ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

லாக்டவுண் விதிமீறிய வாகன ஓட்டிகள்மீது கர்நாடகா காவல்துறையினர் விநோத நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் மிக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. வைரஸ் தொற்று மற்றும் ஆக்சிஜன் பற்றாக் குறை ஆகியவற்றால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து வருகின்றனர். இருப்பினும், நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அமல்படுத்தினால் அது நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்க செய்யும் என்கிற காரணத்தினால் மத்திய அரசு இந்த நடவடிக்கையைக் கைவிட்டிருக்கின்றது.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

அதேசமயம், பரவல் மிகக் கடுமையாக இருக்கின்ற காரணத்தினால் மாநில அரசுகள் சில மீண்டும் பொது முடக்கத்தை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், கர்நாடகா மாநில அரசு மிக சமீபத்தில் மாநிலம் தழுவிய முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியது.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதைத்தொடர்ந்து, அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர வேண்டாம் என காவல்துறை அறிவித்து வருகின்றது. மேலும், உரிய காரணம் இன்றி வெளியில் வருபவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறியது.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இருப்பினும், மாநிலத்தின் குறிப்பிட்ட சில நகர பகுதிகளில் மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலை தென்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தவகையில், உரிய காரணம் இன்றி சாலையில் சுற்றி திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகள்மீது காவல்துறையினர் விநோத நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதுகுறித்த வெளியாகியிருக்கும் வீடியோ பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். விதிமீறிய வாகன ஓட்டிகள் அனைவரையும் சமூக இடைவெளியுடன் வரிசையாக அமர வைத்திருப்பது போன்ற காட்சிகள் அவ்வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதன் பின்னரே அந்த விநோத சம்பவம் அரங்கேறியது. ஆம், வாகன ஓட்டிகள் அனைவரையும் எழுந்திருத்து நிற்க சொன்ன காவல்துறை அதிகாரி, அவர்களை கைகளை உயர்த்த சொல்லி ஓர் உறுதி மொழியை ஏற்க வைத்தார். அதாவது, இனி பொதுமுடக்க விதியை மீற மாட்டோம் என்ற உறுதிமொழியையே வாகன ஓட்டிகளை ஏற்க செய்திருக்கின்றனர், காவல்துறையினர்.

ஆரம்பிச்சிட்டாங்க... லாக்டவுண் விதி மீறிய வாகன ஓட்டிகள்மீது விநோத நடவடிக்கை... என்ன தெரிஞ்சா அசந்துருவீங்க!!

இதன் பின்னர் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் ஏதும் வழங்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், இதுவரை 2,200க்கும் அதிகமான வாகனங்களை கர்நாடகா காவல்துறைய பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வந்தவர்கள் மீதே இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பதாக காவல்துறை கூறியிருக்கின்றது. அதேசமயம், மருத்துவம் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காக வருபவர்கள் மீது தாங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறியிருக்கின்றனர்.

தமிழகத்திலும் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாநிலத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் இதேபோன்று மக்கள் பொதுமுடக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்காத சூழ்நிலையேக் காணப்படுகின்றது. இன்று (மே10) முதல் நாள் என்பதால் போலீஸார் அறிவுரையுடன் வாகன ஓட்டிகளை அனுமதித்து வருகின்றனர். அதேசமயம், குறிப்பிட்ட சில இடங்களில் போலீஸார் இப்போதே அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karanataka Cops Make Motorists Take Pledge To Not Violate Lockdown Rules. Read In Tamil.
Story first published: Monday, May 10, 2021, 13:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X