ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

மருத்துவமனைகளுக்கு செல்வோரை இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுனரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. ஆரம்பத்தில் மிக தீவிரமாக இருந்த வைரஸின் பரவல் பிறகு கடந்த ஆண்டு இறுதிகளில் சற்று குறைய ஆரம்பித்தது.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

குறிப்பாக நமது இந்தியாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு வருடம் துவக்கும் சமயத்தில் சிறிது குறைவாகவே பதிவானது. ஆனால் தற்போது, கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

இதனை சமாளிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தினந்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

குறிப்பாக வட மாநிலங்களில் கொரோனாவினால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாகப்பட்டு வருகின்றன.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

இந்த நிலையில் ராஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் அவரது பகுதியில் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். ரவி என்ற பெயர் கொண்ட அவர், இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருப்பவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்று வருகிறார்.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

இதுகுறித்து ரவி அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, அருகே உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவரை இறக்கிவிட்டதற்கு பிறகு தான் தனக்கு இந்த யோசனை வந்ததாக தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

ரவி தனது அழைப்புப்பேசி எண்ணை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் பதிவிட்டுள்ளார். இதனால் மக்கள் எளிதாக அவரை அணுக முடிகிறது. இந்தியாவில் இதுவரையில் கொரோனாவினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1.8 லட்சத்தை கடந்து கொண்டிருக்கிறது.

ராஞ்சியில் ஹீரோவான ஆட்டோ டிரைவர்!! பெரிய மனசு சார் உங்களுக்கு...

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1.7 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகின்ற இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 23) மஹாராஹ்டிரா, உத்தர பிரதேசம், கேரளா, சட்டிஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி உள்பட 10 மாநில முதமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி உள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Auto Driver Giving Free Ride To Hospital. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X