பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு..!!

கேரள மாநிலத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்வதாக அம்மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சுதாகரன் அறிவித்துள்ளார். பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்க ஆன பல கோடி ரூபாய் கடனை கேரள அரசு ஏற்று விரைவில் முழு கடனை திரும்ப செலுத்தும் என அமைச்சர் சுதாகரன் கூறியுள்ளார்.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

இந்தியாவில் பெரும்பாலான மேம்பாலங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசிற்கு ஆண்டு தோறும் இந்த சுங்க சாவடி மூலம் ஆண்டிற்கு ரூ 4000 கோடி வரை வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இதை அவர்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

இந்தியாவில் இருக்கும் பெரும் பிரச்னையாக இந்த சுங்கசாவடி வசூல் பார்க்கப்படுகிறது. இந்த வசூலால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் அந்த சுங்க சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

சுங்கசாவடிகளின் பராமரிப்பை காட்டிலும் அதிகமான தொகை தான் அங்கு வசூலிக்ப்படுவதாகவும் சில சுங்கசாவடிகளில் பொதுமான சேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பல சுங்க சாவடிகளில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்தால் உடனடியா மீட்பு பணிக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

மேலும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக சுங்க சாவடிகளில் கழிப்பறைகள் முக்கியமான பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை, என மக்கள் சுங்கச்சாவடிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

இந்தியா முழவதும் இன்று 400க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகள் செயல்படுகிறது. சாலைகளை பராமரிக்க வேண்டும், மற்றும் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என அரசு கூறும் காரணங்கள் முக்கியமானதாக கொண்டாலும் அதிக பணம் வசூல் மக்களுக்கு மிக பாரமாக இருக்கிறது.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

சுங்க சாவடிகளில் வசூல் செய்யும் பணத்தை அளவை குறைக்க வேண்டும் என்றும், அனைத்து சுங்கசாவடிகளில்லும் போதுமான சேவைகள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதோடு, அவ்வாறு நடக்கவில்லை என்றால் அந்த சுங்கசாவடியை நடத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் சிலர் போராடி வருகின்றனர்.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும், சுங்கக் கட்டணத்தை ரத்து செய்வதாக அம்மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் சுதாகரன் அறிவித்துள்ளார்.மேலும் சாலைகள் மற்றும் பாலங்களுக்கான அமைப்பு சுங்கக் கட்டணங்களை வசூல் செய்து, பாலங்கள் கட்டுவதற்கு ஆன பல கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்திவந்தன. ஆனால் தற்போது கேரளா அரசு அந்த கடனுக்கான பணத்தை செலுத்தவிரும்புகிறது. அரசின் கடனை மக்கள் மீது சுமத்த அரசு விரும்பவில்லை என கூறினார்.

பல கோடி ரூபாய் கடனை அடைக்க தயார்: கேரளா அரசின் புதிய முடிவு

ஆனால் தற்போது கேரளா அரசு அந்த கடனுக்கான பணத்தை செலுத்தவிரும்புகிறது. அரசின் கடனை மக்கள் மீது சுமத்த அரசு விரும்பவில்லை என கூறினார்.கேரளா அரசு தற்போது 28 பாலங்கள் மற்றும் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளது. தற்போது 10 பாலங்கள் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் எனக் அமைச்சர் சுதாகரன் கூறினார்.

Most Read Articles
English summary
kerala government stops toll collection 28 roads and bridges: Read in Tamil
Story first published: Tuesday, January 15, 2019, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X