இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்ட பைக் சைலென்சரை போலீசார் நொறுக்கியுள்ளனர். இதன் விலை நமக்கு மயக்கத்தை வரவழைக்கிறது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

இந்தியாவில் பைக் உரிமையாளர்கள் பலர், ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை (Aftermarket Exhaust) பொருத்தி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதில் இருந்து எழும் சப்தம் மிகவும் பிடித்தமானதாக இருப்பதால், தங்கள் பைக்குகளில் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை பொருத்தி கொள்கின்றனர். மோட்டார்சைக்கிள் காதலர்கள் இதை விரும்பினாலும், சாதாரண மக்கள் இதனை ரசிப்பதில்லை.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்கள் எழுப்பும் சப்தம், சாலைகளில் கடுமையான இரைச்சலை ஏற்படுத்துவதே இதற்கு காரணமாக உள்ளது. ஆனால் பைக் காதலர்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்கள் கிடைக்கின்றன. இது பைக் காதலர்களுக்கு சௌகரியமாக அமைந்து விடுகிறது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

இன்னும் சிலரோ மிகவும் விலை உயர்ந்த ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை கூட வாங்கி தங்கள் பைக்கில் இன்ஸ்டால் செய்து கொள்கின்றனர். அப்படி மிகவும் விலை உயர்ந்த ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்டை வாங்கி பைக்கில் பொருத்திய நபருக்கு, காவல் துறையினரால் நடந்த சோக சம்பவத்தைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராகவும், அதன் உரிமையாளர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் விதிமுறைகளை மீறி ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை பொருத்திய பைக் உரிமையாளர்கள் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்ட பைக்குகளை கண்டறிவதற்காகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், காவல் துறை தரப்பில் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்படுகிறது. இதில், கண்டறியப்படும் வாகனங்களில் இருந்து ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்து விடுகின்றனர்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

சில சமயங்களில் ரோடு ரோலர்களை பயன்படுத்தி கூட, ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்கள் மொத்தமாக அழிக்கப்படுகின்றன. இப்படி ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை காவல் துறையினர் அழிக்கும் பல வீடியோக்களை நாம் கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். இதில், சம்பந்தப்பட்ட பெரும்பாலான மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்துடையதாகதான் இருக்கும்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

உண்மையில் ராயல் என்பீல்டு உரிமையாளர்கள்தான் அதிக அளவில் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர்ஆர் (Kawasaki Ninja ZX10 RR) பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் ஒன்று சமீபத்தில் கர்நாடக மாநில காவல் துறையால் அழிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

இது மிகவும் விலை உயர்ந்த எஸ்சி-ப்ராஜெக்ட் எக்ஸாஸ்ட் ஆகும். இதன் விலையே மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதுகுறித்த வீடியோ 'கேட்ச் ஏ மைல்' என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. கவாஸாகி நின்ஜா இஸட்எக்ஸ் 10ஆர்ஆர் பைக்கில் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்தியிருந்த காரணத்திற்காக, போலீசார் எப்படி நிறுத்தினர்? என்பதை இதில் தோன்றும் நபர் கூறுகிறார்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

சாலையில் பைக் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் மேக்ஸிம் அளவிற்கு பைக்கை 'ரெவ்' செய்து காட்டும்படி கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு வீடியோ ஜர்னலிஸ்ட் என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அத்துடன் பைக்கின் சப்தத்தை பதிவு செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

எனவே கௌதமும் அதை செய்து காட்டினார். கௌதம்தான் அந்த பைக்கின் உரிமையாளர். ஆனால் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பொருத்திய காரணத்திற்காக, அவருக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து விட்டனர். அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வரும்படியும் கௌதமை போலீசார் கேட்டுக்கொண்டனர்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதும் பைக்கிலிருந்து எக்ஸாஸ்ட்டை அகற்றும்படி போலீசார் அவரிடம் கூறினர். இதன்பேரில் கௌதமும் எக்ஸாஸ்ட்டை கழற்றி விட்டார். பைக் மெக்கானிக் வருவதற்காக கூட கௌதம் காத்திருக்கவில்லை. அவராகவே அதை செய்து விட்டார். அத்துடன் பைக்கின் ஸ்டாக் எக்ஸாஸ்ட் அமைப்பையும் கௌதம் இன்ஸ்டால் செய்து விட்டார்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

எனினும் எஸ்சி-ப்ராஜெக்ட் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்டை காவல் துறையினர் கௌதம் வசம் திரும்ப ஒப்படைக்கவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து அதனை பெற்று கொள்ளலாம் என அவர்கள் கௌதமிடம் கூறியதாக தெரிகிறது. இதன் பேரில் ஒரு சில நாட்கள் கழித்து அதனை திரும்ப பெற கௌதம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

புதிய விதிமுறைகளின்படி, சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு எக்ஸாஸ்ட் அமைப்பு என்றாலும், அதனை தங்களால் பறிமுதல் செய்யவும், அழிக்கவும் முடியும் என கௌதமிடம் போலீசார் கூறியுள்ளனர். அதன் மதிப்பு மற்றும் விலை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனவும் காவல் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

அதற்கு ஏற்ப அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் சரி செய்ய முடியாத வகையில், நொறுங்கிய வடிவத்தில் இருந்தது. எஸ்சி-ப்ராஜெக்ட் எக்ஸாஸ்ட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதியாகின்றன. அதன் உரிமையாளர் தெரிவித்த தகவல்களின்படி பார்த்தால், அதன் விலை 1 லட்ச ரூபாய்க்கும் நெருக்கமாக வருகிறது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் அமைப்புடன் சட்ட விரோதமாக சாலையில் பயணம் செய்ததற்காக, அவர் கடுமையான அபராதத்தையும் செலுத்தியுள்ளார். அப்படி இருந்தும் காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். பொதுவாக மோட்டார்சைக்கிள்களில் இத்தகைய எக்ஸாஸ்ட்களை பொருத்துவது இந்தியாவில் சட்ட விரோதம் கிடையாது.

இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ஆனால் பொது சாலைகளில் அதனை பயன்படுத்த கூடாது. அவ்வளவுதான். ரேஸ் டிராக் போன்ற இடங்களில் பயன்படுத்தி கொள்ள முடியும். இதன்படி ஸ்டாக் எக்ஸாஸ்ட்டை நீக்கி விட்டு, அரசு நிர்ணயித்த அளவை விட அதிக ஒலி எழுப்பும் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்கள் பொருத்தப்பட்ட பைக்கை பொது சாலையில் பயன்படுத்தினால், இதுபோல் பறிமுதல் செய்து அழிக்கப்படும்.

எனினும் மிக விலை உயர்ந்த எக்ஸாஸ்ட் என்பதால், ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்பது பைக் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்த விஷயத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? காவல் துறை எடுத்த நடவடிக்கை சரிதானா? அல்லது ஒரு முறை எச்சரிக்கை விடுத்திருக்கலாமா? என்பதை கமெண்ட் பாக்ஸ் மூலம் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kawasaki Ninja ZX10 RR Superbike's Imported Exhaust Worth Rs.1 Lakh Destroyed By Karnataka Police. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X