Just In
- just now
டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவிரி எப்போது துவங்குகிறது?
- 45 min ago
மின்சார கார்களை வரிசை கட்டப்போகும் ஜீப் நிறுவனம்!
- 2 hrs ago
நீங்கள் எதிர்பார்க்கும் புதிய அம்சங்களுடன் வருகிறது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350!
- 12 hrs ago
புதிய மாடல்கள் வெகு விரைவில் அறிமுகம்... பஜாஜ் பல்சர் பைக்குகளில் அதிரடி மாற்றம்... என்ன தெரியுமா?
Don't Miss!
- News
சபரிமலை செல்லும் பிந்து அம்மினி, ரெஹானா பாத்திமாவுக்கு பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு
- Technology
கேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்
- Finance
இது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..!
- Movies
முடியப்போகிறது 2019.. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோத பயம்.. ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள்!
- Sports
பலமான ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஐஎஸ்எல் தொடரில் சுவாரஸ்ய மோதல்!
- Education
IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு!
- Lifestyle
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாக்கடையில் கவிழ்ந்த கார்... மனைவி மீது போலீஸில் கணவன் புகார்! எதற்காக என தெரிந்தால் சிரிக்க கூடாது
சாக்கடையில் கார் கவிழ்ந்ததால், தனது மனைவி மீது கணவர் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ் (39 வயது). இவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் வேலையை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹெப்ரி எனும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். 37 வயதாகும் மஞ்சுளாவிற்கு நன்றாக கார் ஓட்ட தெரியும். அதற்கான டிரைவிங் லைசென்ஸையும் மஞ்சுளா வைத்துள்ளார்.

இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நாகராஜ்-மஞ்சுளா தம்பதியினர், ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள சாகர் எனும் ஊருக்கு கடந்த திங்கள் கிழமை சென்றிருந்தனர். இதன்பின் மறுநாள், அதாவது செவ்வாய் கிழமை காலை ஷிவமோகா மாவட்டம் ஹொசநகர் வழியாக அவர்கள் ஹெப்ரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை மஞ்சுளா ஓட்டி வந்தார். இது அவர்களது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கார் ஆகும். நாகராஜ்-மஞ்சுளா ஆகியோருடன் அவர்களது 6 வயது மகன் இஸான், மஞ்சுளாவின் சகோதரி சுமானா (40 வயது) ஆகியோரும் காரில் வந்து கொண்டிருந்தனர்.

மேலும் அவர்களின் உறவினரான சுபர்பா (15 வயது) என்பவரும் காரில் இருந்தார். இந்த காரை மஞ்சுளாதான் ஓட்டி சென்றார். அவரின் கணவரான நாகராஜ் முன்பக்க பாசஞ்சர் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் தன் மனைவிக்கு வழிகாட்டியபடி இருந்தார். கார் புறப்பட்ட கொஞ்ச நேரம் அனைத்தும் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது.

ஆனால் ராமச்சந்திராபுரா எனும் இடத்திற்கு அருகே வந்தபோது, காரின் கட்டுப்பாட்டை மஞ்சுளா இழந்ததாக கூறப்படுகிறது. சாலை மோசமாக இருந்ததால், மஞ்சுளா திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் தாறுமாறாக ஓடிய அந்த கார், அங்கிருந்த சாக்கடை கால்வாய் ஒன்றில், தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடைபெற்ற உடனேயே நாகராஜ் விண்டோவின் மூலமாக வெளியேறினார். மேலும் காருக்குள் சிக்கி கொண்டிருந்தவர்களையும் அவர் காப்பாற்றினார். அதிர்ஷ்டவசமாக காருக்குள் இருந்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் இந்த விபத்திற்கு பின்பு நாகராஜ் என்ன செய்தார்? என்பதுதான் ஹைலைட்டே.

அலட்சியமாகவும், கண்மூடித்தனமாகவும் வாகனம் ஓட்டியதாக உள்ளூர் போலீசில் அவர் உடனடியாக தனது மனைவி மீது புகார் அளித்தார். இதன்பேரில் பொறுப்பற்ற வகையிலும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக மஞ்சுளா மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் நடைபெறுவது என்பது ஒன்றும் அரிதான விஷயமல்ல. ஆனால் விபத்திற்கு காரணமான டிரைவர் மீது அதே வாகனத்தில் பயணம் செய்த பயணி புகார் அளிப்பது என்பது நிச்சயமாக ஒரு அரிதான விஷயம்தான். அதிலும் கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவம் அரிதிலும் அரிதான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் விபத்திற்கு காரணமான டிரைவர் தன் மனைவி என்றும் பாராமல், கணவர் அதிரடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும், மனைவி என்றும் பார்க்காமல் நாகராஜ் போலீசில் புகார் அளித்திருப்பது உண்மையில் பாராட்ட வேண்டிய விஷயம்தான். இது அவரது பொறுப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் உள்ள கடமை உணர்ச்சியை காட்டுகிறது.

உண்மையை சொல்வதென்றால், பொறுப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அரிதான ஒரு விஷயமாகி விட்டது. இப்படிப்பட்ட சூழலில், மனைவியின் மீதே புகார் அளித்ததன் மூலமாக நாகராஜ் கவனம் பெறுகிறார். இது தொடர்பான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.