அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

அணுகுண்டு வீச்சு மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட பேராபத்து சமயங்களில் அமெரிக்க அதிபரை காப்பதற்கு விசேஷ விமானம் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மனிதனின் நடவடிக்கைகளால் உலக அழிவை குறிப்பிடப்படும்

உலக நாட்டாமையாக பாவித்து வரும் அமெரிக்காவிற்கு ரஷ்யா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பனிப்போர் நீடித்து வருகிறது. அதேபோன்று, தனது ராணுவ வல்லமையை பயன்படுத்தி, ராணுவ பலத்தில் பின்தங்கிய செல்வ வளம் மிக்க நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைக்க அமெரிக்க அதிபர்கள் ஆர்வம் காட்டுவதால், அவர்களுக்கு எப்போதுமே தீவிரவாத அச்சுறுத்தலும் உள்ளது.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இதனால், அமெரிக்காவின் அதிபராக இருப்பவருக்கு எப்போதுமே உலகின் உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கையும், பயணங்களும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கிறது.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இருப்பவருக்கு பல்வேறு ரகசிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ராணுவ விமானங்களும், வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் மற்றும் கார் உள்ளிட்டவை குறித்து நீங்கள் அறிந்ததுதான்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

அதேபோன்று, அணுகுண்டு வீச்சு மற்றும் இயற்கை பேரழிவு உள்ளிட்ட பேராபத்து சமயங்களில் அமெரிக்க அதிபரை காப்பதற்கு விசேஷ விமானம் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மனிதனின் நடவடிக்கைகளால் உலக அழிவை குறிப்பிடப்படும் 'டூம்ஸ்டே' என்ற பேராபத்து நாளின்போது அமெரிக்க அதிபர் தப்புவதற்கான ரகசிய விமானங்கள் பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் போன்றே, இதனை பறக்கும் பெண்டகன் என்று குறிப்பிடப்படுகிறது. பேரழிவு மற்றும் போர் சமயங்களில் அமெரிக்க அதிபர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இந்த விமானத்தின் மூலமாக அவர் தப்பிக்க வழி உண்டு.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானத்தில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பெண்டகன் போலவே, அனைத்து கட்டுப்பாட்டு மற்றும் தொலைதொடர்பு வசதிகள் உண்டு. மூன்றடுக்குகள் கொண்ட இந்த விமானத்தில் பறந்து கொண்ட அமெரிக்க ராணுவத்தை கட்டுப்படுத்த முடியும்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

E-4B என்ற சங்கேத பெயரில் அழைக்கப்படும் இந்த விமானங்கள் அழைக்கப்படுகின்றன. போயிங் 747-200 விமானத்தின் உட்புறத்தை முழுவதுமாக ராணுவ கட்டுப்பாட்டு மையம் போல பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் மாற்றி இருக்கின்றனர். மொத்தம் நான்கு E-4B விமானங்கள் கட்டப்பட்டன.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானங்கள் அனைத்தும் ஆண்டின் 365 நாட்களும், 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும். மேலும், அமெரிக்க அதிபர் சில நிமிடங்களில் ஏறுவதற்கு வசதியாக இருக்கும் வகையில் ஒரு விமானத்தின் எஞ்சின் அணைக்கப்படாமல் 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

ஆன்ட்ரூ விமான படைதளத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த விமானத்தின் மூலமாக அமெரிக்க அதிபர் வெறும் 15 நிமிடங்களில் புறப்பட்டுவிட முடியும். பேராபத்து சமயங்களில் அமெரிக்க அதிபர், துணை அதிபர் மற்றும் ராணுவ தளபதிகளுடன் புறப்படுவதற்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண சமயங்களில் இந்த விமானங்கள் கண்காணிப்பு பணியிலும் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

