மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழக்கும் பரிதாபங்கள் தினந்தோறும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் என்றால் கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

சொந்த ஊரில் வேலை செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால், பிழைப்பை தேடி வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்றவர்களின் நிலைமை இதனை காட்டிலும் மோசமாக உள்ளது. கடந்த ஆண்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த சமயத்தில் பல வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பேருந்து, இரயில் போன்றவை இல்லாததால் கிடைக்கும் வாகனத்தில் ஏறி சென்றனர்.

மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

சிலர் அத்தகைய வாகனங்கள் கூட கிடைக்காமல் பல கிமீ தூரம் நடந்தே செல்லும் துயர சம்பவங்களை நாம் பார்த்தோம். கொரோனாவின் இரண்டாவது அலையால் தற்போதும் கிட்டத்தட்ட அதே நிலைமை தான் உள்ளது, அதனை காட்டிலும் மோசமான நிலைமை உள்ளது என்று கூட சொல்லலாம்.

மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

இதனால் கொரோனாவின் முதல் அலையை சாதாரணமாக எடுத்து கொண்டவர்கள் கூட தற்போது இரண்டாவது அலைக்கு பயந்து சொந்த கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இவ்வாறு சொந்த ஊருக்கு திரும்பிய கேரள இளைஞர் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

Source: Behindwoodsnewsshots

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்தவர் 30 வயதான பினூப். இவரது மனைவி திருவல்லாவில் குழந்தைகளுடன் வசித்துவரும் நிலையில், பினூப் கோழிக்கோட்டில் வேலை பார்த்து வந்தார். கேரளாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பினூப்பிற்கு சொந்த ஊர் செல்ல பஸ் கிடைக்கவில்லை.

கோழிக்கோட்டில் இருந்து பினூப்பின் கிராமமான திருவல்லா சுமார் 270 கிமீ தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தவருக்கு, கோழிக்கோடு அருகே ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் கண்ணில் பட்டுள்ளது.

பினூப்பிற்கு மனைவி, குழந்தைகளின் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்ததினால் எதை பற்றியும் யோசிக்காமல் அந்த தனியார் பஸ்ஸை தானே இயக்கி சொந்த ஊருக்கு கிளம்பிவிட்டார். இடையில் இரண்டு, மூன்று இடங்களில் போலீஸார் பஸ்ஸை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

மனைவி மேல பாசம் இருக்கனும்தான் அதுக்குனு இப்படியா!! பஸ்ஸை கடத்திய கேரள இளைஞர்... இறுதியில் நடந்தது வேறு...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர செல்வதாக கூறி அவர்களை எப்படியோ சமாளித்துள்ளார். பினூப்பிடம் பேருந்து ஓட்டுனர் உரிமம் இருந்ததா என்பது தெரியவில்லை. ஓட்டுனர் உரிமம் இருந்திருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ஏனெனில் இல்லையென்றால் அப்போதே போலீஸாரிடம் இவர் சிக்கியிருப்பார்.

கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட பஸ் மலப்புரம், திருச்சூர், எர்ணாக்குளம் வழியாக கோட்டயம் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது புகழ்பெற்ற குமரகம் சுற்றுலா தளத்தை அடைந்தப்போது, பஸ்ஸை குமரகம் போலீஸார் நிறுத்தியுள்ளனர்.

மற்ற போலீஸாரிடம் கூறிய அதே காரணத்தை இந்த போலீஸாரிடமும் பினூப் தெரிவித்துள்ளார். ஆனால் இம்முறை குமரகம் போலீஸாருக்கு சற்று சந்தேகம் ஏற்படவே பினூப்பை குறுக்கு கேள்விக்கு கேட்டு தீவிரமாக விசாரித்துள்ளனர். இதில் உண்மையை அவர் ஒத்து கொண்டார்.

அதன்பின் பினூப்பை கைது செய்த போலீஸார் பஸ்ஸையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸை காணவில்லை என இந்த தனியார் பஸ்ஸின் உரிமையாளர் குட்டியாடி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் பினூப்பின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பினூப் தற்போது கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Husband Stole The private Bus In Kozhikode To Meet His Wife.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X