காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

மனித இனத்தின் ஜீவாதாரமாக விளங்கும் நதிகளை மீட்கும் முயற்சிகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் முன்னெடுத்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு நதிகளை மீட்போம் என்ற பயணத்தை காஸ்ட்லியான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவியில் நிறைவு செய்த அவர் இப்போது காவிரியை மீட்பதற்காக பைக் பயணத்தை துவங்கியிருக்கிறார்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

நீண்ட பயணம்

தென் இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், காவிரி கரையோரம் மற்றும் அதனால் பயன் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்திலும் 1,200 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

பயணத் திட்டம்

கடந்த 4ந் தேதி தலைக்காவிரியிலிருந்து தனது பயணத்தை துவங்கிய அவர் மைசூர், பெங்களூர், ஓசூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக வரும் 14ந் தேதி திருவாரூரில் தனது பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். வழியில் பல்வேறு இடங்களிலும் விவசாயிகளையும், காவிரி கூக்குரல் இயக்கத்தை சார்ந்தவர்களையும் சந்தித்து உத்வேகம் கொடுக்க இருக்கிறார்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

சிறந்த நோக்கம்

அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நடுவதற்கும் இலக்கு வைத்து இந்த பயணத்தை துவங்கியிருக்கிறார். தனது பயணத்தின் மூலமாக அனைவரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

ஆடம்பர நாட்டம்

மேலும், ஜக்கி வாசுதேவ் ஆடம்பரமான விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டவர் என்பது தெரிந்த விஷயம்தான். குறிப்பாக, அவர் விலை உயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பிரிமீயம் பைக்குகளையே பயன்படுத்துவது தெரிந்த விஷயம்தான்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

ஹோண்டா டூரர் பைக்கில் பயணம்

அந்த வகையில், காவிரி மீட்பு பயணத்திற்காக ஹோண்டா விஎஃப்ஆர் எக்ஸ் என்ற பைக்கை பல்வேறு விதங்களில் கஸ்டமைஸ் செய்து இந்த பயணத்தில் பயன்படுத்தி வருகிறார். மிக நீண்ட தூரம் பயணித்தாலும், சோர்வு இல்லாத இருக்கை மற்றும் ஹேண்டில்பார் அமைப்பு இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. சக்திவாய்ந்த எஞ்சின் உறுதுணையாக இருக்கும்.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

கஸ்டமைஸ் பைக்

அவர் பயன்படுத்தும் ஹோண்டா விஎஃப்ஆர் பைக்கில் புதிய ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர்த்து, காவிரி கூக்குரல் என்பதை தெரிவிக்கும் வகையில், ஆங்கிலத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

பைக் வகை

இந்த பைக் நீண்ட தூர பயணத்திற்கான க்ராஸ் டூரர் வகையை சேர்ந்தது. மிக நீண்ட பயணத்திற்கு இந்த பைக் அருமையாக ஒத்துழைக்கும் என்று கருதி, இந்த பைக்கை அவர் தேர்வு செய்து பயன்படுத்தி வருகிறார்.

அணிவகுக்கும் காஸ்ட்லி பைக்குகள்

அவர் மட்டுமல்ல, அவருடன் அணிவகுத்து வரும் அவரது ஆதரவாளர்களும், ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகளும் மிக காஸ்ட்லியான பைக் மாடல்களை இந்த பயணத்தில் பயன்படுத்தி வருகின்றனர். ஆம், இந்த பயணத்தில் கவாஸாகி நின்ஜா 1000, டுகாட்டி டயாவெல், ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின், டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா, சுஸுகி வி-ஸ்ட்ரோம், ட்ரையம்ஃப் ராக்கெட் 3 உள்ளிட்ட மிக மிக விலை உயர்ந்த பைக்குகளை காண முடிகிறது.

காஸ்ட்லி பைக்கில் காவிரி மீட்பு பயணத்தை துவங்கிய ஜக்கி வாசுதேவ்!

ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தும் பைக்குகள்

ஜக்கி வாசுதேவ் ஹோண்டா விஎஃப்ஆர் எக்ஸ் பைக்கை பயன்படுத்துவது ஆச்சர்யப்படும் விஷயமல்ல. ஏனென்றால், இதேபோன்று பல அதிக விலைக் கொண்ட பைக்குகளை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jakki Vasudev is riding on a customised Honda VFR X crosstourer for 'Save Cauvery River Mission' from Talacauvery to Tiruvarur.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X