டயர் ஜாம்மரை கழட்டி எறிந்த இரு பெண்கள்... மடக்கி பிடித்த போலீஸ்... வைரல் புகைப்படம்..!

போலீஸாரால் பொருத்தப்பட்ட டயர் ஜாம்மர் ஸ்கூட்டரை, அபராதம் செலுத்தாமல் எடுத்துச் செல்ல முயன்ற இரு இளம் பெண்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதவில் காணலாம்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் பல்வேறு பிரச்னைகள் புதிது புதிதாக கிளம்பி வருகின்றன. இது போக்குவரத்து துறைக்கு தீராத தலைவலியாக மாறியுள்ளது. ஆகையால், இதனைக் கட்டுபடுத்த பல்வேறு வழிமுறைகளைப் போக்குவரத்து துறையினர் கையாண்டு வருகின்றனர்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

மேலும், அதற்காக பல்வேறு புதிய விதிமுறைகளும் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் போக்குவரத்து வீதிமீறல்கள் குறைந்துவிட்டதா என கேட்டால்...? அனைவரும் இல்லவே இல்லையென்றுதான் கூறுவார்கள். ஏன் நம்மில் பலர் கூட, சில நேரங்களில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்போம்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

போக்குவரத்து விதிமுறைகள் என்பது அரசாங்கத்திற்கே அல்லது அதன் நலனுக்காகவே இல்லை. அவையனைத்தும், வாகன ஓட்டிகளான நம்முடையான நலனுக்காகவே இயற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்து விதமீறல்களாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்குவது, அதி வேகமாக வாகனங்களை இயக்குவது, செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது போன்ற பல்வேறு செயல்கள் இருக்கின்றன.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

ஏன்... முறையற்ற இடங்களில், அதாவது வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்படாத சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதுகூட குற்றம்தான். இது, பெரும்பாலும் நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளை மட்டுமே இவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

பொதுவாக, நகரங்களில் இருக்கும் சாலைகள், எந்த அளவிற்கு வசதியுடன் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... பெரும்பாலும் நகரப் பகுதிகளில் உள்ள சாலைகள் சிறியதாகவும், குறுகலானதாகவும் காணப்படுகின்றன. அதுபோன்ற, சாலைகளில் வாகனம் பயணிப்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும்பட்சத்தில், அங்குதான் நம்மில் பலர், நம்முடைய வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகிறோம்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

அவ்வாறு, நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்களாலும், போக்குவரத்து தடை ஏற்பட்டு, நெரிசலை உண்டாக்கும். இதனால், அந்த சாலையே சில மணி நேரம் ஸ்தம்பித்துபோகும் சூழல் ஏற்படும். இதுபோன்ற, காரணங்களால் பார்க்கிங்கிற்கு ஒதுக்கப்படாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது குற்றமாகப் பார்க்கப்பட்டு வருகின்றது.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

அவ்வாறு, சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள்மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக, வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. மேலும், இதுபோன்று நிறுத்திவிட்டு செல்லக்கூடிய வாகனங்களை சிறைபிடிக்க போலீஸார் அதிகாரம் உண்டு. அவ்வாறு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை, அபராதம் செலுத்திய பின்னர் எடுத்துச் செல்லலாம்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

முறையற்ற பார்க்கிங்கில் ஈடுபடும் வாகனங்களை, போக்குவரத்துத்துறை போலீஸார் இரு விதமாக கையாளுக்கின்றனர். அந்தவகையில், வாகனத்தை அங்கிருந்து வெளியேற்றி, தங்கள் வசம் கொண்டு செல்லுதல் மற்றும் வாகனத்தை அசைக்க முடியாத வண்ணம் டயர் ஜாம்மர்களைப் பொருத்தி அங்கேயே நங்கூரம் இடவைத்தால் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

அவ்வாறு, நங்கூரமிடப்பட்ட ஸ்கூட்டரை, அபராதம் செலுத்தாமல், டயர் ஜாம்மர்களை கழட்டி எறிந்துவிட்டு இரு இளம்பெண்கள் எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்களைப் போலீஸார் மடக்கிப்பிடித்து ஸ்கூட்டரை சிறைப் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவலை யின்பிஸ் என்ற ஹிந்தி தளம் வெளியிட்டுள்ளது. மேலும், அந்த பெண்கள் குறித்த புகைப்படமும் தற்போது இணையதளத்தில் வரைலாகி வருகின்றது.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்கூட்டரில் ஜாம்மர் பொருத்தியிருப்பதை அறிந்த, அந்த இரு இளம் பெண்களும். போலீஸுக்கு தெரியாமல் கழட்டி, அங்கேயே எறிந்து விட்டு சென்றனர். இதனையறிந்த, போலீஸார் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அதே சாலையில் நின்றுக்கொண்டிருந்த சக போக்குவரத்து போலீஸார், இரு பெண்களையும் மடக்கி அபராதத் தொகையை வசூலித்துள்ளனர்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

இதைத்தவரித்து அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. முறையற்ற பார்க்கிங்கில் நிறுத்தும் வாகனங்களை எடுத்துச் செல்லாத வண்ணம், ஜாம்மர்களைப் பொருத்துவது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ஜாம்மர்கள் வாகனத்தின் வீலை இயக்காமல் தடுக்கும். அதாவது, ஒரு பிரேக்கினைப் போன்று அது செயல்பட்டும்.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

இதனை, அவ்வளவு எளிதில் கழட்டிவிட முடியாத அளவிற்கு மிகவும் உறுதியானதாக, இரும்பால் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், இதனை பூட்டின் உதவியால் போலீஸார் லாக் செய்வார்கள். இதனைப் போலீஸாருக்கு தெரியாமல் கழட்டுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற, செயலில் ஈடுபடுபவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய, சட்டத்தில் இடம் உள்ளது.

போலீஸின் தடையைமீறி ஸ்கூட்டரை எடுத்துசெல்ல முயன்ற இரு பெண்கள்... வைரல் புகைப்படம்...!

ஜாம்மர்கள் மட்டுமின்றி, கூடுதல் சில தொழில்நுட்பங்களையும் சர்வதேச அளவிலான போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், வின்ட்ஸ்கிரீனின் முழுமையாக மறைக்கும் திறன் கொண்ட டிவைஸை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை, போலீஸாரால் மட்டுமே அகற்ற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்கூட்டரில் ஜாம்மர் பொருத்தியிருப்பதை அறிந்த, அந்த இரு இளம் பெண்களும். போலீஸுக்கு தெரியாமல் கழட்டி, அங்கேயே எறிந்து விட்டு சென்றனர். இதனையறிந்த, போலீஸார் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அதே சாலையில் நின்றுக்கொண்டிருந்த சக போக்குவரத்து போலீஸார், இரு பெண்களையும் மடக்கி அபராதத் தொகையை வசூலித்துள்ளனர்.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X