இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக மக்கள் தனியாக சாலை அமைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

கர்நாடக மாநிலம் ஹெஜமாடி கிராமத்தில் சுங்க சாவடி அமைந்துள்ளது. அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த கிராம மக்களின் கோரிக்கையை அதிகாரிகள் நிறைவேற்ற மறுத்ததால், அவர்கள் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

ஆம், டோல்கேட்டை ஒட்டி கிராம மக்களே தற்போது தனியாக சாலை ஒன்றை அமைத்து விட்டனர். மங்களூர்-உடுப்பி நெடுஞ்சாலையில் உள்ள சுங்க சாவடியை ஒட்டி இந்த புதிய சாலையை கிராம மக்கள் அமைத்துள்ளனர். அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ஹெஜமாடி கிராம மக்களுக்கு சலுகை வழங்கப்பட்டது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

ஆனால் ஹெஜமாடி கிராமத்தில் பயணிகளை ஏற்றிய 4 பேருந்துகளுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே பேருந்துகளுக்கும் சலுகை வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தரப்பில் இருந்து அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதன்பேரில் ஹெஜமாடி கிராமத்தில் பயணிகளை ஏற்ற வரும் பேருந்துகளுக்கு சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம பஞ்சாயத்து அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது. இதன்பின் ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்த கிராம மக்கள், டோல்கேட்டை ஒட்டி தனியாக தற்காலிமான சாலை ஒன்றை அமைத்து விட்டனர். புதிய சாலை அமைக்கப்படுவது குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், சாலை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை. அதற்கு மாறாக எங்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் முதலில் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே நீண்ட நேரமாக வாக்குவாதம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

இறுதியில் இனிமேல் பேருந்துகளுக்கும் சலுகை வழங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதிமொழி அளித்தனர். ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலைகளை பேருந்துகள் பயன்படுத்த தொடங்கி விட்டன. உள்ளூர் மக்கள் டோல்கேட் கட்டணம் செலுத்துவதை விரும்பவில்லை. சுதந்திரமாக சென்று வர வேண்டும் என விரும்புகின்றனர்.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

எனவே உள்ளூர் கிராம மக்களுக்கு பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, இந்த பாஸ்கள் பயனற்றதாக மாறி விட்டதாக உள்ளூர் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்தியாவின் சில டோல்கேட்களில், உள்ளூர் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் சாலை உள்ளது. ஆனால் ஹெஜமாடி கிராம மக்களுக்கு அந்த வசதி இல்லை.

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்...

எனவே ஹெஜமாடியை சேர்ந்த கிராம மக்களே ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து தனியாக சாலை அமைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த என்ன நடக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka: Angry With Toll Plaza, Villagers Constructed New Road. Read in Tamil
Story first published: Wednesday, April 7, 2021, 14:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X