ஏலத்திற்கு வரும் டேவிட் பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார்!

By Ravichandran

டேவிட் பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் ஏலத்தில் விற்கப்பட உள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், உலக அளவில் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர்.

டேவிட் பெக்காமின் கஸ்டமைஸ்ட் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட், சிசிஏ அல்லது கிளாஸிக் கார் ஆக்‌ஷன்ச் என்ற நிறுவனத்தின் மூலம் ஏலத்தில் விற்கப்பட உள்ளது.

பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார், அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கபட்டு, மேம்படுத்தபட்டிருந்தது. இந்த பிரத்யேக மேம்பாட்டு பணிகள், 1,00,000 பவுண்ட்கள் மதிப்பில் கான் டிசைன்ஸ் எனப்படும் இங்கிலாந்து கஸ்டமைஸர்களால் மேற்கொள்ளபட்டது.

International Football Player David Beckham Range Rover Sport Car Up For Auction

பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார், கையால் தைக்கபட்ட லெதர் சீட்டுகள், பெஸ்போக் ஜெனிசிஸ் சவுண்ட் சிஸ்டம், 2 தொலைகாட்சி ஸ்கிரீன்கள், பெக்காமின் பெயர் பதிக்கபட்ட ஃப்ளோர் மேட்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.

மேலும், இந்த எஸ்யூவியில், கான் பாடி கிட், பிளாக் நிறத்தில் 5 ஸ்போக் அல்லாய் வீல்கள் உள்ளன.

டேவிட் பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் பழைய 4.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்ட், வி8 இஞ்ஜின் உள்ளது. இந்த இஞ்ஜின் 389 பிஹெச்பியையும், 550 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார், வெரும் 1,00,000 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே இயக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

டேவிட் பெக்காமின் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார், டிசம்பர் 5, 2015-ஆம் தேதி, ஏலம் செய்யபட உள்ளது என்பது முக்கிய தகவலாகும்.

டேவிட் பெக்காமின் ரசிகர்கள், அவரின் இந்த ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் கார் வாங்க போட்டி போட்டு கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Most Read Articles

English summary
International Footballer David Beckham Range Rover Sport Car Up For Auction. England Football Team, Ex-Captain David Beckham Car is to be auctioned by Classic Car Auctions (CCA) in its sale on December 5, 2015.
Story first published: Thursday, November 19, 2015, 18:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X