பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

பப்ஜி மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் இடையே ஒரு சில தொடர்புகள் உள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

கொரோனா வைரஸ் பிரச்னைக்கு மத்தியிலும் தமிழ்நாடு பரபரப்பாக உச்சரித்து கொண்டிருக்கும் ஒரு பெயர் பப்ஜி மதன். பெண்களிடம் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்துள்ளன. காவல் துறையினர் பப்ஜி மதனை வலை வீசி தேடி வந்த நிலையில், அவர் தர்மபுரியில் பிடிபட்டுள்ளார்.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

முன்னதாக பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவையும் காவல் துறையினர் கைது செய்திருந்தனர். தற்போது கணவன், மனைவி இருவரும் கைதாகியுள்ளனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 ஆடி கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

பப்ஜி மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆடி ஆர்8 (Audi R8) மற்றும் ஆடி ஏ6 (Audi A6) கார்கள் ஆகும். பப்ஜி மதனின் ஆடி ஆர்8 கார் சிகப்பு வண்ணத்திலும், ஆடி ஏ6 கார் கருப்பு வண்ணத்திலும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன. இதில், ஆடி ஆர்8 மாடல், ஸ்போர்ட்ஸ் கார் வகையை சேர்ந்தது ஆகும். ஆடி நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆர்8 காரை உற்பத்தி செய்து வருகிறது.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

மறுபக்கம் ஏ6 கார், ஆடி நிறுவனம் மிக நீண்ட காலமாக விற்பனை செய்து வரும் கார்களில் ஒன்றாகும். இது செடான் ரகத்தை சேர்ந்த கார். இந்த காரின் உற்பத்தி கடந்த 1994ம் ஆண்டு தொடங்கியது. 27 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட தற்போதும் ஆடி ஏ6 கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பப்ஜி மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கார்களுமே பிரபலமானவை என்பது உங்களுக்கு தற்போது புரிந்திருக்கும்.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

போட்டோக்களை வைத்து பார்க்கையில், ஆடி ஆர்8 மற்றும் ஆடி ஏ6 ஆகிய இரண்டு கார்களுமே 2011ம் ஆண்டு மாடலை போல் தெரிகிறது. ஆனால் மாடல் வருடத்தை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை. பப்ஜி மதன் வைத்திருந்த 2 ஆடி கார்களுமே இந்தியாவில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக ஆடி ஆர்8, ஆடி ஏ6 ஆகிய 2 கார்களுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கும் சில தொடர்புகள் உள்ளன.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

ஆர்8-தான் விராட் கோஹ்லி முதன் முதலில் வாங்கிய ஆடி நிறுவனத்தின் கார் என கூறப்படுகிறது. ஆடி ஆர்8 காரை விராட் கோஹ்லி கடந்த 2012ம் ஆண்டு வாங்கினார். அது பழைய மாடல் ஆகும். ஆனால் புதிய ஆடி ஆர்8 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, பழைய மாடலை விராட் கோஹ்லி விற்பனை செய்து விட்டு புதிய மாடலை வாங்கி கொண்டார்.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி மிக நீண்ட காலமாக ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார். பப்ஜி மதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மற்றொரு காரான ஆடி ஏ6-ன் புதிய மாடல் இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பப்ஜி மதனின் ஆடி கார்களுக்கும், விராட் கோஹ்லிக்கும் உள்ள தொடர்பு... தோண்ட தோண்ட வெளிவரும் ரகசியங்கள்...

அப்போது விராட் கோஹ்லிதான் அந்த காரை அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்யும் கார்கள் அனைத்தையும் விராட் கோஹ்லி கிட்டத்தட்ட வாங்கி விடுவார். அவரை போலவே பப்ஜி மதனும் ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts About 'Toxic' YouTuber And PUBG Gamer Madhan's Audi Cars. Read in Tamil
Story first published: Friday, June 18, 2021, 22:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X