பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில் இது குறித்த முழு விபரங்களையும் வரி எப்படி குறைக்கப்பட்டது. என்பது குறித்த தகவல்களையும் கீழே காணுங்கள்

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

இந்தியா முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் செய்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்தது தான். கடந்த சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி மத்திய அரசு பெட்ரோலுக்கான கலால் வரியை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ8 மற்றும் டீசலுக்கு ரூ6 வரியைக் குறைத்தது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

இதையடுத்து இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ8.69 மற்றும் டீசல் விலை ரூ7.05 குறைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுதல் வரியைக் குறைக்கச் சொல்லி நிதியமைச்சர் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ19.98 மற்றும் டீசலுக்கு ரூ15.83 என்று இருந்தது. தறபோது அது லிட்டருக்கு ரூ19.90 மற்றும் டீசலுக்கு ரூ15.80 என இருந்தது. தற்போது அது லிட்டருக்கு ரூ11.90 மற்றும் ரூ9.83 என வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த வரி என்பது கொரோனா காலத்திற்கு முன்பாக விதிக்கப்பட்ட வரியாகும்.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெனையின் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அப்பொழுது விலையைச் சரி செய்யும் வகையில் பெட்ரோல் டீசல் மீது பெட்ரோலுக்கு ரூ13 மற்றும் டீசல் வரி அதிகமாக விதிக்கப்பட்டது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

தற்போது கச்சா எண்ணெனையின் விலை சர்வதேச அளவில் மீண்டு வந்துள்ளதால் தற்போது இந்த வரிகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ5 மற்றும் டீசலுக்கு ரூ10 ஆகியவற்றைக் குறைத்தார்.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

மாநில அரசுகளை பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டல் வரியைக் குறைக்கச் சொன்னார். அப்பொழுது இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் தங்கள் மதிப்புக் கூட்டல் வரியைக் குறைத்தனர். ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த நேரத்தில் பெட்ரோல் விலையைக் குறைக்கவில்லை.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

இந்நிலையில் தான் தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 14 ஆண்டுகள் இல்லாத உச்சத்திற்குச் சென்றுள்ளது. ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் வரை விற்பனையானது. இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 84 அமெரிக்க டாலராக இருந்தது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

கடந்த மார்ச் மாதம் 22ம் தேதிக்கு பிறகு 16 நாளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ10 வரை உயர்ந்ததால் மக்களுக்கு பெரும் பாரம் ஏற்பட்டது. மோடி அரசு 2014ம் ஆண்டு பதவியேற்றபோது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி முறையே லிட்டருக்கு ரூ9.48 மற்றும் ரூ3.56 என இருந்தது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

2014 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு 9 முறை உயர்த்தியது. இது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு முறையே ரூ11.77 மற்றும் ரூ13.47 வரை உயர்த்தியது. இதனால் மத்திய அரசுக்குக் கடந்த 2014-2015 ஆண்டில் பெட்ரோல் கலால் வரி மூலம் இருந்த வருவாய் ரூ99 ஆயிரம் கோடி 2016-17ம் ஆண்டில் ரூ2.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

இதன் பின்பு 2017 அக்டோபர் மாதம் கலால் வரியை லிட்டருக்கு ரூ2 வரை குறைத்தது. ஆனால் அதே வரியை மீண்டும் 2019 ஜூலை மாதம் உயர்த்திவிட்டது. அதன் பின் 2020 மார்ச் 14ம் தேதி பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு ரூ3 மற்றும் 2020 மே 6ம் தேதி பெட்ரோலுக்கு ரூ10 மற்றும் டீசலுக்கு ரூ13 வரை உயர்த்தியது. தற்போது கூட்டப்பட்ட இந்த வரி தான் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் டீசல் மீதான வரி கொரோனாவிற்கு முந்தைய நிலைக்கே வந்துவிட்டது.

பெட்ரோல் விலை குறைப்பில் பின் உள்ள வரலாறு இது தான்... இந்த தகவல் எல்லாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டீர்கள்

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டல் வரியைக் குறைத்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் பெட்ரோலை லிட்டருக்கு ரூ2.08 மற்றும் டீசலை ரூ1.44 எனக் குறைத்துள்ளனர். கேரளா மாநிலத்தில் லிட்டருக்கு பெட்ரோலுக்கு ரூ2.41 டீசலுக்கு ரூ1.36 குறைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோலுக்கு ரூ2.48 மற்றும் டீசலுக்கு ரூ1.16 என ஒரு லிட்டருக்கு வரியைக் குறைத்துள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Intresting information behind excise duty cut on petrol diesel price
Story first published: Monday, May 23, 2022, 15:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X