இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

எத்தனை பெரிய வீடுகள் வைத்திருந்தாலும், யாரும் இல்லாத அமைதியான இடத்தில் ஒரு சின்ன வீடு இருந்தால், அது சுகமே தனிதான், இல்லையா? அதுபோன்ற ஒரு ஐடியாவில்தான் இந்த சின்ன வீடு உருவாகி உள்ளது. இந்த வீடு சுகம் மிக அலாதியாக இருக்கும் என்பதை இந்த செய்தியை நிறைவு செய்யும்போது உங்களுக்கு கிடைக்கும்.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

மேலை நாடுகளில் கேம்பர் எனப்படும் வீடு போன்ற வசதிகள் கொண்ட நடமாடும் இல்லம் பலரும் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். அவர்கள் பொதுவாகவே பயண விரும்பிகளாகவும் இருக்கின்றனர். தங்களது ஓய்வு நேரங்களை பயணத்தில் கழிப்பதிலும், புதிய இடங்களுக்கும் செல்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

இதுபோன்ற பயணங்களுக்கு பணக்காரர்கள் வீடு போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் நடமாடும் இல்லங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இந்த நடமாடும் இல்லம் என்பது கனவு பொருளாகவே இருக்கிறது.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

அதுபோன்றவர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகளுடன் அளவில் மிக அடக்கமான இந்த நடமாடும் சின்ன வீடு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சோனா போலோவோ என்ற பெண்மணியின் எண்ணத்தில் உதித்த இந்த சின்ன வீடு கான்செப்ட் ஒரு டிசைன் போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், கிரவுட் ஃபண்டிங் செய்து இதனை தயாரிப்புக்கு உகந்ததாக மாற்றி இருக்கின்றனர்.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

முட்டை வடிவில் இருக்கும் இந்த நடமாடும் சின்ன வீடு ஈக்கோகேப்சூல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கார் மூலமாக டோ செய்து இழுத்து செல்ல முடியும். சிறிய இடத்திலும், குறுகலான சாலைகளிலும் கூட எளிதாக கொண்டு செல்ல முடியும். இந்த சின்ன வீடு கூரையில் இருக்கும் சோலார் பேனல்கள் மூலமாகவும், காற்றாலை விசிறி மூலமாகவும் மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு போதுமான மின் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே, இது முழுமையான பசுமை வீடாகவும் இருக்கிறது.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

இந்த வீட்டில் உட்புறத்தில் இரண்டு பேர் தங்குவதற்கான படுக்கையறை, சோபோ செட், உடைகள் மற்றும் உடைமைகளை வைப்பதற்கான அலமாரிகள், மின் அடுப்பு, ரெஸ்ட் ரூம் உள்ளிட்ட ஒரு வீட்டில் தங்குவோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டு உள்ளது.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

வெளியில் அமர்ந்து கொள்வதற்கான மடக்கு நாற்காலி மற்றும் பெரிய குடையும் கூட இந்த நடமாடும் இல்லத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில், இந்த நடமாடும் இல்லம் வெளியூர் பயணங்களின்போது சுகானுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

மொத்தமாக 50 யூனிட்டுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்வதற்கு திட்டமிட்டார் சோனா. மேலும், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்தார். ஆனால், அதிக முதலீடுகள் கிடைத்தால் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து உலகின் பிற நாடுகளுக்கும் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். விலையையும் குறைக்க முடியும் என்கிறார் சோனா.

இந்த 'சின்ன வீடு' தரும் சுகம் இருக்கே... அப்பப்பா?!

இந்த சின்ன வீட்டிற்கு 91,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,200 டாலர் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால் மட்டுமே தயாரித்து டெலிவிரி செய்யப்படும். சோனா வடிவமைத்த இந்த நடமாடும் இல்லத்தை நைஸ் அண்ட் வைஸ் நிறுவனம் ஸ்டூடியோ மூலமாக தயாரிக்கப்பட்டு டெலிவிரி கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலும் இதுபோன்ற நடமாடும் இல்லங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆனால், அதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுவதால், பெரும் பணக்காரர்களுக்கானதாக இருக்கிறது. இருப்பினும், அதிக அளவில் உற்பத்தி செய்து இந்தியாவில் சரியான விலையில் கொடுத்தால் நிச்சயம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here we compiled some interesting features of Ecocapsule mobile home. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X