பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

பிரதமர் மோடி தொடர்பான திடுக்கிடும் தகவல் ஒன்றை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். இதனால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. நாட்டின் 17வது மக்களவை பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

நண்பர்களாக இருந்தவர்களை பகைவர்களாகவும், பகைவர்களாக இருந்தவர்களை நண்பர்களாகவும் மாற்றியுள்ளது இந்த தேர்தல். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரை இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கூறலாம். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அண்ணன், தம்பி போல் நட்பு பாராட்டி கொண்டுதான் இருந்தனர்.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டியதே நரேந்திர மோடிதான். அப்போது புனித நீரெல்லாம் கொண்டு வந்து, சந்திரபாபு நாயுடுவுடன் தனது நட்பை பிரதமர் மோடி நெருக்கமாக்கி கொண்டார். ஆனால் மோடி-சந்திரபாபு நாயுடுவின் உறவில், கடந்த சில நாட்களுக்கு முன் பெரும் விரிசல் ஏற்பட்டது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொள்வதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்து வந்தது. அத்துடன் மத்திய அமைச்சரவையிலும் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றிருந்தது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

ஆனால் தேர்தல் நெருங்கும் நிலையிலும் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை. இதனால் பாஜகவுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்து கொண்டார் சந்திரபாபு நாயுடு. முதலில் மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

இதன்பின்புதான் மோடிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. மோடிக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியதுடன், அவருக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகளிலும் முனைப்பு காட்டினார் சந்திரபாபு நாயுடு. இந்த சூழலில் தற்போது பிரதமர் மோடி மீது சந்திரபாபு நாயுடு திடுக்கிடும் புகார் ஒன்றை முன்வைத்துள்ளார்.

MOST READ: நேரடி இணைய வசதியுடன் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் தொழில்நுட்ப அம்சங்கள்!

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

தென் கொரியாவை சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸ் (Kia Motors), ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் தனது கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ள கியா மோட்டார்ஸ் தற்போதுதான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்துள்ளது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

கியா நிறுவன கார்கள் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே வரிசையாக பல்வேறு புதிய தயாரிப்புகளை மார்க்கெட்டில் களமிறக்க கியா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய மார்க்கெட்டிற்கான முதல் கியா கார், வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

இந்திய மார்க்கெட்டில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் கார் எஸ்பி2ஐ (SP2i) என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம் அனந்த்ப்பூர் பிளாண்ட்டில், கடந்த ஜனவரி மாத கடைசியில், எஸ்பி2ஐ காரின் ட்ரையல் ப்ரொடெக்ஸன் தொடங்கியது. இதுகுறித்து டிரைவ்ஸ்பார்க் தமிழ் வெளியிட்ட விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

முன்னதாக கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை தமிழகத்திற்குதான் வருவதாக இருந்தது. ஆனால் ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அதிகளவு லஞ்சம் கேட்டதால்தான் கியா நிறுவனம் ஆந்திராவிற்கு தலைதெறிக்க ஓடியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

இந்த சூழலில் தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் அடிபட தொடங்கியுள்ளது. ஆந்திர பிரதேச அரசியலில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

சந்திரபாபு நாயுடுவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அவருக்கு எதிரான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வந்ததற்கு காரணம் மோடிதான் என ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். இதனால் கொதித்து போன சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

MOST READ: இளைஞரை மடக்கி பிடித்த ஐஏஎஸ் அதிகாரி... எதற்காக என தெரிந்தால் இனி இந்த தவறை செய்ய மாட்டீர்கள்...

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

இதுகுறித்து சந்திரபாபு நாயுடு பேசுகையில், ''பிரதமர் நரேந்திர மோடியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை தனது குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார்.

பிரதமர் மோடி குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு... தேசிய அரசியலில் பரபரப்பு...

ஆனால் மோடியால் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு கியா மோட்டார்ஸ் நிறுவனம் கீழ்படியவில்லை. நான் வழங்கிய சலுகைகளால்தான் கியா மோட்டார்ஸ் ஆந்திராவிற்கு வந்தது. மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுவத்துவதற்கான அனைத்து வேலைகளையும் எதிர்கட்சி தலைவர் செய்கிறார்'' என்றார். மோடியின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் என சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Despite Narendra Modi's Threat, Kia Motor Opted Andhra Pradesh, Says Chandrababu Naidu. Read in Tamil
Story first published: Tuesday, April 2, 2019, 16:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X