உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

பிரபல இயக்குனர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தற்போது ஆடி ஏ8எல் (Audi A8L) காரை வாங்கியுள்ளார். இது சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கரண் ஜோஹர் சில்வர் நிறத்தில் ஆடி ஏ8எல் சொகுசு செடான் காரை வாங்கியுள்ளார். ஆடி ஏ8எல் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

55 டிஎஃப்எஸ்ஐ (55 TFSI) என்ற பெயரில் இந்த வேரியண்ட் அழைக்கப்படுகிறது. இதன் விலை 1.57 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். அதே சமயம் ஆடி நிறுவனம் ஏ8எல் காருக்கு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

இதனை தேர்வு செய்யும்பட்சத்தில், விலை இன்னும் அதிகரிக்கும். ஆனால் கரண் ஜோஹர் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை தேர்வு செய்தாரா? அப்படி தேர்வு செய்திருக்கும்பட்சத்தில் என்னென்ன வசதிகளை ஆடி நிறுவனம் அவரது விருப்பத்திற்கு ஏற்ப வழங்கியுள்ளது? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

ஆடி ஏ8எல் காரில், 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்திற்காக இந்த இன்ஜின் உடன் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 பிஎஸ் பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு டிப்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

இது க்வாட்ரோ பெர்மனன்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக காரின் 4 சக்கரங்களையும் இயக்குகிறது. ஆடி ஏ8எல் காரின் எடை சுமார் 2.75 டன்கள் ஆகும். இருந்தாலும் கூட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடியது. அத்துடன் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உள்ளிட்ட கார்களுடன் ஆடி ஏ8எல் போட்டியிட்டு வருகிறது. ஆடி ஏ8எல் காரின் இருக்கைகளில் மசாஜ் வசதி, மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, சீட் மெமரி வசதி என பல்வேறு வசதிகள் இருக்கின்றன. பின்புற பயணிகளுக்காக சென்டர் கன்சோல் உடன் இரண்டு தனித்தனியான இருக்கைகளை ஆடி நிறுவனம் வழங்குகிறது.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

மேலும் ஆம்பியண்ட் லைட்டிங், மேட்ரிக்ஸ் ரீடிங் லைட்கள் ஆகிய வசதிகளையும் ஆடி ஏ8எல் பெற்றுள்ளது. அத்துடன் 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியும் ஆடி ஏ8எல் காரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா என ஆடி ஏ8எல் காரில் இடம்பெற்றுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

திரையுலகை சேர்ந்தவர்கள் என்றாலே, அதிலும் குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு கரண் ஜோஹரும் விதிவிலக்கு அல்ல. ஏனெனில் தற்போது புதிதாக வாங்கியுள்ள ஆடி ஏ8எல் தவிர இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை கரண் ஜோஹர் சொந்தமாக வைத்துள்ளார்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

இதில், மெர்சிடிஸ் மேபக் எஸ்500 (Mercedes Maybach S500) குறிப்பிடத்தக்கது. இது முந்தைய தலைமுறை மாடல் ஆகும். இந்த காரில் 4.7 லிட்டர் வி8 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 455 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இதுதவிர இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களையும் கரண் ஜோஹர் சொந்தமாக வைத்துள்ளார்.

உல்லாச கப்பல் மாதிரி இருக்கு... மிகவும் விலை உயர்ந்த ஆடி சொகுசு காரை வாங்கிய பிரபல இயக்குனர்! எவ்ளோ தெரியுமா?

இதில், ஜாகுவார் எக்ஸ்ஜேஎல், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ்350டி மற்றும் பிஎம்டபிள்யூ 570டி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதன் மூலம் கரண் ஜோஹர் சொகுசு கார்களை அதிகம் விரும்ப கூடியவர் என்பதை நாம் உணரலாம். கரண் ஜோஹர் மட்டுமல்லாது பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும் அவ்வப்போது விலை உயர்ந்த கார்களை தொடர்ச்சியாக வாங்கி கொண்டுதான் உள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karan Johar Buys An Audi A8L: Check Details Here. Read in Tamil
Story first published: Tuesday, August 3, 2021, 12:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X