இருந்து பெரும்பாலான உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டது. இதனால், இந்த பைக்கை வாங்கிய பலர் 'ஃபாரின் பைக்' என்று பெருமை கொள்வதிலும் தவறியதில்லை.

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

எஞ்சின்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 98சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎஸ் பவரையும், 9.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மணிக்கு 106.9 கிமீ வேகம் வரை செல்வதற்கான திறனுடன் கிடைத்தது.

MOST READ: பள்ளி குழந்தைகள் உயிருடன் விளையாடிய ஆட்டோ டிரைவர்களுக்கு ஆப்பு... தமிழக போலீஸ் செய்த அதிரடி இதுதான்

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

டிவிஎஸ்- சுஸுகி

சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் டிவிஎஸ் என மாறியது. அதன்பின்னர், டிவிஎஸ்- சுஸுகி ஏஎக்ஸ்-100ஆர் என்ற பெயரில் இந்த பைக் அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, இந்த கூட்டணியில் வந்த டிவிஎஸ் சுப்ரா, ஷோகன், சமுராய், ஷோலின் ஆகியவை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்ற 2 ஸ்ட்ரோக் மாடல்களாக வலம் வந்தன.

MOST READ: மீண்டும் பெருமைப்பட வைத்த டாடா கார்... கோர விபத்தில் இருந்து உரிமையாளரை காயமின்றி காப்பாற்றியது

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

பெயர் மாற்றம்

டிவிஎஸ்- சுஸுகி ஏஎக்ஸ்100 ஆர் பைக் பின்னர் டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் என்ற பெயரில் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில், இரண்டு டிவிஎஸ் மேக்ஸ் 100 ஆர் பைக்குகளை பயன்படுத்திய அனுபவ நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகிறது. இதன் மார்க்கெட்டை யமஹா ஆர்எக்ஸ்100, கவாஸாகி கேபி100 ஆகிய பைக்குகள் பதம் பார்த்தன.

MOST READ: இது சூப்பர் ஐடியாவா இருக்கே... டோல்கேட்களில் மத்திய அரசு புதிய அதிரடி... என்னவென்று தெரியுமா?

80's புள்ளிங்கோவின் கனவு... இந்தியாவின் முதல் 100 சிசி பைக் இதுதான்!

சகாப்தம்

இன்றைக்கும் 2 ஸ்ட்ரோக் பைக்குகள் பலரின் நெஞ்சங்களில் கடந்த கால நினைவுப் பக்கத்தில முக்கிய இடத்தை பதித்து வைத்துள்ளன. அதன்பிறகு, 4 ஸ்ட்ரோக் பைக்குகளின் ஆதிக்கம் மெல்ல தலைத் தூக்கியதால், இந்த பைக் சந்தையிலிருந்து வழக்கொழிந்தது.

Image Source: 1,2,3,4,5,6,7,8

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
If you weren’t around in the 80s and didn’t live the Vinyl days, then here is a quick history lesson on India’s first-ever 100cc motorcycle, and a bonus fact about Mary Hopkin! 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X