விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

இந்தியாவில் தற்சமயம் உள்ள பெரிய பிரச்சனைகளில் பெட்ரோல் & டீசல் விலையேற்றங்களும் ஒன்றாகும். குறிப்பாக தினந்தோறும் பைக், கார் போன்ற வாகனங்களை நம்பியே பிழைப்பை ஓட்டும் மக்களுக்கு மிக பெரிய தலை வலியாக எரிபொருள் விலை உயர்வு மாறி வருகிறது.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

இவ்வாறு தொடர்ச்சியாக விலை அதிகரிக்கப்பட்டு வருவதால், பெட்ரோல் & டீசல் விலைகள், ATF எனப்படும் விமான விசையாழி எரிபொருளின் விலைகளை காட்டிலும் சுமார் 30% அதிக விலை கொண்டதாக தற்சமயம் உள்ளது. நாட்டில் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் எரிபொருள்களை காட்டிலும் விமான எரிபொருளின் விலைகளை எவ்வாறு அரசாங்கத்தால் குறைவாக நிர்ணயிக்க முடிகிறது? வாருங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

விமான விசையாழி எரிபொருள் பெரும்பான்மையாக விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் தான் பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பெட்ரோல் & டீசல் விலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.17) இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு இந்தியாவிலேயே பெட்ரோல் & டீசல் விலைகள் அதிகமாக உள்ள இடமாக ராஜஸ்தானின் கங்காநகர் தொடர்கிறது. நேற்று (அக்.18) வரையில் இந்த ராஜஸ்தான் நகரில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் ரூ.117.86 ஆகும். அதுவே 1 லி டீசலின் விலை ரூ.105.95 இருந்தது. வரும் நாட்களில் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம்.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

மறுப்பக்கம் விமான விசையாழி எரிபொருளின் விலையையும் மத்திய அரசாங்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இருப்பினும் பெட்ரோல் & டீசல் விலைகள் உடன் ஒப்பிடுகையில் நாட்டில் ATF-இன் விலை ஏறக்குறைய 30% குறைவாகவே உள்ளது. உதாரணத்திற்கு, தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் ATF-இன் விலை ரூ.79 மட்டுமே ஆகும்.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

ஆனால் இதே டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.105.84 மற்றும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.94.57 ஆகும். இந்த அளவிற்கு வாகன எரிபொருளின் விலைகளும், விமான எரிபொருளின் விலைகளும் வித்தியாசப்படுவதற்கு, அவற்றின் மீது விதிக்கப்படும் வரிகளே மிக முக்கிய காரணம் என செய்திகள் கூறுகின்றன.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

வழக்கமான வாகன எரிபொருள்களை போன்று ATF-விற்கும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் வரிகளை விதிக்கின்றன. எரிபொருள்களின் மதிப்பை கூட்டும் இந்த வரிகள் மாநிலத்திற்கும் மாநிலம் சற்று வித்தியாசப்படுகின்றன. விமான விசையாழி எரிபொருளுக்கு மத்திய அரசாங்கம் நிலையாக 11% வரியை விதிக்கிறது. மாநில அரசாங்கங்கள் விதிக்கும் வரிகள் 0%-இல் இருந்து 30% வரையில் தற்சமயம் உள்ளன.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

அதிகப்பட்சமாக குஜராத்தில் 30% வரி விமான எரிபொருளுக்கு விதிக்கப்படுகிறது. குஜராத்திற்கு அடுத்து நமது தமிழகம் மற்றும் பீகாரில் 29% வரியும், கர்நாடகாவில் 28% வரியும் விதிக்கப்படுகின்றன. ATF மீதான இந்த மதிப்பு கூட்டு வரியை 4 சதவீதத்திற்கு மிகாமல் குறைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் விமான நிலையங்களின் சுமைகளை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

அதிக வரி விதிக்கப்படும் குஜராத்தில் கூட ATF மீதான ஓட்டுமொத்த வரி அதன் மதிப்பில் பாதி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது குஜராத் அரசாங்கம் 30 சதவீத வரி வசூலிக்க, மத்திய அரசு 11 சதவீதத்தை பெற்றுக்கொள்கிறது. அப்படியென்றால் கூட 41% தான் வருகிறது அல்லவா. ஆனால் பெட்ரோல் & டீசல்களுக்கு விதிக்கப்படும் வரிகள் அதிகமாகும்.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

அதாவது சில்லறை பெட்ரோல் விலையில் மட்டுமே சுமார் 60 சதவீதத்தை மத்திய & மாநில அரசாங்கங்கள் வரியாக பெறுகின்றன. டீசலிற்கு 58%. ரூபாயாக பார்த்தோமேயானால், 1 லிட்டர் பெட்ரோலிற்கு ரூ.32.80, டீசலிற்கு ரூ.31.80 ஆகும். மத்திய அரசின் கலால் வரி மற்றும் சரக்கு கட்டணங்கள், மாநில அரசு விதிக்கும் வரி உள்ளிட்டவை மட்டுமில்லாமல் டீலர்கள் எடுக்கும் கமிஷனிற்கும் சேர்த்துதான் நாம் பெட்ரோல் & டீசல் வாங்கும்போது பணம் கொடுத்து வருகிறோம்.

விமான எரிபொருள் விலையே ரூ.79 மட்டுமே, ஆனால் பெட்ரோலின் விலை ரூ.105!! அரசு கூறும் காரணம் என்ன?

டெல்லியில் மாநில அரசாங்கம் ஒரு லிட்டர் பெட்ரோலில் இருந்து ரூ.23-ஐ கலால் வரியாக பெறுகிறது. 1 லி டீசலில் சற்று குறைவாக ரூ.13. ATF, பெட்ரோல் & டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி-இன் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் நாட்களில் எரிபொருள் மீதான வரிகளை கணிசமாக குறைக்க மத்திய அரசின் இந்த நடவடிக்கை உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #எரிபொருள் #fuel
English summary
Why jet fuel for airlines is cheaper than petrol and diesel prices in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X