காஷ்மீரில் அமையும் உலகின் உயரமான ரயில் பாதை: சீன அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி?

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ள லே பகுதி வரை இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. சாலை மார்க்கமாக டெல்லியிலிருந்து லே பகுதியை அடைவதற்கு 40 மணிநேரம் பிடிக்கும்.

இந்திய எல்லைப்பகுதிகளில் சீன அத்துமீறல்களை தடுப்பதற்காக ரூ.2 லட்சம் கோடியில் 4 புதிய ரயில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில், காஷ்மீரில் உள்ள லே பகுதியில், அமைக்கப்பட இருக்கும் உலகின் உயரமான ரயில் பாதை திட்டமும் ஒன்று. இந்திய கட்டுமானப் பொறியியல் துறையின் வல்லமையை பரைசாற்றும் விதத்தில், பல சவால்களை எதிர்கொண்டு அமைக்கப்பட இருக்கும் இந்த புதிய ரயில் பாதை திட்டம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூரிலிருந்து காஷ்மீரின் லடாக் பகுதியிலுள்ள லே பகுதி வரை இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. சாலை மார்க்கமாக டெல்லியிலிருந்து லே பகுதியை அடைவதற்கு 40 மணிநேரம் பிடிக்கும். இந்த புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால், வெறும் 20 மணிநேரத்தில் தலைநகர் டெல்லியிலிருந்து லே பகுதியை அடைந்துவிட முடியும்.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

சீன எல்லைக்கு அருகில் வரை செல்வதற்கான 4 ரயில் திட்டங்களில் மிக முக்கியமானத் திட்டமாக பிலாஸ்பூர் - லே ரயில் பாதை திட்டம் அமையும். இந்த திட்டம் ரூ.83,360 கோடியில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

பிலாஸ்பூர் - மணாலி - லே வரை 465 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கும், இந்த வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ரயில் பாதையின் 52 சதவீத அளவுக்கான தடம் சுரங்கப் பாதை வழியாக செல்ல இருக்கிறது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இந்த ரயில் வழித்தடத்தில் 74 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 244 கிமீ தூரம் சுரங்கப் பாதை வழியாகவே செல்லும். இதில், 27 கிமீ நீளத்துக்கான மிக நீளமான சுரங்கப்பாதையும் ஒன்றாக இருக்கும். தவிரவும், 124 பெரிய பாலங்கள் மற்றும் 396 சிறிய பாலங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இந்த திட்டத்தின் கீழ் பிற பகுதிகளில் அமைக்கப்பட இருக்கும் ரயில் பாதையைவிட உப்ஷியிலிருந்து லே வரையில் சற்றே செங்குத்தான மலைப்பாதை வழியாக ரயில் தடம் செல்லும். இந்த ரயில் பாதை அமைக்க 2 ஆண்டுகள் பிடிக்கும். ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் 51 கிமீ தூரத்திற்கு இந்த தடம் அமைக்கப்பட இருக்கிறது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

மிக மோசமான சீதோஷ்ண நிலைகள், மலைச்சரிவு ஆபத்து, மிக கடினமான மலைகள், ஆக்சிஜன் அளவு குறைவான பகுதிகள், அதல பாதாளத்தை கொண்ட சவாலான பள்ளத்தாக்குகளை சமாளித்து இந்த ரயில் பாதை திட்டம் அமைக்கப்பட இருக்கிறது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இந்த ரயில் பாதையின் மிக உயரமான பகுதி கடல் மட்டத்திலிருந்து 5,360 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும். சீனாவிலுள்ள கின்காய் - திபெத் ரயில் பாதை கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் நிலையில், இது அதைவிட இருமடங்கிற்கும் கூடுதலான உயரத்தில் அமைய இருப்பது பொறியியல் துறையின் உச்சபட்ச சாதனையாக இருக்கும்.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

ஹிமாச்சலப் பிரேதசம் மற்றும் காஷ்மீரில் உள்ள பல முக்கிய சுற்றுலாப் பகுதிகளையும், ராணுவ முகாம்களையும் இணைக்கும் விதத்தில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. பிலாஸ்பூரிலிருந்து சுந்தர்நகர், மண்டி, மணாலி, கீலாங், கோக்சர், டார்ச்சா, உப்ஷி மற்றும் கரு ஆகிய இடங்கள் வழியாக ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

பிலாஸ்பூர் - மணாலி - லே வரையிலான தடம் அகல ரயில் பாதையாக அமைக்கப்பட இருக்கிறது. இந்த தடத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். இதன்மூலமாக, டெல்லியிருந்து லே பகுதிக்கான பயணம் என்பது 40 மணிநேரத்திலிருந்து 20 மணிநேரமாக குறையும்.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இந்த புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இருப்பதாகவும், பெரும் பகுதி நிதியை வழங்க ஒப்புக் கொண்டுவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்த திட்டம் தங்கு தடையில்லாமல், குறித்த காலத்தில் நிறைவுபெறும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

பிலாஸ்பூர் - மணாலி - லே ரயில் பாதை திட்டம் மூலமாக ராணுவத் துருப்புகளையும், தளவாடங்களையும் எளிதாக எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில், இமயமலை பகுதியில் முக்கிய சுற்றுலாப் பகுதிகளாக இருக்கும் மணாலி மற்றும் லே ஆகிய இடங்களுக்கு பயணிகள் வருகை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் 2020ம் ஆண்டு துவங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இதனிடையே, இந்திய எல்லைப்பகுதிகளுக்குள் அவ்வப்போது சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வாலாட்டி வருவது தொடர்கதையாக இருக்கிறது. சீனாவின் சேட்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல முக்கிய சாலை மற்றும் ரயில் பாதை திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

அதன்படி, சீன எல்லையோரம் படைகளை விரைவாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக, அசாம் - அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் விதத்தில், 9.15 கிமீ நீளத்திற்கு நாட்டின் மிக நீளமான ஆற்றுப்பாலத்தை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

இந்த ஆற்றுப்பாலம் திறக்கப்பட்டதன் மூலமாக தோலா மற்றும் சதியா ஆகிய இடங்களுக்கு இடையிலான பயணம் 6 மணிநேரத்திலிருந்து வெறும் 1 மணிநேரமாக குறைந்தது. ராணுவ தளவாடங்களையும், துருப்புகளையும் சீன எல்லையோரம் விரைவாக கொண்டு செல்ல இது முக்கிய பாலமாக அமைந்துள்ளது.

சீனாவுக்கு செக் வைக்க உலகின் ரயில் பாதையை அமைக்கும் இந்தியா!

அதேபோன்று, பிலாஸ்பூர் - லே இடையிலான ரயில் தடம் மட்டுமின்றி, மிஸாமரி - தெங்கா - தவாங் இடையிலான 378 கிமீ தூரத்திற்கான ரயில் பாதை, வடக்கு லக்கிம்பூர் - பாமே - சிலபதர் இடையிலான 249 கிமீ தூரத்திற்கான வழித்தடம் மற்றும் பஸிகாட் - தேஸு - பர்சுராம் குந்த் - ரூபய் இடையிலான 227 கிமீ தூரத்திற்கான ரயில் வழித்தடங்களும் ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Interesting Things About World's highest Bilaspur-Manali-Leh rail line.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X