சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்த நபர், விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஏழையாக இருந்து ஏராளமானோர் பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் ராகுல் தனேஜா. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சைக்கிள் மெக்கானிக்காக இருந்தார். ஆனால் 16 வருடங்கள் கடுமையாக உழைத்த பிறகு, அவர் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார். ராகுல் தனேஜா ஒரு சமயத்தில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்தார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஆனால் தற்போது சொகுசு கார்களை வைத்திருப்பதுடன், அவற்றின் பதிவு எண்ணுக்கு பல லட்ச ரூபாயை செலவிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள ஒரு வறுமையான குடும்பத்தில்தான் ராகுல் தனேஜா பிறந்தார். மெக்கானிக்காக தொழில் செய்து வந்த தந்தைக்கு ராகுல் தனேஜா ஆரம்பத்தில் உதவி செய்து வந்தார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

சைக்கிள்களுக்கு பஞ்சர் ஓட்டுவதுதான் அப்போது அவரது வேலை. ஆனால் வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என விரும்பியதால், ராகுல் தனேஜா வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் தாபா ஒன்றில் சுமார் 2 ஆண்டுகள் அவர் வேலை செய்தார். மேலும் அந்தந்த நேரத்திற்கு ஏற்ற தொழில்களையும் ராகுல் தனேஜா செய்து வந்தார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

அதாவது தீபாவளியின்போது பட்டாசுகளை விற்பனை செய்வது, ஹோலியின்போது வண்ண பொடிகளை விற்பனை செய்வது மற்றும் மகர சங்கராந்தியின்போது பட்டங்களை விற்பனை செய்துவது என பல்வேறு தொழில்களை ராகுல் தனேஜா செய்து வந்தார். இதுதவிர ராகுல் தனேஜா மாடலிங்கும் கூட செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

மிஸ்டர் ஜெய்ப்பூர் மற்றும் மிஸ்டர் ராஜஸ்தான் ஆகிய பட்டங்களை ராகுல் தனேஜா வென்றுள்ளார். இதற்கு இடையே அவர் ஆட்டோவும் ஓட்டியுள்ளார். மேலும் தினசரி செய்தி தாள்களையும் அவர் வினியோகம் செய்துள்ளார். இவ்வாறான கடின உழைப்பின் மூலம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக்கும் அளவிற்கு ராகுல் தனேஜா முன்னேறினார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ராகுல் தனேஜா வாங்கிய முதல் சொகுசு கார் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series) ஆகும். செடான் ரக காரான இதனை ராகுல் தனேஜா கடந்த 2011ம் ஆண்டு வாங்கினார். ஆனால் இந்த காரை வாங்கியதால் மட்டும் ராகுல் தனேஜா திருப்தியடைந்து விடவில்லை. RJ 14 CP 0001 என்ற ஃபேன்ஸியான பதிவு எண்ணையும் இந்த காருக்கு வாங்கிய பிறகுதான் ராகுல் தனேஜா திருப்தியடைந்தார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரை ராகுல் தனேஜா இன்னமும் வைத்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜாகுவார் எக்ஸ்ஜே எல் (Jaguar XJ L) காரை ராகுல் தனேஜா வாங்கினார். இது அவரது கனவு கார் ஆகும். கருப்பு நிறத்தில் அவர் இந்த காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்குவதற்காக ராகுல் தனேஜா 1.50 கோடி ரூபாயை செலவிட்டுள்ளார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஆனால் இந்த காரை வாங்கிய பிறகும் கூட ராகுல் தனேஜா டெலிவரி எடுக்கவில்லை. ஏனெனில் இந்த காரின் பதிவு எண்ணும் தனக்கு விருப்பமானதாக இருக்க வேண்டும் என்பதால், அவர் காத்திருக்க முடிவு செய்தார். சுமார் ஒரு மாதம் காத்திருந்து தனக்கு பிடித்த 0001 என்ற பதிவு எண்ணை ராகுல் தனேஜா வாங்கினார். அவருடைய ஜாகுவார் எக்ஸஜே எல் காரின் பதிவு எண் RJ 45 CG 0001 ஆகும்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ராகுல் தனேஜாவின் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே எல் ஆகிய இரண்டு கார்களுமே 0001 என்ற பதிவு எண்ணை கொண்டுள்ளன. இதில், ஜாகுவார் எக்ஸ்ஜே எல் காரின் பதிவு எண்ணுக்கு ராகுல் தனேஜா சுமார் 16 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார். அதே நேரம் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் பதிவு எண்ணுக்காக ராகுல் தனேஜா சுமார் 10 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளார்.

சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டி கொண்டிருந்தவரிடம் விலை உயர்ந்த சொகுசு கார்கள்... எப்படினு தெரிஞ்சா நம்ப மாட்டீங்க...

ஆக மொத்தம் இந்த இரண்டு கார்களின் பதிவு எண்ணுக்காக மட்டும் ராகுல் தனேஜாவிற்கு சுமார் 26 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. சைக்கிள் மெக்கானிக்காக இருந்து இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது சாதாரண விஷயம் அல்ல. வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் வைத்து கொண்டு முன்னேறி விட முடியாது. இதற்கு மிக கடுமையான உழைப்பும் தேவை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Journey: Madhya Pradesh Cycle Mechanic Now Owns BMW 5-Series, Jaguar XJ L. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X