20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

எம்எல்ஏ ஒருவர், டொயோட்டா குவாலிஸ் காரை சுமார் 20 வருடங்களாக நல்ல நிலைமையில் பராமரித்து வருவது கவனம் பெற்றுள்ளது.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

உலக புகழ் பெற்ற டொயோட்டா நிறுவனம் குவாலிஸ் காரை அறிமுகம் செய்ததன் மூலமாக இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்கள் மத்தியில் குவாலிஸ் நன்கு பிரபலமாகி விட்டது. எனவே சாலைகளில் அடிக்கடி பார்க்க கூடிய கார்களில் ஒன்றாக குவாலிஸ் உருவெடுத்தது.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

ஒரு கட்டத்தில் குவாலிஸ் காரின் விற்பனையை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இன்னோவா காரை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. குவாலிஸை போல் இன்னோவா காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உடனடியாக பிரபலமானது. டொயோட்டா நிறுவனம் குவாலிஸ் காரை 2 இன்ஜின் தேர்வுகளுடன் இந்திய சந்தையில் விற்பனை செய்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

2.4 லிட்டர் டீசல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன. இந்த 2 இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுகளை டொயோட்டா வழங்கியது. டொயோட்டா குவாலிஸ் சந்தையை விட்டு சென்று பல ஆண்டுகள் ஆன பின்னரும் கூட தற்போதும் பலர் அந்த காரை புத்தம் புதிது போல் பராமரித்து வருகின்றனர்.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

இந்த சூழலில் 20 வயதான டொயோட்டா குவாலிஸ் கார் ஒன்று இன்னமும் அதன் உரிமையாளரால் நன்றாக பராமரிக்கப்படும் ஒரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மனோரமா ஆன்லைன் இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. இந்த வாகனத்தின் உரிமையாளர் கணேஷ் குமார் ஆவார். இவர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்தவர்.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் தொகுதி எம்எல்ஏவாக அவர் தற்போது இருந்து வருகிறார். அரசியலில் நுழைவதற்கு முன்னதாக கடந்த 2000ம் ஆண்டில் அவர் இந்த டொயோட்டா குவாலிஸ் காரை வாங்கியுள்ளார். திரைத்துறையை சேர்ந்த கணேஷ் குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவர் டொயோட்டா குவாலிஸ் காரை வாங்கியுள்ளார்.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

அதில் பயணம் செய்த உடனே கணேஷ் குமாருக்கும் குவாலிஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. குறிப்பாக குவாலிஸ் வழங்கிய தரமான மற்றும் சௌகரியமான பயணம் அவரை வெகுவாக ஈர்த்தது. எனவே இறுதியாக அவரும் ஒரு குவாலிஸ் காரை வாங்கி விட்டார். ஆனால் ஆரம்பத்தில் மிகவும் அரிதாகவே டொயோட்டா குவாலிஸ் காரை அவர் வெளியில் எடுத்து வந்துள்ளார்.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

சாலைகளில் அரிதாக தென்பட்ட காரணத்தால், குவாலிஸ் மிகவும் விலை உயர்ந்த கார் என்றும், அதன் விலை 20-25 லட்ச ரூபாய் எனவும் கணேஷ் குமாரின் அரசியல் எதிரிகள் வதந்திகளை பரப்பியுள்ளனர். ஆனால் அந்த சமயத்தில் கணேஷ் குமார் வாங்கிய டொயோட்டா குவாலிஸ் காரின் உண்மையான விலை வெறும் 6-7 லட்ச ரூபாய் மட்டும்தான்.

20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்... டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ

வாங்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளை கடந்த பின்னரும் கூட ஒரிஜினல் பெயிண்ட்தான் இன்னமும் அந்த காரில் உள்ளது. டொயோட்டா குவாலிஸ் மிகவும் நம்பகமான ஒரு வாகனமும் கூட. அதற்கு ஏற்ப இந்த காரால் தனக்கு எப்போதும் எந்த பிரச்னையும் வந்தது கிடையாது எனவும் கணேஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி கணேஷ் குமார் இந்த காரை மிகவும் நன்றாக பராமரித்துள்ளார்.

அந்த காரில் உள்ள அனைத்து எலெக்ட்ரிக்கல் பாகங்களும் தற்போதும் நன்றாக இயங்கி கொண்டுள்ளன. கணேஷ் குமார் இன்னமும் கூட தனது தினசரி பயன்பாட்டிற்கு இந்த குவாலிஸை பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இந்த காரை உயிருள்ள விஷயமாக கருதி பராமரித்து வருகிறார். இந்த கார் இன்னமும் நல்ல நிலையில் இருப்பதற்கு இது முக்கியமான காரணங்களில் ஒன்று.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Politician Explains Why Loves His Toyota Qualis So Much. Read in Tamil
Story first published: Wednesday, October 21, 2020, 21:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X