டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

கேரள மாநில அரசு எடுத்துள்ள ஒரு நடவடிக்கை தற்போது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், ஓட்டை, உடைசல் நிலையில் உள்ள பழைய பேருந்துகளை பயணிகளின் சேவையில் ஈடுபடுத்துவதாக மிக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு சில மாநிலங்களின் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதால், வேறு வழியில்லாமல் பயணிகளுக்கு ஆபத்தான முறையில் பழைய பேருந்துகளை இயக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

ஆனால் கேரள மாநில அரசு இந்த விஷயத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்துள்ளது. ஆம், கேஎஸ்ஆர்டிசி எனப்படும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (KSRTC - Kerala State Road Transport Corporation) சொந்தமான பழைய பேருந்துகள், தற்போது உணவகங்கள் ஆகவும், பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

இதன் மூலம் பழைய பேருந்துகளை பயணிகளுக்கான சேவையில் இருந்து விலக்குவதுடன், அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் கேஎஸ்ஆர்டிசி-க்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பழைய பேருந்துகளை விற்பனை செய்வதற்கோ அல்லது வாடகைக்கு விடுவதற்கோ கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

தற்போதைய நிலையில் கேஎஸ்ஆர்டிசி-யிடம் 500க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை உணவகங்களாக மாற்றுவதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பேருந்துகள் ஒவ்வொன்றையும் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கேஎஸ்ஆர்டிசி எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

இந்த பேருந்துகளில் விசாலமான இட வசதி காணப்படுகிறது. எனவே அவற்றை மிக எளிதாக உணவகங்களாகவோ அல்லது பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களாகவோ மாற்றி கொள்ள முடியும். அத்துடன் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல், அவற்றை பேருந்து நிலையங்களுக்கு அருகே நிறுத்தி பொருட்களை விற்பனை செய்யவும் முடியும்.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

பேருந்துகளை உணவகங்களாக மாற்றுவது என முடிவு செய்து விட்டால், இன்ஜின் உள்ளிட்ட பாகங்களை அகற்றி விட்டு, அவற்றை வேறு ஒரு பேருந்தில் பொருத்தி கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையங்களுக்கு அருகே அவற்றை நிறுத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

விற்பனை செய்வதுடன் மட்டுமல்லாது, அதிகபட்ச தொகையை வழங்க முன்வருபவர்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்துகளை வழங்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பெண்கள் மேம்பாட்டு கழகம், இந்தியன் காஃபி ஹவுஸ் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

பழைய பேருந்துகளை இயக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மிக கடுமையாக மாசுபடுகிறது. எனவே குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவற்றை அழிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் பழைய பேருந்துகளை அழிக்காமல், அதே சமயம் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாமல் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

இந்த திட்டத்தின் மூலமாக ஓரளவிற்கு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்பதால், கேரள அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போதைய நிலையில் கேஎஸ்ஆர்டிசியின் பழைய பேருந்தில், முதல் பால் பொருட்கள் விற்பனை நிலையம் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

டப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...

மில்மா நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மில்மா என்பது கேரளா கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (Milma - Kerala Co-operative Milk Marketing Federation) ஆகும். இதே பாணியில் வரும் காலங்களில் இன்னும் ஏராளமான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Government Is Converting Old KSRTC Buses Into Sales Outlets - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X