இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரம்... கொரோனாவிற்கு ஸ்கெட்ச் போட்ட கேரளா... வேற லெவல் சார்

கொரோனா வைரஸை ஒழித்து கட்டுவதற்காக, இந்தியாவில் இதுவரை யாருமே கையில் எடுக்காத புதிய அஸ்திரத்தை கேரளா எடுத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, புதுப்புது திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் சுகாதார பணியாளர்களுக்கு தொற்று ஏற்படாமல், கோவிட்-19 நோயாளிகளை கண்டறிவதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

பாதிக்கப்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்யும் சமயத்தில், சுகாதார பணியாளர்களையும் கோவிட்-19 தொற்றி கொள்கிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக, 'திரங்கா' (Tiranga) காரை கேரளா பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்தான் மாடிபிகேஷன் செய்யப்பட்டு, திரங்கா காராக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

நோயாளிகளை பாதுகாப்பாக பரிசோதிக்க இந்த கார் பயன்படுத்தப்படுகிறது. கோவிட்-19 வைரஸ் தாக்கிய நோயாளிகளை வேகமாக கண்டறிவதற்காக, கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகத்தால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த டொயோட்டா இன்னோவா காரில் 3 சுகாதார பணியாளர்கள் சென்று, கோவிட்-19 நோயாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

அதற்கு ஏற்ற வகையில் இந்த மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக வெளியே நிற்பவர்கள், காருக்கு உள்ளே இருக்கும் சுகாதார பணியாளர்களை பார்க்க முடியாது. அதேபோல் சுகாதார ஊழியர்களும் காருக்கு வெளிய வர மாட்டார்கள். வெளியே நிற்பவர்களிடம் பேசுவதற்கு பொது அறிவிப்பு அமைப்பை சுகாதார பணியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

இந்த காரில் செல்லும் சுகாதார பணியாளர்கள், மக்களின் அடையாள ஆவணங்களை கேட்கின்றனர். மேலும் அவர்களின் பயண விபரங்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் சுகாதார பணியாளர்கள் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். இதன்பின் ரெக்கார்டு பராமரிப்பதற்காக இந்த ஆவணங்கள் புகைப்படம் எடுத்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

இந்த டொயோட்டா இன்னோவா காரில், இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியே நிற்பவரின் டெம்ப்ரேச்சரை பரிசோதிக்க முடியும். தெர்மல் ஸ்க்ரீன் சிஸ்டம் தவிர்த்து, டூ-வே மைக்ரோபோன் அமைப்பையும் இந்த கார் பெற்றுள்ளது. மக்களுடன் முறையாக உரையாடுவதற்கு, பணியாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

சுகாதார பணியாளர்கள் காரை விட்டு கீழே இறங்காமலேயே இவை அனைத்தும் செய்யப்படும். இந்தியாவில் இப்படியான ஒரு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சோதனை அடிப்படையில் தற்போது இந்த வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது உடல் டெம்ப்ரேச்சர் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டாலோ, அவர்களை பற்றிய விபரங்கள் குறித்து கொள்ளப்படுகின்றன. அத்துடன் சம்பந்தப்பட்ட நபர், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளப்படியும் கேட்டு கொள்ளப்படுகிறார். கடந்த 45 நாட்களில், கேரளாவிற்கு வெளியே சென்று வந்தவர்களுக்கும் இதே அறிவுரைதான் வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

கோவிட்-19 வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திடம் (Primary Health Centre - PHC) வழங்கப்படுகின்றன. இதன்பின் அத்தகைய நபர்களை பின்தொடர்வதற்கும், பரிசோதனை செய்வதற்குமான பொறுப்பை ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்று கொள்கின்றன.

இந்தியாவிலேயே முதல் முறை... கொரோனாவை ஒழித்து கட்ட புதிய அஸ்திரம்... வேற லெவலுக்கு சென்ற கேரளா

இந்த டொயோட்டா இன்னோவா, ஆர்எஸ்வி - 1 (RSV-1) என்று அழைக்கப்படுகிறது. ரேபிட் ஸ்க்ரீன் வெய்கில் - 1 (Rapid Screen Vehicle - 1) என்பதன் சுருக்கமே ஆர்எஸ்வி - 1. இதுதவிர ஆர்எஸ்வி - 2 வாகனத்தை அறிமுகம் செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிகுறி தென்படுபவர்களிடம் இருந்து சாம்பிளையும் இந்த வாகனங்கள் சேகரித்து கொள்ளும்.

எனினும் ஆர்எஸ்வி - 2 வாகனத்தை உருவாக்கும் பணிகள் தற்போதுதான் நடந்து வருகின்றன. கேரளாவின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவிட்-19 பாதிப்பில் இருந்து நோயாளிகளை மீட்டு எடுக்கவும், கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கவும் கேரளா மேற்கொண்டு வரும் முயற்சிகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய மக்களின் மனங்களை வென்ற டொயோட்டா இன்னோவா காரைதான், கொரோனா தடுப்பு பணிகளில் கேரளா ஈடுபடுத்தியுள்ளது. அப்படிப்பட்ட இன்னோவா காரை இந்தியர்கள் உயிருக்கு உயிராக நேசிப்பது ஏன்? என்பதற்கு உதாரணமாக பிரம்மிக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா கார் கடந்த 2005ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சௌகரியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய இரண்டு சொற்களுக்கு டொயோட்டா இன்னோவா காரை தாராளமாக குறிப்பிடலாம்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அறிமுகம் செய்யப்பட்டது முதல் டொயோட்டா இன்னோவா விற்பனை கொடி கட்டி பறந்து கொண்டிருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முதல் தலைமுறை இன்னோவா கார்கள் கூட, இன்றளவும் எவ்வித பிரச்னையும் இன்றி சாலைகளில் பயணித்து கொண்டிருப்பதை பலர் கண் கூடாக பார்த்திருக்க கூடும். டொயோட்டோவின் தரம் அப்படி.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் டொயோட்டா இன்னோவா காரின் விலை சற்று அதிகம். அப்படி இருந்தும் கூட இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார்களில் ஒன்றாக இன்னோவா உள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

விலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவில் இது சாதாரணமான விஷயம் அல்ல. இதற்கு டொயோட்டா இன்னோவா காரின் கட்டுமான தரம் (Build Quality), நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின், விசாலாமான மற்றும் சௌகரியமான இன்டீரியர்கள் ஆகியவையே முக்கியமான காரணங்கள்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் டொயோட்டா இன்னோவா மிக பிரபலமான கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தமிழக அரசியலில் இன்னோவாவிற்கு என தனி இடமே கொடுக்கலாம்!!!

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த சூழலில், 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடிய டொயோட்டோ இன்னோவா கார் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சரியாகதான் படித்துள்ளீர்கள். ஆம், உண்மையில் இந்த இன்னோவா 6 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகும் கூட, இந்த கார் தற்போதும் எவ்வித தடங்கலும் இன்றி ஓடி கொண்டுள்ளது. இது ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வெளிவந்த முதல் தலைமுறை காராகும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

கோபிநாதன் என்பவர்தான் இந்த காரின் உரிமையாளர். கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவில் இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கார் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் வெற்றிகரமாக ஓடுவது என்பதெல்லாம் உண்மையில் சாதாரணமான விஷயம் கிடையாது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த அதிசய காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், 6 லட்சம் கிலோ மீட்டர்களை கடந்த பிறகுதான் முதல் முறையாக கிளட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதுவும் ஒரு தனித்துவமான விஷயமாகதான் அனைவராலும் பார்க்கப்படுகிறது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் இந்தியாவை சேர்ந்த பல கார் உரிமையாளர்கள் ஒவ்வொரு 50 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் ஒரு முறை கிளட்ச்சை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் கோபிநாதனின் இந்த டொயோட்டா இன்னோவா ஒரே ஒரு கிளட்ச்சில் 6 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணித்துள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

பொதுவாக ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அதனை வாங்க வேண்டும் என்ற ஆலோசனை பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் கார் உற்பத்தி நிறுவனம் அப்போதுதான் புகார்களை பெற்று, காரின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஒருவேளை இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் டொயோட்டா விஷயத்தில் அப்படி அல்ல என்பதை இந்த இன்னோவா நிரூபித்து காட்டியுள்ளது. ஏனெனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே இந்த கார் வாங்கப்பட்டுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இப்படி பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தியிருப்பதன் காரணமாகதான் தற்போது இந்த இன்னோவா அனைவராலும் கவனிக்கப்படும் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் கேரளாவில் உள்ள நிப்பான் டொயோட்டா என்ற டீலர்ஷிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அத்துடன் அங்கேயே சர்வீசும் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த விஷயத்தில் இன்னோவா காருடன் சேர்த்து, அதனை முறையாக பராமரித்து வந்த அதன் உரிமையாளர் கோபிநாதன் மற்றும் நிப்பான் டொயோட்டா ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள் கிடைக்க வேண்டும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஏனெனில் சரியாக பராமரிக்காவிட்டால், டொயோட்டாவாக இருந்தாலும் சரி அல்லது உலகின் வேறு எந்த முன்னணி நிறுவனத்தின் காராக இருந்தாலும் சரி, நிச்சயமாக நீடித்து உழைக்காது. குறைவான ஆயுட்காலத்திலேயே பழுதாகி விடும்.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த வியப்பிற்குரிய முதல் தலைமுறை இன்னோவா காரில், 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டி-4டி (D-4D) டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் இன்ஜினுடன் இணைந்து 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

தற்போது இன்னோவா கிரிஸ்டா என்ற பெயரில், இரண்டாம் தலைமுறை இன்னோவா விற்பனையாகி கொண்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலின் மரபை அது சுமந்து கொண்டிருந்தாலும், முன்பை காட்டிலும் பெரியதாக, அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது.

அதிசய கார்... இந்த டொயோட்டா இன்னோவா எவ்வளவு கிமீ ஓடியுள்ளது என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இது 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டீசல், 2.8 லிட்டர் டீசல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. சரியான நேரத்தில் சர்வீஸ் செய்வது என உங்கள் காரை நீங்கள் முறையாக பராமரித்தால், அது எவ்வித பிரச்னையும் இன்றி நீண்ட காலம் உழைக்கும். அத்துடன் உங்களின் மகிழ்ச்சியான தருணங்களில் உற்ற தோழனாகவும் நிற்கும்!!!

Image Courtesy: ModsOwnCountry Whatsapp Group

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala - This Modified Toyota Innova Detects Covid-19: Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X