திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!

கேரள மாநிலத்தில் பட்ஜெட்டில் பெட்ரோல்/டீசலுக்கு சமூகப் பாதுகாப்பு விதை செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ரூ2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பெட்ரோல் டீசல் விலை என்பது இந்தியாவில் மிக முக்கியமான பிரச்சனையாக இருக்கிறது. பெட்ரோல் டீசல் மக்கள் வாழ்வின் அன்றாட தேவையாகிவிட்டது. இதனால் அதன் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மிக முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!

இந்நிலையில் பிப்1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் மாநில அரசுகளும் வரிசையாக 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யத் துவங்கிவிட்டன. இந்நிலையில் கேரள மாநில சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெரும் இடியாகக் கேரள மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேரள மாநிலத்தில் சமூகப் பாதுகாப்பு செஸ் வரி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வரியால் பெட்ரோல் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ2 அதிகமாகும் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ750 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு விதை ஃபண்டாக இது சேமிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் நடந்த மிக அதிகமா பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதுவாக தான் இருக்கும். தற்போது கேரள மாநிலத்தில் பெட்ரோல் விலை என்பது லிட்டருக்கு ரூ105.81 என்ற விலையிலும் டீசல் லிட்டருக்கு ரூ94.74 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் கிட்டத்தட்டக் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல் விலை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இதற்கிடையில் பெட்ரோலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை பேரல் 102.97 அமெரிக்க டாலரிலிருந்து 116.01 அமெரிக்க டாலர் வரை உயர்ந்தது. கடந்த ஜனவரி மாதம் 82 அமெரிக்க டாலர் வரை விலை குறைந்தது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் இவ்வளவு மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஒரே மாதிரியாக பெட்ரோல்/டீசல் விலையை வைத்திருப்பதால் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ10 லாபத்தையும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ10-11 நஷ்டத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் மட்டும் தற்போது லிட்டருக்கு ரூ2 வரி விதிக்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்து மக்கள் விலை உயர்வைச் சந்திக்கவுள்ளனர்.

கேரளாவில் பெட்ரோல்/டீசலுக்கு ஒரு பக்கம் விலையேற்றினாலும், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை அம்மாநில அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஒரு முறை வரி என்பது வாகனத்தின் விலையிலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும், இதனால் பெட்ரோல் /டீசலின் தேவையும் குறையும் என அம்மாநில அரசு கணித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala govt imposed social security cess petrol diesel sales price hiked rupees two
Story first published: Friday, February 3, 2023, 21:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X