நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

பொதுமக்கள் முன்னிலையில் இரு காவலர்கள் சண்டையிட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

பொது சாலையில், போக்குவரத்து போலீஸாருக்கும், சட்ட ஒழுங்கு (காக்கி உடை அணிந்த) போலீசுக்கும் இடையே குடுமி-பிடி சண்டை ஏற்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மோதலில் ஈடுபட்ட இரு போலீஸாரையும் பொதுமக்கள் சிலர் விலக்கி விட்டிருப்பதை கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஏன் இந்த பிரச்னை?, எதற்காக போலீஸார் இருவரிடையே மோதல் ஏற்பட்டது?, என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். காவலர்கள் மோதல் நிகழ்வு ஜார்காண்ட் மாநிலத்தின் ராஞ்சி பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

இருசக்கர வாகனத்தில் வந்த இரு காவலர்களில் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்ததன் காரணத்தினாலேயே இந்த மோதல் அரங்கேறியிருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவில், ஒரு போலீஸ்காரர் மட்டுமே ஹெல்மெட் அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

இந்த காரணத்திற்காகவே போக்குவரத்து கான்ஸ்டபிள் இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றார். ஆனால், தன்னை தடுத்து நிறுத்த உனக்கு அதிகாரம் இல்லை என கூறி போக்குவரத்து கான்ஸ்டபிளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார்.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

இருப்பினும், போக்குவரத்து போலீஸ் அவரை விட முன் வரவில்லை. அபராதம் செலுத்திவிட்டு செல்லும்படி கூறினார். இதன் காரணத்தினாலேயே வாக்கு வாதம் முற்றி இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதில், முதலில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலரே அத்துமீறலில் ஈடுபட தொடங்கியதாக சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்கள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

காவலர்களின் இந்த முரண்பாடான செயல் தற்போது அம்மாநில காவல்துறையில் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இரு காவலர்களின் மோதல் குறித்து விசாரிக்க ஜார்கண்ட் மாநிலத்தின் டிராஃபிக் எஸ்பி அஜீத் பீட்டர் உத்தரவிட்டுள்ளார். தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் விதியாகும். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து வரும் சக ரைடரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பதும் மோட்டார் வாகன சட்ட விதியே.

நடு ரோட்டில் குடுமிபிடி சண்டை! காவலர்களின் செயலால் மிரண்டுபோன பொதுமக்கள்... இதுக்கு காரணம் என்ன தெரியுமா?

ஆனால், இதனை பெரும்பாலனோர் மதிப்பதில்லை. இதைக் கடைப்பிடிக்காத பொதுமக்கள் பலரை காவல்துறையினர் தண்டித்திருக்கின்றனர். அபராதங்கள் வாயிலாக உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ஒருவரே இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டியிருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியிருக்கின்றது.

Image Courtesy: The Followup

மேலும், பொதுமக்களுக்கு இது ஓர் தவறான முன்னுதாரணம் என இந்த வீடியோவைப் பார்த்த பலர் தங்களின் கண்டனங்களை முன் வைத்து வருகின்றனர். காவலர்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் அதிகாரிகள் இதுபோன்று விதிமீறலில் முதல் முறையல்ல. விதிமீறல்களுக்காக அவர்கள் அபராதம் மற்றும் உரிய நடவடிக்கைகளைச் சந்தித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Jharkhand Two Policeman Fights In Public Place: Here IS Why?.. Video... Read In Tamil.
Story first published: Tuesday, May 11, 2021, 16:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X