ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

இஸ்லாமியர் ஒருவரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. அத்துடன் டீசல் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கேரள மாநிலத்தில் அதிசய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆம், அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்று, ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக 3 லிட்டர் பெட்ரோல், டீசலை வழங்கி அசத்தியுள்ளது.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

காசர்கோடு மாவட்டத்தின் பெர்லா எனும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில்தான் 3 லிட்டர் எரிபொருள் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கடந்த திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இரவு 9.30 மணியளவில் பெட்ரோல் பங்க் மூடப்பட்டது.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

அப்போது 313 ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக தலா 3 லிட்டர் பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டிருந்தது. இந்த பெட்ரோல் பங்க்கை நிர்வகித்து வரும் சித்திக் மடுமூல் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 97.70 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 93.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

எனவே அன்றைய தினம் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் மற்றும் டீசலை அந்த பங்க் நிர்வாகம் ஆட்டோ டிரைவர்களுக்கு இலவசமாக வழங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்க் சித்திக் மடுமூலின் மூத்த சகோதரர் அப்துல்லா மடுமூலுக்கு சொந்தமானது. அப்துல்லா மடுமூல் அபுதாபியில் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில், சித்திக் மடுமூல் பெட்ரோல் பங்க்கை கவனித்து வருகிறார்.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

தற்போதைய நிலையில் ஆட்டோ டிரைவர்கள் இரண்டு காரணங்களால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஊரடங்கு ஆகியவைதான் அந்த 2 காரணங்கள். எனவே ஆட்டோ டிரைவர்களின் சுமையை குறைக்கும் வகையில், இந்த பெட்ரோல் பங்க் நிர்வாகம் இலவசமாக பெட்ரோல், டீசல் வழங்கியுள்ளது.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

இது தொடர்பாக சித்திக் மடுமூல் கூறுகையில், ''கருணை அடிப்படையில்தான் இதனை நாங்கள் செய்தோம். தொழிலை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை'' என்றார். பெட்ரோல், டீசல் இலவசமாக வழங்கப்படுவது தொடர்பான தகவல் அறிந்ததும், ஆட்டோ டிரைவர்கள் பலர் அங்கு ஆர்வத்துடன் திரண்டனர்.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்தும் கூட வந்திருந்தனர். ஒரு லிட்டர் எரிபொருள் செலவாகி விட்டாலும், மீதி 2 லிட்டர்கள் லாபம்தான் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் பெட்ரோல், டீசலை இலவசமாக வழங்கிய பங்க் உரிமையாளருக்கு அவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தும் கொண்டனர்.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

அத்துடன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிக வரிகள் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருத்தருக்கு இத்தனை லிட்டர் இலவசமா? இஸ்லாமியரின் பெட்ரோல் பங்க்கில் நம்ப முடியாத சம்பவம்... மனுஷன் வள்ளல்யா!

அல்லது ஜிஎஸ்டி வரம்பிற்குள்ளாவது பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில், பெட்ரோல், டீசலின் விலை குறையும். ஆனால் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா? என்பது சந்தேகமே.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Fuel Station Gave 3 Litres Of Petrol, Diesel For Free To Auto Drivers: Here Is The Reason Why. Read in Tamil
Story first published: Saturday, June 19, 2021, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X