ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

நீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு சேர்ப்பதில் ரயில்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இந்த நிலையில், ஒரே நேரத்தில் அதிக பயணிகள் செல்வதற்கு வசதியான ரயில் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காக ரயில்களில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

நீராவி எஞ்சின்கள் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. வெண்புகையை தள்ளிக் கொண்டு பயணிகளை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த நீராவி ரயில் எஞ்சின்கள் போக்குவரத்தில் புதிய அத்தியாயம் படைத்தன.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த நிலையில், ஒரு நீராவி ரயில் எஞ்சினை 45 நிமிடங்கள் இயக்குவதற்கு அரை டன் நிலக்கரி தேவைப்படுமாம். நிலக்கரியை ரயில் எஞ்சின் உலையில் எடுத்து எடுத்து போடுவதற்காக கூடுதல் பணியாளர்களும் தேவைப்பட்டனர்.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

தற்போது டீசல் எஞ்சின்களும், மின்சார ரயில் எஞ்சின்களும் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான டீசல் எஞ்சின்கள் டீசல்- எலக்ட்ரிக் என்ற முறையில்தான் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அதாவது, டீசல் ரயில் எஞ்சின்களில் உண்மையிலேயை ரயிலை இயக்குவது மின் மோட்டார்கள்தான்.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆம், டீசல் எஞ்சின் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அவை மின் மோட்டார்கள் மூலமாக சக்கரங்களை இயக்குகின்றன. எனவே, இவற்றை டீசல்- எலக்ட்ரிக் எஞ்சின் என்று குறிப்பிடுகின்றன. அதாவது, சொந்தமாக மின் உற்பத்தி நிலையத்தின் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்து இயங்கும் திறன் பெற்றவை.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

டீசல் எஞ்சின்களின் சக்தி வெளிப்படுத்தும் திறனைவிட நேரடியாக மின்சாரத்தில் இயங்கும் ரயில் எஞ்சின்களின் சக்தியை வெளிப்படுத்தும் திறன் மிக அதிகம். எனவே, அதிவேக ரயில்களில் மின்சார ரயில் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய நீராவி ரயில் எஞ்சின் பிக் பாய் 4014 என்பதே. 345 டன் எடை கொண்ட இந்த ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 6,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ரயில் எஞ்சின் ரஷ்யாவிடம் உள்ளது. அந்த மின்சார ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 18,000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும்.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

பொதுவாக ரயில் எஞ்சின்கள் மிக அதிக எடை கொண்டதாக தயாரிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், தண்டவாளங்களில் சக்கரங்கள் வழுக்காமல் பெட்டிகளை இழுத்துச் செல்வதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

அதேபோன்று, ரயில் எஞ்சின்கள் அதிகபட்சமான வேகத்தில் திறன் கொண்டவையாக இருந்தாலும், தண்டவாளத்தின் தன்மையை பொறுத்து குறிப்பிட்ட வேகத்திற்கு மிகாமல் இயக்கப்படுகின்றன. மேலும், அதிவேகத்தில் ரயில் எஞ்சின்களை கட்டுப்படுத்துவதும் சிரமம் என்பதால் இடத்தை பொறுத்தும், தண்டவாளத்தின் உறுதித்தன்மையை பொறுத்தும் ரயில் வேகம் நிர்ணயிக்கப்படுகிறது.

 ரயில் எஞ்சின்கள் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

மலைப்பாங்கான இடங்கள், சரிவான நில அமைப்பு கொண்ட பகுதிகள், அதிக பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களை முன்னால் ஒரு எஞ்சினும், பின்னால் இருந்து உந்தித் தள்ளுவதற்கு மற்றொரு எஞ்சினும் பயன்படுத்தப்படும்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Locomotives.
Story first published: Friday, November 18, 2016, 14:25 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos