இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும்... வருகிறது புது ரூல்ஸ்...

வாகன இன்சூரன்ஸ்களில் இனி பயன்படுத்தும் தூரம் மற்றும் வாகனத்தைக் கையாளும் முறையைப் பொருத்து இன்சூரன்ஸ் பிரமியம் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இந்தியாவில் சாலையில் ஓடும் அத்தனை வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டாயம். சாலையில் வாகனம் செல்லும் போது விபத்தில் சிக்கிவிட்டால் அந்த விபத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கான இழப்பீட்டை வழங்குவதற்காக இந்த இன்சூரன்ஸ் முறையைப் பின்பற்றுகின்றனர். இதனால் குறைந்தபட்சம் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் கட்டாயம். இது போக ஃபுல் கவர், பம்பர் டு பம்பர் என ஏகப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கிறது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இன்றைய இன்சூரன்ஸ் பிரிமியம் என்பது வாகனத்தின் மதிப்பு, பயன்பாடு, எந்த வகையான வாகனம்? எந்த ஆண்டு வாங்கப்பட்ட வாகனம் உள்ளிட்ட விபரங்களை கொண்டு தீர்மானம் செய்யப்படுகிறது. இப்படியாகத் தீர்மானம் செய்யப்படுவதில் சில சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கம் உணர்ந்தது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

அதாவது சொந்த பயன்பாட்டிற்காக வாகனம் வாங்கியவர்கள் பலர் வாகனத்தை மிக குறைவாகவே பயன்படுத்துகின்றனர். அவர்கள் கட்டும் அதே பிரிமியம் தொகை தான் வாகனத்தை மிக அதிகமாக பயன்படுத்துபவர்களும் கட்டுகின்றனர். ரிஸ்க் என்பதைப் பொருத்தவரை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது. குறைவாகப் பயன்படுத்துபவர்களுக்குக் குறைவான ரிஸ்க் இருக்கிறது. ஆனால் இரண்டிற்கும் ஒரே பிரிமியம் தொகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக் கூறுகின்றனர்.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இது மட்டுமல்ல சிலர் வாகனம் ஓட்டும் போது அதி வேகமாகவும்,

அஜாக்கிரதையாகவும் வாகனம் ஒட்டுகின்றனர். பலர் போக்குவரத்து விதிகளை மதித்துச் சரியாக கையாடலுடன் வாகனங்களை இயக்குகின்றனர். ரோட்டில் ரிஸ்க் எனப் பார்த்தால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், சரியாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரிஸ்க் மாறுபடுகிறது. ஆனால் இன்சூரன்ஸ் பிரிமியம் ஒன்று தான்.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இந்த பிரிமியம் முறை நியாயம் இல்லாததாக இருப்பதாகப் பலர் கருதினர். இது குறித்து இந்தியாவின் இன்சூரன்ஸ் களை ஒழுங்குபடுத்தும் IRDAIக்கு பலர் கடிதம் எழுதி வந்தனர். இந்நிலையில் IRDAI இந்தியாவில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி வாகனத்தை எவ்வளவு தூரம் ஓட்டிச் செல்கிறோம். எப்படி ஓட்டிச்செல்கிறோம் என்பதைப் பொருத்து பிரிமியம் வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

அதன்படி இனி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை உருவாக்கும் போது பயனாளிகள் எவ்வளவு தூரம் காரை பயன்படுத்துவார்கள் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் இன்சூரன்ஸ் பிரிமியம் வசூலிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் எவ்வளவு தூரம் பயணிப்பார் என்பதை பொறுத்து இன்சூரன்ஸ் பணத்தை வசூலிக்கலாம்.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

குறிப்பாக ஒரு கார் தனியார் நிறுவன ஊழியர்களுக்காக மட்டும் செயல்படுகிறது என்றால் ஒரு நாளுக்கு இவ்வளவு கி.மீ தான் பயன்படுத்தப்படும் என்ற திட்டம் இருக்கிறது. அதை கணக்கிட்டு எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு மட்டும் இன்சூரன்ஸ் பிரிமியத்தை கட்டிக்கொள்ளலாம். அதே போல ஜிபிஎஸ் முறையில் வாகனத்தை ஓட்டும் விதத்தை பொருத்தும் இன்சூரன்ஸ் பிரிமியத்தை வாங்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

அதன்படி வாகனத்தின் ஜிபிஎஸ்கருவி பொருத்தப்பட்டிருந்தால் அதில் உள்ள வாகனத்தின் வேகம் மற்றும் மற்ற விபரங்களை வைத்து ரேஷ் டிரைவிங், ஸ்மூத் டிரைவிங் என பிரிமியம் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இந்த இன்சூரன்ஸிற்கு Telematic பேஸ்டு இன்சூரன்ஸ் என தெரியவிக்கப்பட்டுள்ளது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இதன்படி ஒரே உரிமையாளர் ஒன்றிற்கும் மேற்பட்ட வாகனம் வைத்திருந்தாலும் அத்தனை வாகனத்திற்கும் சேர்த்து ஒரே இன்சூரன்ஸை வாங்கி கொள்ள முடியும். அத்தனை வாகனங்களின் பயன்பாட்டையும் பொருத்து ஒரே இன்சூரன்ஸை டிசைன் செய்து வாங்கிக்கொள்ளலாம். அதில் கூடுதலாக வாகனங்களை இணைக்கவோ அல்லது ஏற்கனவே பட்டியலில் இருக்கும் வாகனத்தை நீக்கவோ வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமாகும் . . . வருகிறது புது ரூல்ஸ் . . .

இப்படியாக இந்தியாவின் வாகன இன்சூரன்ஸில் பெரும் புரட்சிகர மாற்றத்தை IRDAI அறிவித்துள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த விதிமுறைக்கு தகுந்தார் போல தங்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி எதிர்காலத்தில் சிறப்பான டிரைவிங் மற்றும் குறைவான பயன்பாடு இருந்தால் இன்சூரன்ஸ் பிரிமியம் குறையும் வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இன்சூரன்ஸ் பிரிமியமும் அதிகமாகும்.

Most Read Articles
English summary
Irdai released new motor insurance rules like pay per distance and pay how you drive basis know full
Story first published: Thursday, July 7, 2022, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X