'அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

By Saravana Rajan

நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் குண்டு துளைக்காத கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்துவது குறித்த அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில், அஞ்சாநெஞ்சனாக கருதப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புல்லட் புரூஃப் ரயிலில் சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டது உலக அளவில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

வடகொரிய அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதலில் யூகத் தகவலாக கருதப்பட்டது. ஆனால், தற்போது அவரது பயணம் மேற்கொண்டது உறுதியாகி இருக்கிறது. வடகொரியாவிலிருந்து தனி ரயில் மூலமாக சீனா வந்துள்ளார்.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் உயிருக்கு உத்தரவாத இல்லாத சூழலில் வாழ்ந்து வரும் கிம் ஜாங் உன்னின் சீன பயணம் மிக மிக ரகசியகமாக வைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் போன்று பல்வேறு வசதிகளை இந்த ரயில் பெற்றிருக்கிறது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக விசேஷ பாதுகாப்பு வசதிகளுடன் 90 விசேஷ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இவை மூன்று ரயில்களாக பயன்படுத்த முடியும். இந்த ரயில்கள் மிக ரகசியமான இடத்தில் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை வெளியில் காண்பது அரிது. வெளிநாட்டு உளவுத் துறையால் கூட மோப்பம் பிடிக்க முடியாது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

அதுபோன்ற, விசேஷ ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயிலில்தான் கிங் ஜாங் உன் அண்மையில் சீனாவுக்கு வந்துள்ளார். இந்த ரயில் அடர் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் கலவை பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இந்த ரயில் பெட்டிகள் குண்டு துளைக்காத வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் சேட்டிலைட் போன் உள்ளிட்ட அதிநவீன தொடர்பு வசதிகள் உள்ளன.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

ஆயுத தாக்குதல்களின்போது பயணிக்கும் தலைவர்களை காப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அதேபோன்று, ரசாயனத் தாக்குதல்களிலிருந்து பாதிப்பு ஏற்படாத அம்சங்களை பெற்றிருப்பதுடன் ரயில் பெட்டியின் உள்புறத்தில் சுத்திகரிக்கப்பட்ட காற்றை பெறும் வசதியும் உண்டு.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இந்த ரயில் அதிகபட்சமாகக மணிக்கு 61 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. பயணத்தின்போது வழியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவசரநிலை ஏற்பட்டாலும், ரயிலில் இருக்கும் கவச வாகனங்கள் மூலமாக தப்பிப்பதற்கான வழிமுறைகளும் உண்டு.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இந்த ரயிலின் ஒருப் பெட்டியில் சிறிய ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. கவச வாகனங்களை பயன்படுத்த இயலாத சூழலில் இந்த ஹெலிகாப்டர் மூலமாக தலைவர்கள் தப்பிக்க இயலும்.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

ரயில் புறப்படுவதற்கு முன்பாக பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சோதனைகளுக்கு பின்னரே பயணத்தை துவங்கும். அதேபோன்று, ரயில் செல்லும் வழித்தடத்திலும் கண்காணிப்பு மற்றும் தண்டவாளத்தில் மிக தீவிரமான சோதனைகள் செய்யப்படுகின்றன.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

சர்வாதிகாரியாக செயல்படும் கிங் ஜாங் உன் சொகுசு வாழ்க்கை பிரியர். அவர் பயன்படுத்தும் கார்கள், விமானங்கள் மற்றும் உல்லாச படகுகள் பல்வேறு சொகுசு அம்சங்களை பெற்றிருக்கின்றன. அதேபோன்று, அவர் பயணித்த இந்த ரயிலும் படுக்கை வசதி,ரெஸ்ட் ரூம், சமையலறை உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக இருந்துள்ளது.ட

