ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?

ஐஆர்சிடிசி என்றால் உங்கள் நினைவிற்கு வருவது ரயில் டிக்கெட் புக்கிங்தான். இந்தியா முழுவதும் எங்கிருந்து எங்குச் செல்ல வேண்டும் என்றாலும் ஐஆர்சிடிசியில் ரயில் டிக்கெட்களை புக்கிங் செய்து கொள்ளலாம். இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பயணத்தை புக்கிங் செய்யலாம். முன்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் சாத்தியமாக இருந்தது. தற்போது ஆன்லைனிலும் சாத்தியமாகிவிட்டது.

ஐஆர்சிடிசி ஆரம்பிக்கும் போது என்னவோ வெறும் ரயில் டிக்கெட் புக்கிங்கை அடிப்படையாக வைத்துத் தான் துவங்கப்பட்டது. ஆனால் தற்போது ரயில் டிக்கெட், போக விமானம் மற்றும் பஸ் டிக்கெட்களையும் புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திவிட்டனர். பலருக்கு ஐஆர்சிடிசியில் விமான டிக்கெட் பெறுவது குறித்துத் தெரியும். வெளியூர் டூர் பேக்கேஜ்களை அதில் பெற முடியும் என்பதால் தெரிந்திருக்கும் ஆனால் பலருக்கு பஸ் டிக்கெட் புக்கிங் குறித்துத் தெரியாது.

ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?

கடந்த 2021ம் ஆண்டு இந்த சேவை செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது இந்த தளத்தில் மொத்தம் 50 ஆயிரம் பஸ்களை புக்கிங் செய்யும் ஆப்ஷன்கள் உள்ள 22 மாநிலங்கள் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த சேவை அமலிலுள்ளது. இதில் தமிழ்நாடும் உள்ளடங்கும். பயணிகள் இதில் ஏசி, ஏசி இல்லாத பஸ்கள், ஸ்லீப்பர் என என அரசு மற்றும் தனியார் பஸ்களை புக்கிங் செய்து கொள்ள முடியும். பஸ்களில் அவர்கள் ஏறும் இடம் இறங்கும் இடத்தை தேர்வு செய்து பஸ்களை தேர்வு செய்து புக்கிங் செய்யலாம்.

எப்படி புக்கிங் செய்வது?

ஐஆர்சிடிசியில் பஸ் டிக்கெட்களை புக்கிங் செய்ய www.bus.irctc.co.in. என்ற தளத்திற்குச் செல்ல வேண்டும்.

புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் ஆகியவற்றைத் தேர்வு செய்து பயணம் செய்யும் தேதியையும் தேர்வு செய்யவேண்டும்.

அதன் பின் நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூட்டில் குறிப்பிட்ட நாளில் செயல்படும் பஸ்களின் பட்டியல் வரும் அதில் பஸ் புறப்படும் நேரம், சென்று சேரும் நேரம், பயண நேரம், பஸ்களின் வகை, டிக்கெட் விலை உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.

இதில் உங்களுக்கு சௌகரியமான பஸ்-ஐ தேர்வு செய்து அதில் உங்களுக்குத் தேவையான சீட்களை தேர்வு செய்யலாம்.அதன் பின் ஆன்லைன் மூலம் அந்த டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்தவேண்டும்.

ஆன்லைன் முறையில் பணத்தைச் செலுத்தினால் நொடியில் டிக்கெட் புக் ஆகிவிடும்.

டிக்கெட்

உங்கள் பஸ் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதும். உங்களுக்கு பஸ் நம்பர், தொடர்பு எண், கிளம்பும் இடம், நேரம் ஆகிய தகவல்கள் பயணிகளுக்கு பஸ் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் அனுப்பி வைக்கப்படும். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் பயணிகள் 1800 110 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயணிகள் இந்த பயணத்தில் பஸ்சில் பயணிக்கும் போது 10 கிலோ வரை லக்கேஜை எடுத்துச் செல்லலாம் இது போக ஒரு லேப்டாப் பேக் மற்றும் 5 கிலோ வரையிலான ஒரு ஹேண்ட் பேக்கை எடுத்துச் செல்லலாம்.

டிக்கெட் கேன்சலேஷன்

ஐஆர்சிடிசி தளத்தில் புக் செய்த பஸ் டிக்கெட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றாலும் கேன்சல் செய்யலாம் கேன்சலேஷனிற்கான கட்டணம் கழிக்கப்பட்டு மீதம் பணம் செலுத்தப்பட்ட கணக்கிற்கே 3-4 நாட்களில் வரவு வைக்கப்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Irctc bus ticket booking service full details
Story first published: Monday, January 30, 2023, 19:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X