நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

கார் கண்ணாடியை மாடு துவம்சம் செய்யும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

இந்தியாவின் டயர்-II, டயர்-III நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில், உரிய அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக மாட்டு வண்டி பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மஹாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களை ஒட்டிய பகுதிகளில், சட்டத்திற்கு புறம்பாக குதிரை வண்டி பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

இந்த சூழலில், பொது சாலைகளில் ஏன் இத்தகைய பந்தயங்களை நடத்த கூடாது? என்பதை புரிய வைக்கும் வகையிலான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் குதிரை வண்டி பந்தயம் எவ்வளவு பிரபலமாக உள்ளதோ, அதேபோல் கர்நாடக மாநிலம் பெல்காம் சுற்று வட்டார பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

பெல்காம் சுற்று வட்டார பகுதிகளில் பண்டிகை காலங்களில், மாட்டு வண்டி பந்தயம் ஜோராக நடத்தப்படும். பலர் பொது சாலைகளிலேயே பந்தயங்களை நடத்துவார்கள். தற்போது வெளியாகியுள்ள வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன் பொது சாலைகளில் இத்தகைய பந்தயங்களை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துரைக்கிறது.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

ஒரு காரின் உள்ளே இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ, பெல்காமில் உள்ள ஒரு குறுகலான பாலத்தை நமக்கு முதலில் காட்டுகிறது. பாதிப்பிற்கு உள்ளான காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்துள்ளார். பாலத்தின் மீது போதிய இடம் இல்லாத காரணத்தால் இந்த விபரீத சம்பவம் நடைபெற்றுள்ளது.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

இந்த வீடியோவில் கார் ஒன்று பாலத்தின் மீது வந்து கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. அப்போது ஒரு மாட்டு வண்டி அந்த காரை கடந்து சென்று விடுகிறது. இதன் பின் மற்றொரு மாட்டு வண்டியும் காரை கடக்கிறது. அந்த சமயத்தில் மூன்றாவதாகவும் ஒரு மாட்டு வண்டி காருக்கு நேர் எதிராக வந்து கொண்டிருந்தது.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

மாட்டு வண்டியை பார்த்ததும், காரின் டிரைவர் வண்டியை அப்படியே நிறுத்தி விட்டார். மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரும் வண்டியை நிறுத்தி விடுவார் என காருக்கு உள்ளே இருந்தவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு. மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரால், துரதிருஷ்டவசமாக மாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

இதனால் மாடு நேராக வந்து காரின் முன்பக்க விண்டுஷீல்டு மீது பயங்கரமாக மோதி விட்டது. இதனால் கார் விண்டு ஷீல்டு நொறுங்கி போனது. மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர், மாடுகளை கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரால் அது முடியாமல் போய் விட்டது. மாடுகள் சிறு வயதில் இருந்தே அதன் உரிமையாளர்களால் பாசமாக வளர்க்கப்படுகின்றன.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

எனவே உரிமையாளர்களுக்கு அவை கட்டுப்படும் என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் விலங்குகளை கணிப்பது கடினம் என்பதையும் மறுத்து விட முடியாது. அதனால்தான் இந்த சம்பவம் நடந்தது. ஒரு சில சமயங்களில் வளர்ப்பு விலங்குகளை கட்டுப்படுத்துவதும் கூட கடினம்தான். தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

காரின் மீது மாடு மோதிய சம்பவத்திற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் காரின் முன்பக்க விண்டுஷீல்டு நொறுங்கி விட்டதை மேலே உள்ள வீடியோ நமக்கு தெளிவாக காட்டுகிறது. தற்போது அந்த காரின் உரிமையாளர் விண்டுஷீல்டை மாற்றியாக வேண்டும். இது கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலையாகும்.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

இது போன்ற சம்பவங்களை இனி தவிர்க்க வேண்டுமெனில், மாட்டு வண்டிகளில் வருபவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். இந்தியாவில் மாட்டு வண்டிகளால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது என்றால், கால்நடைகளாலும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பெரு நகரங்களில் கூட கால்நடைகள் சாலைகளில் தாறுமாறாக சுற்றி திரிகின்றன.

நான் பாட்டுக்கு செவனேனுதான இருந்தேன்... கார் டிரைவரை புலம்ப வைத்த கோவக்கார மாடு... வைரல் வீடியோ

ஆடு, மாடு போன்றவை திடீரென வாகனத்தின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்களில் சிக்க நேரிடுகிறது. எனவே ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள், அவற்றை சாலையில் திரிய விடாமல், முறையாக பாதுகாக்க வேண்டும். இதை அனைவரும் முறையாக செய்தால், இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறையும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka - Bullock Cart Crashes Into Car On Highway - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X