அணுகுண்டு வீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை சமாளிக்கும் விதத்தில் இந்த விமானத்தில் தடுப்பு கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், விமானத்தின் தகவல் பரிமாற்ற சேவை மற்றும் தொலைதொடர்புக்கு பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்கள் அணுகதிர்வீச்சு மூலமாக பாதிக்கப்படாத வகையில் விசேஷ பூச்சும் இந்த விமானத்தில் செய்யப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானங்கள் சாதாரண போயிங் 747-200 விமானங்களைவிட 60 கிமீ கூடுதல் வேகத்தில் பறக்கும் வல்லமை வாய்ந்தது. அதிகபட்சமாக மணிக்கு 990 கிமீ வேகம் வரை பறக்கும். இந்த விமானத்தில் 4 ஜெனரல் எலெக்ட்ரிக் CF-6-50E2 டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எஞ்சினும் 52,500 பவுண்ட் த்ரஸ்ட் விசையை அளிக்கும்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விசேஷ விமானத்தில் 1.85 லட்சம் கிலோ கொள்திறன் கொண்ட எரிபொருள் டேங்க் உள்ளது. கிட்டத்தட்ட 35.4 மணிநேரம் வரை பறக்கும் வல்லமை பொருந்தியது. வானிலேயே எரிபொருள் நிரப்ப முடியும். ஒரு வாரம் வரை வானிலேயே பறக்க வைக்கும் வாய்ப்பும் உண்டு.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானத்தில் ரகசியம் என்று குறிப்பிடும்படியான அம்சம் என்ன தெரியுமா? தரையில் இருப்பவர்களுடன் மட்டுமின்றி, இந்த விமானம் பறக்கும்போது பின்புறம் வெளிப்படும் 8 கிமீ நீளத்திற்கான கேபிள் மூலமாக அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களையும் தொடர்பு கொள்ள முடியும்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த பிரம்மாண்டமான ரகசிய விமானத்தை இயக்குவதற்கும், ராணுவ கட்டுப்பாட்டு அறை கவனிப்பதற்கும் 112 பேர் பணிபுரிகின்றனர். அதிகம் பேர் பணிபுரியும் ராணுவ கட்டுப்பாட்டு விமானமாகவும் இதனை குறிப்பிடலாம்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

அணுகுண்டு வீசப்பட்டால் இந்த விமானத்தின் கதவுகள், ஜன்னல்களில் விசேஷ தடுப்பு உடனடியாக செய்யப்படும். அதுமட்டுமின்றி, விசேஷ காற்று சுத்திகரிப்பு கருவி மூலமாக விமானத்திற்குள் போதுமான அளவு ஆக்சிஜன் சப்ளையாகும். மேலும், இந்த விமானத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகள் அதிக வெப்பத்தில் இருப்பதால், மிக சக்திவாய்ந்த குளிர்சாதன வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானத்தில் இன்று வரை அனலாக் அடிப்படையிலான கருவிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படவில்லை. சைபர் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக இன்று வரை மேம்படுத்தப்படவில்லை.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

001ல் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் உள்ளிட்ட இடங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்தபோது, இந்த விமானங்கள் உடனடியாக கட்டுப்பாட்டு எடுத்துக் கொண்டு செயல்பட்டது. அதேபோன்று, அண்மையில் வீசிய பெரும் சூறாவளியில் சிக்கி இரண்டு E-4B விமானங்கள் சேதமடைந்தன. எனினும், அவற்றில் பெரிய பாதிப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

மேலும், அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் விமானத்தை இந்த விமானம் பின்தொடர்ந்து செல்லும். உலகின் எந்த மூலைக்கு அமெரிக்க அதிபர் சென்றாலும், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்துடன் இந்த விமானமும் நிழல் போல பின்தொடர்ந்து பாதுகாப்புக்காக செல்லும்.

அமெரிக்க அதிபரை நிழல்போல பின்தொடரும் 'டூம்ஸ்டே' விமானத்தின் ரகசியங்கள்!

இந்த விமானம் ஒவ்வொன்றும் 224 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணிநேரம் இயக்குவதற்கு 1.60 லட்சம் டாலர்கள் செலவிடப்படுகிறது.

Source: Horizontal Rain

Most Read Articles
மேலும்... #ராணுவம்
English summary
Interesting Facts About US President Doomsday Plane.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X