Just In
- 34 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா?
2.50 கோடி ரூபாய் மதிப்புடைய புத்தம் புதிய காரை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதிகப்படியான இறக்குமதி வரி காரணமாக, வாடிக்கையாளர்கள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது. இறக்குமதி வரியை செலுத்திய பிறகும் கூட, அந்த காரை பதிவு செய்ய இன்னும் கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தியாக வேண்டும்.

எனவே ஓரளவிற்கு பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக, அருகில் உள்ள யூனியன் பிரதேசங்களில் சிலர் தங்கள் கார்களை பதிவு செய்கின்றனர். மாநிலங்களை காட்டிலும் யூனியன் பிரதேசங்களில் வரிகள் மிக குறைவு என்பதே இதற்கு காரணம். ஆனால் பதிவு எண் இல்லாமல் கார்களை பொது சாலையில் இயக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், குஜராத் மாநிலம் வல்சாட் போக்குவரத்து போலீசார் சமீபத்தில் வழக்கம் போல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த புதிய ஜாகுவார் எஃப்-டைப் கன்வெர்டபிள் (Jaguar F-Type convertible) கார் ஒன்றை அவர்கள் நிறுத்தினர். அந்த காரில் பதிவு எண் இல்லை. இதன் காரணமாகவே போலீசார் அதனை நிறுத்தினர்.

இதன்பின் பதிவு ஆவணங்கள் மற்றும் மற்ற ஆவணங்களையும் போலீசார் கேட்டனர். ஆனால் அந்த காரின் உரிமையாளரால் அவற்றை சமர்ப்பிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஸ்பாட்டிலேயே போலீசார் அந்த காரை அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஸ்பாட்டில் ஏன் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை? என்பதற்கான சரியான விளக்கத்தையும் அந்த காரின் டிரைவர் கூறவில்லை.
MOST READ: இது நியாயமா... செல்டோஸ் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கியா!

அகமதாபாத் நகரில் இந்த கார் வாங்கப்பட்டதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். ஓடோமீட்டரை வைத்து பார்க்கையில் இந்த கார் வெறும் 490 கிலோ மீட்டர்கள் மட்டுமே ஓடியுள்ளது தெரியவருகிறது. இதன் மூலம் இது புத்தம் புதிய கார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த வாகனம் எப்போது வாங்கப்பட்டது? என்ற தகவலை போலீசார் வெளியிடவில்லை.
MOST READ: போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

ஆனால் இந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது ஒரு சில வாரங்களுக்கு முன்னதாகவேதான் வாங்கப்பட்டிருக்கும். இந்த காரின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர். இதற்காக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கார் பதிவு செய்யப்பட்டு விட்டதா? அல்லது பதிவெண் இல்லாமல் மட்டும் இயக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. இந்த கார் வல்சாட் பகுதியை சேர்ந்த பிபின் பட்டேல் என்பவருக்கு சொந்தமானது. போலீசார் அந்த காரை நிறுத்தியபோது, அவரது மகன் மாயன் என்பவர்தான் அதனை ஓட்டி வந்து கொண்டிருந்தார். தற்போது இந்த கார் போலீசார் வசம்தான் உள்ளது.
இது தொடர்பாக செக்ஸன் 207ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரின் மதிப்பு 2.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு விலை உயர்ந்த காரை போலீசார் ஸ்பாட்டிலேயே பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் மட்டுமல்லாது எந்த வகையான வாகனம் என்றாலும் பொது சாலைக்கு வரும்போது பதிவு எண் இருக்க வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.