அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

ஜீப் காம்பஸ் காரை புக் செய்த வாடிக்கையாளருக்கு நீண்ட இழுபறி செய்து டெலிவரி செய்த டீலரை கோவா நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் தவறை செய்யாத இருக்கும் வகையில் அபராதத் தொகை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

நாடு முழுவதும் உள்ள வாகன விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் புக் செய்த நேரத்தில், அவர்களது வாகனங்களை டெலிவரி செய்து வருகின்றனர். மாமூலாக நடைபெற்று வரும் இந்த செய்கையானது, சில சமயங்களில் சொதப்பலைச் சந்திக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டீலர்களின் அக்கறையற்ற செயலே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, டெலிவரியின் கால தாமதம் குறித்து, வாடிக்கையாளர்களுக்கு முறையான தகவல்கூட தெரிவிக்கப்படுவதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் எரிச்சலடைவதுடன், மிகுந்த மன வேதனையும் அடைகின்றனர்.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

இதுபோன்ற ஓர் சம்பவம்தான் யூனியன் பிரதேசமான கோவாவில் அரங்கேறியுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள ஒர்லிம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் டெர்டுலியனோ டேரில் கோம்ஸ். இசைக் கலைஞரான இவர், ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரை வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, அந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும், ஜீப் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற குவாட்ரோஸ் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட்டை அணுகியுள்ளார்.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

இந்த குவாட்ரோஸ் நிறுவனம், ஜீப் நிறுவனம் மட்டுமின்றி, யமஹா, சுஸுகி, வெஸ்பா, அப்ரில்லா, ஃபியட் மற்றும் அபார்த் ஆகிய நிறுவனங்களின் டீலர்ஷிப்பைப் பெற்று இயங்கி வருகிறது.

இந்த நிலையில், இசைக் கலைஞர் கோம்ஸ், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அன்று, குவாட்ரோஸ் மோட்டார்ஸிடம் ரூ. 50 ஆயிரம் செலுத்தி ஜீப் காம்பஸ் காரை புக் செய்தர். அப்போது, இன்னும் இரு வாரங்களில் காரை உங்களுக்கு டெலிவரி செய்துவிடுவோம் என ஷோரூம் நிறுவனத்தின் ஊழியர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் டீலர்களால் கோம்ஸுக்கு காரை டெலிவரி செய்ய முடியவில்லை. மேலும், காரை டெலிவரி செய்ய மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால், இந்த கால அவகாசத்திலும் அவர்களால் காரை டெலிவரியை செய்ய முடியவில்லை. தொடர்ந்து, ஷோரூம் ஊழியர் ஒருவர் காரை 2018 அக்டோபர் 8ம் தேதிக்குள் டெலிவரி செய்துவிடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

இதில் பூரிப்படைந்த கோமஸ், காருக்கான தொகையை வங்கி மூலம் கடன் பெறப்பட்டு செலுத்தியுள்ளார். மேலும், கிடைக்காத காருக்கு இஎம்ஐ தொகையும் வட்டியுடன் செலுத்தி வந்துள்ளார். ஆனால், தொடர்ச்சியாக டெலிவரியில் மட்டும் இழுத்தடிப்பு நீடித்த வண்ணமாகவே இருந்துள்ளது. இவ்வாறு நீண்ட இழுபறிக்கு பின்னர், நான்கு மாதங்கள் கழித்து கோமஸுக்கு கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஜீப் காம்பஸ் கார் டெலிவரி செய்யப்பட்டது.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

முன்னதாக, ஷோரூம் செயலால் மன உலைச்சலுக்கு ஆளான கோமஸ், கோவாவில் உள்ள கன்ஸ்யூமர் கோர்ட்டில் இதுகுறித்து மனு ஒன்றை சமர்பித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு அண்மைமயில் வெளியாகியுள்ளது.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

அதில், வாடிக்கையாளரை நீண்ட நாட்களாக அலைகழிப்ப செய்த குவாட்ரோஸ் டீலருக்கு தண்டனை அளிக்கும் விதமாக, ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், டெலிவரி செய்யப்படாத காருக்கு செலுத்திய இஎம்ஐ-யின் வட்டித் தொகையையும் கோமஸுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட அந்த டீலரை நுகர்வோர் நீதிமன்றம் கடுமையாக சாடியது.

அலைகழித்த டீலர் - வச்சு செய்த நீதிமன்றம்: இனி இந்த தவறை செய்யவே தயங்குவார்கள்...!

ஜீப் நிறுவனம் அதன் காம்பஸ் காரில் முதல் முறையாக 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனை வெளியேற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது யூரோ-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்விற்கு நிகரானதாகும். இந்த கார் குறித்த முழுமையான தகவலை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Compass Delayed Delivery Dealer To Pay Rs 50k Fine To Owner. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X