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

ரயில் பெட்டி முழுவதும் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த ரயில் பெட்டியில் கிம் ஜாங் உன் மிக நெருக்கமானவர்கள் பயணித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அந்த ரயில் பெட்டியில் உயர் கண்காணிப்பு வளையத்தில் இருந்துள்ளது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இந்த ரயில் 1,100 கிமீ தூரம் பயணித்ததாக செய்திகள் கூறுகின்றன. வழக்கமாக இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் 14 மணிநேரத்தில் செல்கின்றன. எனவே, கிம் ஜாங் உன் பயணித்த ரயில் பாதுகாப்பு காரணங்களுக்காக மிதமான வேகத்தில் இயக்கப்படுவதால் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

அடர் பச்சை மற்றும் மஞ்சள் வண்ணத்திலான அந்த ரயில் பீஜிங் நகருக்கு வந்து அடைந்தபோது, அந்த ரயில் நிலையத்தில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ரயில் நிலையத்திற்குள் பயணிகள் உள்பட வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

ரயில் நிலையத்திலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 புல்மேன் லிமோசின் ரக கார் மூலமாக அவர் வெளிநாட்டு தலைவர்கள் வழக்கமாக தங்கும் மாளிகைக்கு சென்று தங்கியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு வடகொரிய அதிபராக பதவியேற்றதற்கு பின் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இது குறிப்பிடப்படுகிறது.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

இந்த நிலையில், அவர் பயன்படுத்திய ரயில்தான் மீடியா கவனத்தை ஈர்த்துள்ளது. எனினும், கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங் இல் இந்த ரயிலை பலமுறை பயன்படுத்தி இருக்கிறார். 1994 முதல் 2011ம் ஆண்டு வரை சீனா மற்றும் ரஷ்ய பயணங்களுக்கு இதே ரயிலை பயன்படுத்தினார்.

அஞ்சா நெஞ்சன்' கிம் ஜாங் உன் பயன்படுத்திய புல்லட் புரூஃப் ரயில் பற்றிய தகவல்கள்!

மேலும், பிளேபாய் போல வலம் வந்த கிம் ஜாங் இல் தனது பெரும்பாலும் விமானத்தில் பறப்பதை விரும்பியதில்லை. ரயிலில் பயணிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதேபோன்று, அவரது மகன் கிம் ஜாங் உன்னும் ரயிலில் பயணித்து சீனா வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Via-nytimes

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயன்படுத்திய ரயில் குறித்த பல தகவல்களை பார்த்தீர்கள். அவர் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார்கள், தனி விமானம் மற்றும் உல்லாச படகு குறித்த தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

ஹைட்ரஜன் குண்டு மூலமாக, மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு, இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல் மறைவிற்கு பிறகு அரியணை ஏறியவர். தந்தையைப் போலவே கிம் ஜாங் உன்னும் சொகுசு வாழ்க்கைக்கு பெயர் பெற்றவராக விளங்குகிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

அவரிடம் இருக்கும் பிரம்மாண்ட மோட்டார் உலகத்தை பார்த்தாலே நாட்டை பற்றி கவலை கொள்ளாத அவரது மனநிலை புரியும். கிம் ஜாங் உன் கராஜில் 100க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. பெரும்பாலான கார்கள் மெர்சிடிஸ் பென்ஸ் பிராண்டு சொகுசு கார்களாகவே வாங்கி குவித்துள்ளனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

2009ம் ஆண்டில் கிம் ஜாங் உன் தந்தை இரண்டு குண்டு துளைக்காத மெர்சிடிஸ் பென்ஸ் புல்மேன் கார்டு லிமோசின் கார்களை வாங்கினார். 21 அடி நீளம் கொண்ட இந்த கார்களையே அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கிம் ஜாங் உன் இந்த கார்களை பயன்படுத்தி வருகிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

இந்த இரண்டு கார்களும் 3.1 மில்லியன் டாலர் மதிப்பில்[ ரூ.20 கோடி] மதிப்பில் வாங்கப்பட்டன. மேலும், இந்த கார்கள் வடகொரியாவின் நட்பு நாடாக விளங்கும் சீனா மூலமாக கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு கார்களிலுமே சீன பதிவு எண்கள் கொண்டவை.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

