என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

புல்லட்டை விட அதிகம் சத்தம் வந்த காரணத்தால் கவாஸாகி நிஞ்சா பைக்கை போலீஸார் பறிமுதல் செய்யும் கட்சிகள் வெளியாகியுள்ளது.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

வாகனங்களின் உண்மையானத் தோற்றத்தை மாடிஃபை செய்து இயக்குவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற கலாச்சாரங்கள் அண்மைக் காலங்களாக பெருகி வருவதால், இதனை தவிர்க்கும் விதமாக உச்சநீதிமன்றம், சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பத்திருந்தது.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

அதில், "மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆர்டிஓ அதிகாரிகள் சாலையில் செல்லும் மாடிஃபை வாகனங்களைக் கண்டறிந்து. அவற்றின் உரிமையாளர்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் குழுவாக சென்ற பைக் ரடர்களை அம்மாநில போக்குவரத்து போலீஸார் மடக்கியுள்ளனர். அதில், அதிகம் சத்தம் எழுப்பியதாக கவாஸாகி நிஞ்சா 1000 மாடல் பைக்கை மட்டும் பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், நிஞ்சா 1000 மாடல் பைக்கில் எந்தவொரு மாடிஃபிகேஷனும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

இருப்பினும், பைக்கை பிடித்த போலீஸார், அதில் அதிகம் சத்தம் வருகிறதே ஏன் எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பைக்கின் உரிமையாளர், "இது லிட்டர்-கிளாஸ் பைக். குறைவான கியரில் செல்லும்போது, சற்று அதிகமான சத்தத்தை வெளிப்படுத்தும். அதேசமயம், இந்த சைலன்சரை நாங்கள் மாடிஃபை செய்யவில்லை. இது பைக் நிறுவனம் வழங்கிய ஒன்று" என தெரிவித்தனர்.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

இவற்றில், எதிலுமே சமாதானமாகாத அந்த போக்குவரத்து கான்ஸ்டபிள், ஒயர்லெஸ் மூலம் தலைமை காவலரைத் தொடர்பு கொண்டார். அப்போது, பேசிய அவர், நிஞ்சா பைக்கை காவல் நிலையம் அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல் நிலையம் எடுத்துச் செல்லப்பட்ட கவாஸாகி நிஞ்சா 1000 மாடல் பைக்கை தலைமை காவலர் ஆய்வு செய்தார். பின்னர், தன் முன்பாக அந்த வாகனத்தை இயக்கும்படி கூறியுள்ளார்.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

இதையடுத்து, பைக்கின் உரிமையாளர் போலீஸாருக்கு முன்பாக, நிஞ்சா பைக்கை 6-ஆவது கியரில் வைத்து இயக்கினார். அப்போது சத்தம் லேசாக வந்துள்ளது. இதன்பின்னர், வாகன ஓட்டிகள் அளித்த விளக்கத்திற்கு பின்னர், எந்தவொரு அபராதமும் இன்றி அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

என்ன இதுல புல்லட்ட விட அதிகமா சத்தம் வருது: போலீஸின் அறியாமையால் அவதிக்குள்ளான பைக்கர்கள் -வீடியோ!

போக்குவரத்து பாதுகாப்பில் இருக்கும் போலீஸார்கள் இதுபோன்று சிறு தகவல்களை தெரிந்துக்கொள்ளாமல் இருப்பதால், இச்சம்பவத்தைப்போன்றே பல உயர்ரக பைக்குகளின் உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தகவல்களைத் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது தவறில்லை. ஆனால், பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸார் இதுபோன்ற சத்தங்களை அளவெடுக்கும் டெசிபல் கருவியைப் பயன்படுத்தாமல் இருப்பது தான் வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது என அந்த வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும், இந்த காட்சிகள் அனைத்தும் பைக்கர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியிருந்தது. இதனை ஜாட் பிரப்ஜோத் எனும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kawasaki Ninja Superbike BUSTED By Cops In Himachal. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X