250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த அதிவேக

மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த புல்லட் ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை திட்டமிட்டுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

உலகிலேயே மிகப்பெரிய ரயில் சேவை கட்டமைப்பை பெற்ற இந்தியாவில் புல்லட் ரயில் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. மும்பை- ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டமும் தொங்கலில் நிற்கிறது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

இந்த சூழலில், ஏற்கனவே உள்ள தண்டவாள கட்டமைப்புகளை மேம்படுத்தி அதிவேக ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்கப்பட்ட டிரெயின்-18 என்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டங்களில் சிறப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

புல்லட் ரயில் மாதிரிலேயே வெறும் 18 மாதங்களில் இந்த ரயில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டெல்லியிலிருந்து செல்லும் சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக சேவைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

சென்னை ஐசிஎஃப் ஆலை தயாரித்த டிரெயின்-18 ரயிலை மேம்படுத்தினால் மணிக்கு 200 கிமீ வேகம் வரை இயக்க முடியும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய ரயில்வே துறையில் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

இந்த நிலையில், அடுத்ததாக சென்னை ஐசிஃப் ஆலை தயாரித்த டிரெயின்-18 ரயில் ஒருபுறம் இருக்க, ரேபரேலியில் செயல்பட்டு வரும் ரயில்பெட்டி ஆலையில் அதிவேகத்தில் செல்லும் திறன் மிக்க ரயில் பெட்டிகளை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 500 அலுமினியம் ரயில் பெட்டிகளை தயாரிக்க ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் ஃபேக்டரி எனப்படும் MCF ரயில்வே ஆலை திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கும்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

இவை முழுவதும் அலுமினியத்தாலான ரயில் பெட்டிகளாக தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காக, உலக அளவில் டென்டர் கோரப்பட்டு, தொழில்நுட்பத்தை எம்சிஎஃப் ஆலையுடன் பகிர்ந்து கொண்டு ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

அலுமினியம் ரயில் பெட்டிகள் அதிவேகத்தில் செல்லும் திறன் படைத்திருப்பதுடன், துருப்பிடிக்காத அம்சங்களை பெற்றிருக்கும். இதனால்,இந்த ரயில் பெட்டிகள் குறைவான பராமரிப்பு மற்றும் நீண்ட காலத்திற்கு நீடித்த உழைப்பையும் வழங்கும்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

சாதாரண எல்எச்பி பெட்டிகள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை. ஆனால், அலுமினியம் ரயில் பெட்டிகள் 40 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் பயன்பாட்டில் வைக்க முடியும்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

பயணிகள் ரயில் சேவையில் டிரெயின்-18 போன்ற தனி எஞ்சின் இல்லாத ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்துள்ளோம். அதேபோன்று, இந்த அலுமினிய ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றும் மூன்று டன் வரை எடை குறைவாக இருக்கும்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

இதனால், மின்சார சிக்கனத்தையும் வெகுவாக பெற முடியும் என்பதுடன், எஞ்சின் பிக்கப் மற்றும் நிறுத்துவதற்கான தூரமும் வெகுவாக குறையும். பயண நேரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காண்பதற்கு இயலும் என்று தெரிவித்தார்.

250 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டம்!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த புதிய அலுமினியம் ரயில் பெட்டிகள் படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனிடையே, தண்டவாள கட்டமைப்புகளையும் மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியர்களின் அதிவேக ரயில் கனவு படிப்படியாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது'! என்ற அண்ணாவின் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில், மத்திய செயல்பாடுகள் இருந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. டெல்டாவையே புரட்டி போட்ட கஜா புயல் பாதிப்புகளை நேரடியாக பார்வையிட பிரதமர் மோடி வராமல் புறக்கணித்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

இந்த சூழலில், அடுத்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் தகவலும் தென்னகத்தை புறக்கணிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்படும் டிரெயின் -18 என்ற அதிவேக ரயில்கள் ஒன்றுகூட அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தென்னகத்துக்கு இல்லலை என்ற தகவல் கிடைத்துள்ளது.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

வரும் டிசம்பர் 25ந் தேதி முதல் டிரெயின்-18 அதிவேக ரயில் பயணிகள் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது தெரிந்ததே. புல்லட் ரயில் கனவில் இருக்கும் இந்தியர்களின் ஆவலை தணிக்கும் அத்துனை அம்சங்களுடன் இந்த ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்த ரயிலை வெறும் 18 மாதங்களில் சென்னை ஐசிஎஃப் பணியாளர்களும், பொறியாளர்களும் இரவு பகல் பாராமல் சேர்ந்து உருவாக்கி இருக்கின்றனர்.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

புறநகர் மின்சார ரயில்களை போலவே, இந்த அதிவேக ரயில் தனி எஞ்சின் இல்லாமல், ரயில் பெட்டிகளிலேயே பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார்களுடன் உந்துசக்தியில் இந்த ரயில் இயங்கும்.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

இதனால், மிக விரைவாக வேகம் எடுக்கும் என்பதுடன், குறைவான தூரத்திலேயே நிறுத்தவும் முடியும். இதனால், அதிக மின்சிக்கனத்தை தரும் என்பதுடன், பயண நேரமும் 15 சதவீதம் அளவுக்கு குறையும்.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், டிவி திரைகள், சொகுசான இருக்கைகள், சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டு இருப்பதுடன், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

தற்போது வட இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் சென்று புதிய சாதனை படைத்தது. சதாப்தி ரயில்களுக்கு மாற்றாக இந்த புதிய ரயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

அதிவேக சோதனை ஓட்டங்கள் வெற்றி கண்டு வருவதால், மேலும் 4 புதிய டிரெயின் 18 அதிவேக ரயில்களை உற்பத்தி செய்வதற்கு சென்னை ஐசிஎஃப் நிறுவனத்துக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிவேக ரயிலாக பெருமை பெற்றிருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும், ரயில்வே துறையிடமிருந்து வெளியான தகவலின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தயாரிக்கப்படும் டிரெயின் -18 ரயில்களில் ஒன்றுகூட தென்னகத்துக்கு இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

அதாவது, அனைத்து டிரெயின்-18 ரயில்களுமே டெல்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. வரும் 25ந் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று, டெல்லியிலிருந்து போபால் ஹபீப்கஞ்ச் தடத்தில் முதல் ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Financial Express

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

இந்த நிலையில், அடுத்து தயாரிக்கப்படும் 9 ரயில்களுமே வட இந்தியாவிலேயே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட இருப்பதாக ரயில்வே வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதாவது, மருந்துக்கூட உற்பத்தி செய்யப்படும் தமிழகம் அல்லது தென் மாநிலங்களுக்கு இல்லை.

தென்னகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு... இதுலேயும் இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்த மோடி!

2020ம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்படும் அனைத்து டிரெயின் - 18 அதிவேக ரயில்களுமே, புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி- கல்கா, புதுடெல்லி- டேராடூன், புதுடெல்லி - மும்பை, புதுடெல்லி - மொராதாபாத், புதுடெல்லி - பிரயாக்ராஜ், புதுடெல்லி - அமிர்தசரஸ், புதுடெல்லி - ஹவுரா மற்றும் புதுடெல்லி - ஜான்சி ஆகிய தடங்களில்தான் இயக்கப்பட இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
IR plans to manufacture 250 kmph capable aluminium coaches.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X