சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண் குமார் புருஷோத்தமன். இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் செவிலியராக இவர் பணியாற்றி வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு பணிகளில், அருண் குமார் புருஷோத்தமன் முன்களத்தில் நின்று போரிட்டு கொண்டுள்ளார்.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

இதற்கு இடையில் அவ்வப்போது கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தை பயன்படுத்தி, தன் 10 வயது மகனுக்காக ஜீப் வில்லீஸ் (Jeep Willys) காரின் மினியேச்சர் வெர்ஷனை அவர் புருஷோத்தமன் உருவாக்கியுள்ளார். இந்த குட்டி ஜீப் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சங்களே அதற்கு முக்கிய காரணம்.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

இந்த குட்டி ஜீப்பின் எடை சுமார் 75 கிலோ. வெறும் ஏழு மாதங்களில் அருண் குமார் புருஷோத்தமன் இதனை உருவாக்கியுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப் வில்லிஸை மனதில் வைத்து, இந்த குட்டி கார் உருவாக்கப்பட்டுள்ளது. தனது அன்றாட பணிகளுக்கு மத்தியில், ஓய்வு நேரத்தின் மூலம், அருண் குமார் புருஷோத்தமன் இதனை உருவாக்கியுள்ளார்.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

இந்த குட்டி ஜீப்பில், ராயல் என்பீல்டு பைக்கின் அனலாக் கன்சோல் யூனிட்டை அருண் குமார் புருஷோத்தமன் பயன்படுத்தியுள்ளார். அத்துடன் சஸ்பென்ஸன் மெக்கானிசத்தை மேம்படுத்துவதற்காக, உண்மையான ஜீப்பின் மெட்டல் பிளேட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த குட்டி ஜீப்பில், 24V டிசி மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்பக்க ஆக்ஸிலுடன் அது இணைக்கப்பட்டுள்ளது.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

உண்மையான ஜீப் வில்லிஸ் லுக்கை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஃபேப்ரிக் ரூஃப்பை அருண் குமார் புருஷோத்தமன் பயன்படுத்தியுள்ளார். உண்மையான காரை போலவே இதிலும், தேவைப்படும் நேரத்தில் ஃபேப்ரிக் ரூஃப்பை மடித்து வைத்து கொள்ள முடியும். இந்த குட்டி ஜீப்பிற்கு என்று ஸ்பெஷல் டூல்கிட் ஒன்றையும் அருண் குமார் புருஷோத்தமன் உருவாக்கியுள்ளார்.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

டிரைவர் இருக்கைக்கு அடியில் இந்த டூல்கிட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெட்லேம்ப்கள், இன்டிகேட்டர்கள், வைப்பர்கள், ஹாரன், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், இன்டீரியர் லைட்கள், பனி விளக்குகள் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ரியர் வியூ மிரர்கள் ஆகியவையும் இந்த குட்டி ஜீப்பில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பிரத்யேகமான முதலுதவி பெட்டியும் வைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

ஒவ்வொருவருக்கும் நாம் செய்யும் வேலைகளுடன் சேர்த்து தனித்திறமைகள் ஏதாவது ஒன்று நிச்சயமாக இருக்கும். அப்படி அருண் குமார் புருஷோத்தமனிடம் இருக்கும் திறமைதான் இது. இதுபோன்ற குட்டி வாகனங்களை உருவாக்குவதில், அருண் குமார் புருஷோத்தமன் கை தேர்ந்தவராக விளங்குகிறார். செவிலியர் பணிக்கு மத்தியிலும் அவர் இதனை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

சூப்பர் அப்பா... பையனுக்காக கொரோனா போர் வீரர் செய்த காரியம்... ஆச்சரியத்தில் வாயை பிளந்த மக்கள்...

இந்த குட்டி ஜீப்தான் அருண் குமார் புருஷோத்தமனின் முதல் தயாரிப்பு என நினைத்து விட வேண்டாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குட்டி ஆட்டோ ரிக்ஸா ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது குட்டி ஜீப்பும் சேர்ந்துள்ளது. அருண் குமார் கிரியேட்டிவிட்டி என்ற யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.

மினி ஆட்டோ ரிக்ஸா, ஜீப் என தொடர்ச்சியாக அசத்தி வரும் அருண் குமார் புருஷோத்தமனுக்கு, கேரளாவை கடந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோல் இன்னும் பல்வேறு தயாரிப்புகளை அருண் குமார் புருஷோத்தமன் உருவாக்குவதற்கு நாமும் வாழ்த்துவோம்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Father Builds Miniature Jeep Willys For His Son: Video
Story first published: Tuesday, June 30, 2020, 15:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X