இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களைத் தான் இந்த செய்தியில் நாம் காணப்போகிறோம்...

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னரே சாலை போக்குவரத்து அதிகமாகவிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே சாலைகளைக் கட்டமைக்கும் பணியை அதிகமாகச் செய்து வந்தனர். சுதந்திர போராட்ட காலத்தில் இந்த சாலை போக்குவரத்து வசதி மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் சாலை போக்குவரத்து குறித்த மிக முக்கியமான தகவல்களைத் தான் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இந்தியாவில் மொத்தம் 5 வகையிலான சாலைகள் மட்டுமே இருக்கிறது. எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, மற்றும் கிராம சாலைகள் என இந்தியாவின் சாலைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் எக்ஸ்பிரஸ் சாலை என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் கடைசியாக இணைக்கப்பட்டது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இதில் தேசிய நெடுஞ்சாலைகள் என்பது ஒரு சாலை இரண்டு துறை முகங்களையோ அல்லது மாநில தலைநகரங்களையோ இணைக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். அதே போல இது செல்லும் வழியில் உள்ள மாவட்ட தலைநகரங்கள், முக்கியமான சாலைகள், ஆகியவற்றை இணைக்கப்படி கட்டமைக்கப்பட வேண்டும் என் திட்டத்துடன் உருவாக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைகளில் மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், மாவட்ட சாலைகளில் மாவட்டத்திற்குள் உள்ள ஊர்களை இணைக்கும் வகையிலும், கிராம சாலைகள் தெருக்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இந்தியாவில் சாலைகளுக்கான வரலாறு 1934ல் துவங்குகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஜெயகர் கமிட்டி உருவாக்கப்பட்டு அந்த கமிட்டி மூலம் இந்தியாவின் சாலைகளுக்கான திட்டம், உருவாக்கப்பட்டது. பின்னர் அது தான் தற்போது மத்திய போக்குவரத்துத் துறையாக உள்ளது. தற்போது இந்தியாவில் மொத்தம் 1,00,475 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளும், 1,48,256 கி.மீ மாநில நெடுஞ்சாலைகளும், 49,83,589 கி.மீ மற்ற சாலைகளும் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த சாலைகளில் தேசிய நெடுஞ்சாலை 2 சதவீதம் தான் இருக்கிறது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

ஆனால் இந்த 2 சதவீத சாலையில்தான் இந்தியாவின் 40 சதவீதமான போக்குவரத்து இருக்கிறது. அதிலும் சரக்கு போக்குவரத்தைக் கணக்கிடும் போது 65 சதவீதமான சரக்கு போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை ரோடுகளிலேயே நடக்கிறது. அதே போலப் பயணிகள் போக்குவரத்தை பொருத்தைவரை 80 சதவீதமான நெடுந்தூர போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகளை நம்பியே இருக்கிறது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

இந்நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து மத்திய அரசு அதில் செல்லும் வாகனங்களிடம் பணம் வசூல் செய்து வருகிறது. அந்த பணத்தை வைத்து தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரித்து வருகிறது. மாநில அரசுகளும் சில சாலைகளில் சுங்கச்சாவடி வைத்திருக்கின்றனர். ஆனால் வசூலில் தேசிய நெடுஞ்சாலைகள் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

நெடுஞ்சாலைகளுக்கு நம்பர் இடுதல்

1956 தேசிய நெடுஞ்சாலை சட்டப்படியே கடந்த 2010ம் ஆண்டுவரை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நம்பர் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இது குழப்பத்தை ஏற்படுத்தியது. எந்த ரோடு எங்குச் செல்கிறது எதை நோக்கிச் செல்கிறது என்பது அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைக்கு நம்பர் வைக்கும் முறை கடந்த 2010ம் ஆண்டு மாற்றப்பட்டது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

அதன்படி இந்தியாவின் கிழக்கும் மற்றும் மேற்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஒன்றைப்படை எண்களையும், தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இரட்டைப் படை எண்களையும் வழங்க அரசு முடிவு செய்தது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

உதாரணமாகச் சென்னையிலிருந்து மும்பை வழியாக டில்லியை இணைக்கும் நெடுஞ்சாலை இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கை இணைப்பதால் இந்த நெடுஞ்சாலை எண் 48 என இரட்டைப்படை எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போலக் கோவை மற்றும் திருச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு ஒற்றப்படை எண்ணான 81 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கிழக்கு மேற்காகச் செல்கிறது. சாலைகள் எந்த திசையில் அமைக்கப்படுகின்றன. என்பதை எளிதாக அடையாளம் காண இவ்வாறான நம்பரிங் முறை பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

அதிகாரம் யாருக்கு?

இதில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், கிராம சாலைகளின் கட்டுப்பாடுகள் எல்லாம் மாநில/யூனியன் பிரதேச அரசிடம் இருக்கிறது. புதிதாக ஒரு சாலை கட்டமைக்கப்பட்டால் அது எந்த பகுதி வழியாகச் செல்ல வேண்டும் எந்த இரண்டு பகுதிகளை இணைக்க வேண்டும் என யார் யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ அவர்களே முடிவு செய்ய முடியும்.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற முடியுமா?

தேசிய நெடுஞ்சாலை சட்டம் 1956-ன்படி மாநிலத்தின் கட்டுப்பாட்டில் எந்த சாலை இருந்தாலும் அதைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றிக்கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மாநில அரசு தேசிய நெடுஞ்சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்க முடியாது. அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை குறிப்பிட்ட சாலையை தன் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டால் அந்த நெடுஞ்சாலையை மாநில அரசுகள் பராமரித்து அதை மாநில நெடுஞ்சாலையாகவோ மாவட்ட சாலையாகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

இந்தியாவில் வெறும் 2 % தான் தேசிய நெடுஞ்சாலை , ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1

அதே போல இந்தியாவில் பல இடங்களில் ஒரே சாலையில் குறிப்பிட்ட பகுதி தேசிய நெடுஞ்சாலையாகவும், குறிப்பிட்ட பகுதி மாநில நெடுஞ்சாலையாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலை பகுதியை மத்திய அரசும், மாநில நெடுஞ்சாலை பகுதியை மாநில அரசும் பராமரிப்பு செய்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting facts about national highways all you need to know
Story first published: Friday, May 27, 2022, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X