பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். எனவே பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறைய வாய்ப்பே இல்லை.

By Arun

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். எனவே பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் குறைய வாய்ப்பே இல்லை. இதுமட்டுமல்லாமல் குடிமக்கள் அனைவரும் நேர்மையாக வரி கட்ட வேண்டும் எனவும் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து, இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

பெட்ரோல், டீசல் விலை சமீபகாலமாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க வேண்டும் என நாடு முழுவதும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

எனவே மத்திய அரசு மீது நாடு முழுவதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் 2019ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதை எல்லாம் கணக்கில் கொண்ட மத்திய அரசு, கடந்த ஒரு சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகிறது.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

ஆனால் கண் துடைப்புக்காக பெயரளவுக்கு, பைசாக்களில் மட்டுமே விலை குறைப்பு செய்யப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாத லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் (18ம் தேதி) தொடங்கியுள்ளனர். எனவே மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

பெட்ரோல் மற்றும் டீசல் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வரிகளை விதிக்கின்றன. எனவே உற்பத்தி விலையில் இருந்து மூன்று மடங்குக்கும் அதிகமான விலை கொடுத்தே பெட்ரோல், டீசலை மக்கள் வாங்க வேண்டியுள்ளது.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

அதாவது மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது சுமார் 19 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் மீது சுமார் 15 ரூபாயையும் கலால் வரியாக விதிக்கிறது. இது தவிர அந்தந்த மாநில அரசுகள் வாட் உள்ளிட்ட வரிகளையும் விதிக்கின்றன.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. பெட்ரோல், டீசலின் விலை உயர்வானது, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுத்து விடும். எனவே பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

எனினும் மத்திய அரசு அதற்கு இன்னும் செவிசாய்க்கவில்லை. எனவே குறைந்தபட்சம் கலால் வரியையாவது மத்திய அரசு குறைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கலால் வரி குறைக்கப்பட்டாலாவது, பெட்ரோல், டீசலின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

ஆனால் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பே இல்லை.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பின் காரணமாகதான் மத்திய அரசுக்கு அதிகமான வருவாய் வந்து கொண்டிருக்கிறது. எனவே மத்திய அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக பெட்ரோல், டீசல் உள்ளன.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

எனவேதான் பெட்ரோல், டீசலை மத்திய அரசு அதிகம் சார்ந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலை மாற வேண்டுமானால் குடிமக்கள் அனைவரும் தங்களின் வரியை நேர்மையாக செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என யோசனை தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

அதாவது வரிகளை குறைப்பதன் மூலமாக பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு அதனை செய்யாமல், 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் குறைத்து மக்களை ஏமாற்றும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

ஆனால் அருண் ஜெட்லி அந்த யோசனையை நிராகரித்துள்ளார். ப.சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடாமல் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அருண் ஜெட்லி, அவர் அவ்வாறு செய்ய முயன்றது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையை எல்லாம் குறைக்க முடியாது.. எல்லாரும் ஒழுங்கா வரி கட்டுங்க.. மத்திய அமைச்சர் அடாவடி

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் குறைக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் மத்திய அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி விடும். எனவே மத்திய அரசு கலால் வரியை குறைக்கும் என பொது மக்கள் எந்த அடிப்படையில் எதிர்பார்க்க முடியும்? தேர்தல் நெருங்கும் வரை பொறுப்பதே நலம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jaitley hints at no cut in excise on oil, asks citizens to pay taxes honestly. read in tamil.
Story first published: Monday, June 18, 2018, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X