ஜப்பானில் பறக்கும் கார் திட்டம்... இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா?

ஜப்பான் அரசு அந்நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டிராபிக்கை தற்போதே கணக்கிட்டு அதற்கு முன்னேற்பாடாக பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியாரை சேர்ந்

By Balasubramanian

ஜப்பான் அரசு அந்நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள டிராபிக்கை தற்போதே கணக்கிட்டு அதற்கு முன்னேற்பாடாக பறக்கும் கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியாரை சேர்ந்த சுமார் 21 நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் 10 ஆண்டுகளில் ஜப்பானில் கார்களை பறக்கவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

பறக்கும் கார்களை நாம் இதுவரை திரைப்படங்களில் கிராபிக்ஸ் காட்சிகளாகவோ அல்லது கார்டூன் சேனல்களிலோ பார்த்திருப்போம். சிறு வயதில் பறக்கும் கார்களில் செல்லவேண்டும் என ஆசைப்பட்ட நாம் விரைவில் அந்த கனவை நினைவாக்க காத்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

பறக்கும் கார்கள் என்பது விரைவில் சாத்தியமாகவுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது ஜப்பானும் இனைந்துள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

ஜாப்பான் அரசு தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களான உபேர், ஏர்பஸ், போயீங், டோயோட்டா குழுமத்தின் ஸ்டார்ட்அப் ஆன கார்டிவேட்டர், ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளட்ட 21 வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவோரை இணைந்து பறக்கும் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜப்பான் அரசு சுமார் 40.4 பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

இந்த 21 குழுமங்களும், பறக்கும் கார் தயாரிக்க பயன்படும் பல்வேறு வகையான தயாரிப்புகளையோ சேவைகளையோ வழங்கி வரும் நிறுவனங்கள். அதிக திறன் கொண்ட பேட்டரி தயாரிக்கும் நிறுவனம், பேட்டரியில் இயங்கும் மோட்டார் தயாரிக்கும் நிறுவனம், பறக்கும் கார்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனம், கார்களுக்கான தின பயன்பாட்டில் அனுபவம் நிறைந்த நிறுவனம் இவ்வாறான நிறுவனங்கள் ஒன்றினைந்துள்ளன.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

இந்நிறுவனங்களின் பிரதி நிதிகள் வரும் 29ம் தேதியில் ஜப்பானில் சந்தித்து இந்த திட்டத்தை எப்படி எடுத்து செல்வது என்ற ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

இதில் உபேர் நிறுவனம் ஏற்கனவே பிரான்ஸ், பாரீஸ் ஆகிய பகுதிகளில் வரும் 2023ம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர தற்போது அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

இது குறித்து ஜப்பான் அரசு கூறுகையில் : "பறக்கும் கார்களை தயாரிக்க ஐப்பான் அரசு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்யும். ஜப்பானில் உள்ள டிராப்பிக்கிற்கு இந்த பறக்கும் கார்கள் தீர்வு சொல்லும் என நம்புகிறோம். இந்த கார்களுக்கு ஏற்றபடி எங்களது சட்ட விதிமுறைகளையும் மாற்ற முடிவு செய்துள்ளோம். " என கூறினார்.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

உலகில் எந்த இடங்களில் தற்போது பறக்கும் கார்கள் செயல்பாட்டில் இல்லை இன்றும் ஆராய்ச்சி மற்றும் விடிவமைப்பில் தான் உள்ளது. பறக்கும் ட்ரோன்கள் தான் பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பறக்கும் ட்ரோன்களுக்கு என்று சில விதிமுறைகளை வைத்துள்ளனர்.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

இதற்கிடையில் உபேர் நிறுவனம், மற்றும் டெக்ஸாஸ் பல்கலை., அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து ராணுவ ஆய்வு லேப்பை அமைத்து அதில் பறக்கும் வானகங்கள் குறித்த தயாரிப்பை உருவாக்கி வருகிறது. தற்போது அந்த குழு புதிய வித ரிக்கிங் ரோட்டார்களை தயாரித்து டெஸ்ட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

மேலும் அதே உபேர் நிறுவனம் தற்போது பாரீஸ் மற்றும் பிரான்ஸ் பகுதியில் பறக்கும் கார்களை தயாரிக்கும் குழுவிற்காக சுமார் 23 மில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளது. தற்போது உள்ள சுழ்நிலையில் இந்தியாவில் பறக்கும் கார் திட்டம் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது சாத்தியம் இல்லை என கூறமுடியும்.

ஜப்பானில் பறக்கும் கார்கள் திட்டம்.. இந்தியாவில் சாத்தியமா?

பிரான்ஸ் மற்றும் பாரீஸ் நகரின் கட்டமைப்புகள் மிக நேர்த்தியாக இருப்பதால் அந்த நாடுகளில் பறக்கும் கார்களை செயல்படுத்துவது சுலபம் ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் கட்டமைப்பு ஒழுங்கு இல்லை. இதனால் இந்தியாவில் தற்போதய சூழ்நிலைக்கு பறக்கும் கார்கள் சாத்தியமில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
japan planing for flying cars by bringing uber,airbus,boeing together. Read in Tamil
Story first published: Monday, August 27, 2018, 14:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X