அத்துடன் நிற்கவில்லை. தனக்கு விருப்பமான உயர் அதிகாரிகளுக்கு பென்ஸ் கார்களை பரிசு கொடுப்பதும் கிம் ஜாங் மற்றும் கிம் ஜாங் உன் ஆகிய இருவரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

ஒரு சமயத்தில் 160 பென்ஸ் கார்களை அதிகாரிகளுக்கு பரிசு கொடுத்ததாகவும் தகவல் உண்டு. குறிப்பாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்த விஞ்ஞானிகளுக்கு பென்ஸ் கார்களை பரிசாக வாரி வழங்கி உள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

கிம் ஜாங் இல் மறைவிற்கு பின்னர் அவரது மகனும் தற்போதைய வடகொரிய சர்வாதிகாரியாக விளங்கும் கிம் ஜாங் உன்னும் மெர்சிடிஸ் கார்களையே விரும்பி வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

கிம் ஜாங் மறைவிற்கு பின்னர் அவரது மகனும் தற்போதைய வடகொரிய சர்வாதிகாரியாக விளங்கும் கிம் ஜாங் உன்னும் மெர்சிடிஸ் கார்களையே விரும்பி வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

கிம் ஜாங் உன் மிக சிறு வயதில் இருந்தே கார் ஓட்ட பழகியவர். அதுமட்டுமல்ல, ரேஸ் கார் ஓட்டுவது, குதிரையேற்றம் என பல விதங்களிலும் வித்தையை கற்று தேர்ந்தவர். கிம் ஜாங் உன் கார் கலெக்ஷனில் ரேஸ் கார்களும் உள்ளன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

கிம் ஜாங் உன்னிற்கு வடகொரியாவில் 17 அரண்மனைகள் உள்ளன. அவற்றில் ஒரு அரண்மனையை ஒட்டி தனி விமான ஓடுபாதையை அமைத்து வைத்திருக்கிறார். அவசர சமயங்களில் இந்த விமான ஓடுபாதையை வைத்து எளிதாக தப்புவதற்காக இந்த திட்டம்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

கிம் ஜாங் உன்னிடம் சொந்தமாக தனி நபர் விமானமும் உள்ளது. இலுஷின் ஐஎல்-62 விமானத்தை கஸ்டமைஸ் செய்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

லெதர் இன்டீரியர், க்றிஸ்ட்டல் சிகரெட் ஆஷ் ட்ரெ, ரோஸ்வுட் மேஜை என அனைத்து விதத்திலும் பார்த்து பார்த்து செய்யப்பட்ட சொகுசு வசதிகள் கொண்ட விமானம் அது. இதன் மதிப்பு 1.5 மில்லியன் டாலர்கள்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

மிக ரகசிய ஆலோசனைகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்துகிறார். அதிகாரிகளுடன் இந்த விமானத்தில் அடிக்கடி பறந்துதான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

விமானம் தவிர, உல்லாச படகு ஒன்றும் சொந்தமாக வைத்துள்ளார் கிம் ஜாங் உன். பிரின்செஸ் 98 என்று குறிப்பிடப்படும் அந்த உல்லாச படகு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எல்விஎம்எச் நிறுவனம் கட்டமைத்து கொடுத்துள்ளது. 200 அடி நீளம் கொண்ட இந்த உல்லாச படகில் அவ்வப்போது டூர் அடிப்பதும் கிம் ஜாங் உன்னின் பொழுதுபோக்கு.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியை பார்வையிட இந்த உல்லாச படகில் செல்வாராம். அப்போது அனுதினமும் குடியும், கும்மாளமுமாக இருப்பாராம். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மதுவகைகள் மற்றும் உணவுப்பொருட்களையே விரும்பி எடுத்துக் கொள்வாராம்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அவரது பிரம்மாண்ட மோட்டார் உலகம்!

எனவே, இந்த படகில் அடிக்கடி உல்லாசப் பயணம் மேற்கொள்வது கிம் ஜாங் உன்னின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு. இந்த படகின் மதிப்பு 7 மில்லியன் டாலர்களாக கூறப்படுகிறது.

Photo Credit: Newyork Times and MSN

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Thigns About Kim Jong Un's Train
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more