Just In
- 10 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 12 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 13 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 15 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு : 11.78 லட்சம் பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர் - இது அவசியம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனசை லேசாக்கும் ஊட்டி மலை ரயில் பயணம்... எவ்ளோ செலவு ஆனாலும் பரவால... வாழ்க்கைல ஒரு தடவையாச்சும் போயிரணும்!
ஊட்டி மலை ரயில் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஊட்டி, அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது. எனவே ஊட்டியை பயண ஆர்வலர்கள் பொக்கிஷம் போல் கருதி வருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஊட்டி மலை பயணம் மனதிற்கு இதம் அளிக்கும் விஷயங்களில் ஒன்று.

ஆனால் சாலை மார்க்கமாக பயணிப்பதை காட்டிலும், ஊட்டிக்கு மலை ரயிலில் சென்றால், இன்னும் மகிழ்ச்சியான அனுபவம் கிடைக்கும். கம்பீரமான ஊட்டி ரயிலில், அழகிய மலைகள் வழியாக பயணிக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஊட்டிக்கு சென்றால் பார்த்து ரசிப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லைதான்.

இருப்பினும் ஊட்டி மலை ரயிலில், மலைகளின் அழகை ரசித்து கொண்டே பயணிக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊட்டி மலை ரயில் பயணம் உண்மையிலேயே நம்மை மயக்கி விடும் தன்மை கொண்டது. பசுமையான மலைகளை ரசித்து கொண்டும், புத்துணர்ச்சியான காற்றை சுவாசித்து கொண்டும் மேற்கொள்ளப்படும் பயணம் நம் மனதை இலகுவாக்கி விடும்.

எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் சென்றாலும் கூட, ஊட்டி மலை ரயில் பயணத்தின்போது மனது லேசாகி விடும். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த மற்றும் பயண ஆர்வலர்கள் கொண்டாடும் ஊட்டி மலை ரயில் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைதான் உங்களுக்காக இந்த செய்தியில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்தியாவின் பாரம்பரிய ரயில்!
நீலகிரி மவுன்டெயின் ரயில்வே (Nilgiri Mountain Railway), இந்தியாவின் பழமையான ரயில்வேக்களில் ஒன்றாகும். இந்த ரயில்வேயை கட்டமைக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் கடந்த 1854ம் ஆண்டு தொடங்கினர். வரலாற்று சிறப்புமிக்க ஊட்டி மலை ரயில், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக (UNESCO World Heritage Site) அறிவிக்கப்பட்டது.

உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில், டார்ஜிலிங்கில் (Darjeeling) உள்ள ஹிமாலயன் ரயில்வேயும் (Himalayan Railway) சேர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயமாகும். ஊட்டி மலை ரயிலின் நீண்ட நெடிய வரலாற்று பின்னணியும், அதனை பயண ஆர்வலர்கள் நேசிப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மிதமான வேகத்தில் சுகமான பயணம்!
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. இது 46 கிலோ மீட்டர் பயணமாகும். இதில் மேட்டுப்பாளையம் கடல் மட்டத்தில் இருந்து 330 மீட்டர் மேலே அமைந்துள்ளது. அதே நேரத்தில் ஊட்டி கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் மேலே அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமாக ஊட்டி இருக்கிறது. இது உதகமண்டலம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு மட்டுமின்றி, மிகவும் பிரபலமான ஹனிமூன் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் ஊட்டி திகழ்கிறது. இதன் காரணமாகவே ஊட்டி மலை ரயிலில் இருக்கைகள் எப்போதும் காலியாக இருப்பதில்லை. ஊட்டி மலை ரயிலில் பயணிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளி நாடுகளில் இருந்தும் கூட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஊட்டி மலை ரயில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 10.4 கிலோ மீட்டர்கள் மட்டுமே பயணிக்கும். எனவே இந்தியாவில் மெதுவாக செல்லும் ரயில்களில் ஒன்றாக ஊட்டி மலை ரயில் கருதப்படுகிறது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான 46 கிலோ மீட்டர் தொலைவை கடப்பதற்கு இந்த மலை ரயில் சுமார் 4.30 மணி நேரத்தை எடுத்து கொள்ளும்.

இந்த வேகம் மெதுவானது என்றாலும் கூட, பயணத்தின்போது ரசிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த மலை ரயில் தனது பயணத்தின்போது 16 சுரங்கங்களையும், 250 பாலங்களையும், 208 வளைவுகளையும் கடந்து செல்லும். இதையெல்லாம் கேட்கும்போதே ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது அல்லவா?

முக்கியமான ரயில் நிலையங்கள்!
மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் ஊட்டி செல்லும் வழியில், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி மற்றும் லவ்டேல் போன்ற ரயில் நிலையங்கள் இருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களும் இயற்கை அழகு கொஞ்சும் வகையில் அமைந்துள்ளன. எனவே ஒட்டுமொத்த பயணமும் ரசிக்க கூடியதாக இருக்கும்.

இந்தியாவில் இயங்கி வரும் ஒவ்வொரு ரயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இதில் ஒரு சில ரயில்களுக்கு மட்டும்தான் வாழ்க்கையில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டிய ரயில்களின் பட்டியலில் இடம் கிடைக்கும். இந்த பட்டியலில் ஊட்டி மலை ரயிலுக்கு முக்கியமான இடம் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லை.
-
அதிக தூரம் பயணிக்கும் ஐக்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்! நம்ம டிவிஎஸ் தயாரிப்பு இருக்க மத்தது எதுக்குங்க!
-
அதிக ரேஞ்ச் உடன்... டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட்டா? டீசர் வீடியோ வெளியீடு!!
-
வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!