நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

வாகனங்களின் நம்பர் பிளேட்கள் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

புதிய வாகனங்களை பதிவு செய்யாமல் சாலையில் இயக்க முடியாது. வாகனங்கள் அனைத்திற்கும் நம்பர் பிளேட்கள் கட்டாயம். வாகனத்தின் உரிமையாளரை கண்டறிய நம்பர் பிளேட்கள் உதவி செய்கின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் எந்தவொரு நாடும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை பொது சாலைகளில் இயக்க அனுமதிப்பதில்லை.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

நம்பர் பிளேட்கள் அந்த அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவை பொறுத்தவரை, நம்பர் பிளேட்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே இந்த விதிமுறைகள் வேறுபடுகின்றன. ஆனால் அந்த விதிமுறைகளை பற்றி எல்லாம் நாம் இந்த செய்தியில் பார்க்க போவதில்லை.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

நம்பர் பிளேட்கள் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். நம்பர் பிளேட்களை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு எது? நம்பர் பிளேட்கள் எப்போது அறிமுகம் செய்யப்பட்டன? என்பது போன்ற உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த செய்தி விடை அளிக்கும்.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

உலகிலேயே நம்பர் பிளேட்களை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ். கடந்த 1893ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் நம்பர் பிளேட்கள் நடைமுறைக்கு வந்தன. இதற்காக அவசர சட்டம் ஒன்றினை பிரான்ஸ் இயற்றியது. பாரிஸ் போலீஸ் அவசர சட்டம் எனும் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பிரான்ஸில் நம்பர் பிளேட்கள் நடைமுறைக்கு வந்தன.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

எனவே உலகில் கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் பிளேட்கள் நடைமுறையில் உள்ளன. பிரான்ஸை தொடர்ந்து, நெதர்லாந்து நாட்டில் கடந்த 1898ம் ஆண்டு நம்பர் பிளேட்கள் நடைமுறைக்கு வந்தன. இதன்பின் அமெரிக்காவிலும் நம்பர் பிளேட்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அமெரிக்காவில் கடந்த 1901ம் ஆண்டுதான் முதன் முதலாக நம்பர் பிளேட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

அனைத்து வாகனங்களுக்கும் நம்பர் பிளேட் கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பித்த அமெரிக்காவின் முதல் மாகாணம் என்ற பெருமையை நியூயார்க் பெற்றது. இந்த நம்பர் பிளேட்களை அந்தந்த வாகனங்களின் உரிமையாளர்களே உருவாக்கி கொண்டனர். வாகனத்தின் பின்னால் உரிமையாளருடைய இன்ஷியல் தெளிவாக தெரிய வேண்டும் என்பது மட்டுமே அப்போதைய தேவையாக இருந்தது.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

இதன்பின்பு அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்திலும், கடந்த 1903ம் ஆண்டு முதல் நம்பர் பிளேட்கள் நடைமுறைக்கு வந்தன. இந்த நம்பர் பிளேட்கள் எண்களை கொண்டவையாக இருந்தன. 1 என்ற எண் முதல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் லோவா மாகாணத்தில், கடந்த 1928ம் ஆண்டு உருளைகிழங்கு கிராபிக்சுடன் கூடிய நம்பர் பிளேட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

நம்பர் பிளேட் பற்றிய இந்த சூப்பர் மேட்டரை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க... என்னனு தெரியுமா?

நம்பர் பிளேட்டில் இடம்பெற்ற முதல் கிராபிக்ஸ் உருளை கிழங்குதான். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயங்களில், சோயாபீன் சார்ந்த ஃபைபர்போர்டால் நம்பர் பிளேட்கள் உருவாக்கப்பட்டன. ஏனெனில் போர் நடைபெற்று கொண்டிருந்ததால், உலோகத்தின் பயன்பாடு அதிகமாக இருந்தது. எனவே உலோகத்தின் பயன்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு நம்பர் பிளேட்கள் உருவாக்கப்பட்டன.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts About Vehicle Number Plates. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X