கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

கேஸ் விக்குற விலையில இங்க ஒரு ஆட்டோக்காரர் 50 சதவீதம் கட்டணம் சலுகை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

தற்போதையே நிலவரப்படி ஆட்டோ எல்பிஜி கேஸ் ரூ. 60க்கும் அதிகமா விற்கப்பட்டு வரும்நிலையில் ஒற்றை ஆட்டுநர் தன்னுடைய ஃபேவரிட் நடிகரின் இழப்பை அனுசரிக்கும் விதமாக 50 சதவீதம் சலுகை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

கன்னடா திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான புனித் ராஜ்குமார் அண்மையில் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென இந்த உலகை விட்டு மறைந்தார். நடிகரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கி போட்டது என்று கூறலாம். அவர் வெறும் நடிகராக மட்டுமே இருந்திருந்தால் அவருடைய மறைவு கர்நாடகா மாநிலத்தோடு ஓர் நாள் துக்க அனுசரிப்புடன் முடிவடைந்திருக்கும்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

ஆனால், சாதரணமான சாமானியனாக அவர் வாழ்ந்த வாழ்க்கை, ஏழைகளுக்காக அவர் ஆற்றிய தொண்டுகள் நாட்டையே கண்கலங்க வைத்துவிட்டது. இந்திய பிரதமர் முதல் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் வரை இவரது இழப்பிற்கு துக்க அனுசரிப்பை அறிவித்தனர். இப்போதும் இவரின் இழைப்பை நினைத்து வாடும் அவரது ரசிகர்கள் பலர் உள்ளனர்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

இத்தகைய ஓர் நடிகரின் நினைவாகவே ஓர் ஆட்டோ ஓட்டுநர் வித்தியாசமாக 50 சதவீத கட்டண ஆஃபரை அவரது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றார். புனித் ராஜ்குமார் மறைவை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு மாதமும் 17 ஆம் தேதி அன்றே இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூருவைச் சேர்ந்த தேவாதித்யா எனும் ஆட்டோ ஓட்டுநரே கன்னட நடிகர் மறைவை முன்னிட்டு சலுகையை வழங்கி வருகிறார். ஆனால், மார்ச் 17 ஆம் தேதியே அந்த சலுகை வழங்கப்படுகின்றது. இது புனித் ராஜ்குமாரின் பிறந்த நாள் ஆகும். புனித் மறையவில்லை அவர் நம் நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார் என்பதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த தினத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஆஃபரை வழங்கி வருகின்றார்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

ஆட்டோ ஓட்டுநரின் இந்ச செயல் ஒட்டுமொத்த பெங்களூரு வாசிகளை ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. தற்போது ஆட்டோ கேஸ் விற்கும் விலைக்கு பல ஆட்டோ ஓட்டுநர் கொள்ளைக் கட்டணம் மக்களை வாட்டி வருகின்றனர். குறிப்பாக சிலர் மீட்டருக்கு மேல் "20 கொடுங்க 30 கொடுங்கனு" வற்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் எந்த பலனும் பாராமல், தான் ஓர் தீவிர ரசிகன் என்பதை வெளிக்காட்டும் ஒரே நோக்கத்தில் 50 சதவீத சலுகையை ஆட்டோக்காரர் அறிவித்திருக்கின்றார்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

இதன் வாயிலாக பெங்களூரு வாசிகளின் மனதில் அந்த ஆட்டோ ஓட்டநர் இடம் பிடித்துவிட்டார். தான் ஓர் புனித் ராஜ்குமாரின் தீவிர ஃபேன் என்பதை தெரிவித்த அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய இறுதி மூச்சு வரை அவரின் உண்மையான ரசிகன் என்பதை நிரூபிக்கப் போவதாக தெரிவித்தார். அதாவது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த சிறப்பு சலுகையை வழங்க இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர் கூறியிருக்கின்றார்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

இதுமட்டுமில்லைங்க, ஆட்டோ முழுவதும் நடிகருடையை புகைப்படத்தால் அவர் அலங்காரம் செய்திருக்கின்றார். இதுதவிர புனித்தின் மறைவை அனுசரிக்கும் வசனம் ஒன்றையும் அவர் ஆட்டோவின் பின்பக்கத்தில் எழுதியிருக்கின்றார். ஆட்டோக்களில் படங்கள் மற்றும் வசனங்கள், ஏன் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களைகூட இதற்கு முன்னதாக ஆட்டோ ஓட்டுநர்கள் ஒட்டியிருக்கின்றனர்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

ஆனால், தன்னுடைய இழப்பை எப்படி விவரிப்பது என்பது தெரியாமல் ஆட்டோ ஓட்டுநர் வழங்க தொடங்கியிருக்கும் இந்த வித்தியாசமான கட்டண சலுகை ஒட்டுமொத்த கர்நாடகா மக்களையும் வெகுவாக கவர தொடங்கியிருக்கின்றது. நடிகர் புனித் ராஜ்குமார் 2021 அக்போடர் 29 அன்றே இந்த உலகை விட்டு மறைந்தார்.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

உடற்பயிற்சியின்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரது உயிர் உடலை விட்டு பிரிய காரணமாக அமைந்திருக்கின்றது. இவரது மறைவு கன்னடா திரையுலகிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும். அவர்களுக்கு மட்டுமில்லைங்க கன்னட மக்களுக்கும் அவரின் மறைவு அழிக்க முடியாத வடுவாக மாறியுள்ளது.

கேஸ் என்ன விலை விக்குது... இந்த மாதிரியான நேரத்துல 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆட்டோ கேஸ் ரூ. 66க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த விலை விரைவில் ரூ. 100 தொடும் அளவிற்கு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே 17ம் தேதி மட்டும் சிறப்பு கட்டண சலுகையை ஆட்டோ ஓட்டுநர் வழங்கிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: News18

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka auto driver announces discount for every riders on puneeth rajkumar s birthday
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X