உலக வல்லரசுகளுக்கு போட்டியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா.. ஒரு தமிழரால் சாத்தியமாகிறது

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா வெகு விரைவில் பெறவுள்ளது.

By Arun

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா வெகு விரைவில் பெறவுள்ளது. ஏனெனில் 3 இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகளில், இஸ்ரோ முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆய்வுகளை, உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இன்றைய தேதி வரை, ரஷ்யா (சோவியத் யூனியன்), அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளி ஆராய்ச்சியில் வெகு வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவும் கூட, இன்னமும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது கிடையாது. ஆனால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சிகளை, கடந்த 2004ம் ஆண்டு முதலே இந்தியா செய்து கொண்டுதான் இருக்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

எனினும் முதன்மை பட்டியலில் இடம்பெறாத காரணத்தால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியில் சற்றே தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் திட்டம் கைவிடப்படாமல் தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பலனாக தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

நாட்டின் சுதந்திர தினம் கடந்த 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ''2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது அதற்கு முன்பாக இந்தியா, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். அங்கு நம் மக்கள் மூவர்ண கொடியை பறக்க விடுவார்கள்'' என உறுதியளித்தார்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

இதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ (ISRO-Indian Space Research Organisation) தற்போது முடுக்கி விட்டுள்ளது. எனவே 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15க்கு முன்னதாகவே, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

இஸ்ரோ அமைப்பானது, 'ககன்யான்' (Gaganyaan) என்ற விண்கலம் மூலம்தான், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 'ஜிஎஸ்எல்வி மார்க் III' (GSLV Mark III) என்ற ராக்கெட்தான் 'ககன்யான்' விண்கலத்தை சுமந்து கொண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட்டை இஸ்ரோ ஏற்கனவே தயாரித்து விட்டது. இதுவரை இரண்டு முறை 'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட் லான்ச் (Launch) செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு முறையும் இஸ்ரோவிற்கு வெற்றியே கிடைத்துள்ளது. ஒரு முறை கூட தோல்வியடையவில்லை.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

ராக்கெட் தயாராக உள்ள நிலையில், 'ககன்யான்' விண்கலத்தை உருவாக்கும் பணிகள்தான், விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடுமையான சிரமங்களுக்கு மத்தியிலும், 'ககன்யான்' விண்கலத்தை தயாரிக்கும் பணிக்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளனர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

அடுத்த 30 மாதங்களில், அதாவது 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள்ளாக, 'ககன்யான்' விண்கலத்தை ஆளில்லாமல் ஏவி சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில், அதாவது 36வது மாதத்தில் மீண்டும் ஒரு முறை, ஆள் இல்லாமலேயே 'ககன்யான்' விண்கலம் ஏவப்படும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

இறுதியாக 40வது மாதத்தில், 3 இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச அளவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பிறகு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

'ககன்யான்' விண்கலமானது விண்வெளியில், 5 முதல் 7 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடும். பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து 300 முதல் 400 கிலோ மீட்டர்கள் தொலைவில், 'ககன்யான்' விண்கலம் நிலை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமானது, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் மற்ற நாடுகளை காட்டிலும் மிக குறைவான செலவில்தான், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ஆராய்ச்சிகளை, இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதுதானே இஸ்ரோ ஸ்பெஷல்!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

'ஜிஎஸ்எல்வி மார்க் III' ராக்கெட்டானது, ஏவப்பட்டதில் இருந்து வெறும் 16 நிமிடங்களில் விண்வெளியை சென்றடையும். இதில், பயணம் செய்யவுள்ள 3 இந்தியர்களை, இஸ்ரோ மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து தேர்வு செய்யவுள்ளன.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ''விண்வெளிக்கு செல்லவுள்ள 3 நபர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படும். 'ககன்யான்' திட்டம் மூலம் இந்தியாவின் விஞ்ஞானம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகளும் பெருகும்'' என்றார். இஸ்ரோ தலைவர் சிவன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளிக்கு பயணிப்பதற்காக தேர்வாகும் 3 இந்தியர்களுக்கு, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதுதவிர ராகேஸ் சர்மாவுடனும், இஸ்ரோ அமைப்பு தொடர்பில் உள்ளது. ராகேஸ் சர்மாதான் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

கடந்த 1984ம் ஆண்டு, ரஷ்யா அனுப்பிய சோயூஸ் டி-11 (Soyuz T-11) விண்கலம் மூலம் ராகேஸ் சர்மா விண்வெளிக்கு சென்றார். அவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார். எனவே அவருடனான தொடர்பு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளிக்கு பயணம் செய்யவுள்ள 3 இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், விண்கலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயேதான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

விண்வெளிக்கு பயணம் செல்பவர்கள், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப 36 நிமிடங்கள் ஆகும். குஜராத் மாநிலத்தில் உள்ள அரபிக்கடலில் அவர்கள் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதேனும் பிரச்னை என்றால், மாற்று ஏற்பாடாக வங்காள விரிகுடாவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

ஒரு சில நாடுகள் சோதனை முயற்சியாக விலங்குகளையும், ரோபட்களையும் விண்வெளிக்கு அனுப்பி வைத்து வருகின்றன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியில் நிச்சயமாக விலங்குகளையும், ரோபட்களையும் அனுப்பாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 4வது நாடு இந்தியா!

ஏனெனில் மனிதர்களை அனுப்புவதன் மூலமாக மட்டுமே ஏராளமான பலன்கள் கிடைக்கும் என இந்தியா கருதுகிறது. எனவே கூடிய விரைவில் 'ககன்யான்' விண்கலம், மனிதர்களுடன் விண்வெளிக்கு பயணிக்கும் என உறுதியாக நம்பலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
ISRO Decided to Send 3 Indians to Space. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X