டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

கியா மோட்டார்ஸின் மும்பை டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து செல்டோஸ் கார் விழுந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

புதியதாக சந்தையில் களமிறக்கப்படும் வாகனங்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த பலரையும் அழைத்து, பெரிய நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்து, அதில் அறிமுகப்படுத்துவது அனைத்து நிறுவனங்களின் வழக்கம். இதன் மூலம் அந்த வாகனம் பொது மக்களிடையே பெரிய அளவில் கவனத்தை பெறும் என்பது அவர்களது எண்ணம்.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

இத்தகைய விளம்பரப்படுத்துதலில் ஒரு பகுதியாக, கார்களை விற்கும் டீலர்ஷிப் கட்டிடங்களின் சாலையை நோக்கிய பகுதிகள் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மாடல்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிக தெளிவாக தெரியும்.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

இதற்காக கார்கள் ஒன்றாவது, இரண்டாவது மாடிகளுக்கு கூட கார் லிஃப்ட் மூலமாக கொண்டு செல்லப்பட்டு அதற்குரிய இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த செயல்பாடுகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனே நடைபெறும்.

ஏனெனில் தெரியாமல் காரில் சின்ன கீறல்கள் விழுந்தாலே அந்த கார் விற்பனையாகாது. அப்படி இருக்க, முதல் மாடி, இரண்டாவது மாடி வரையிலும் கொண்டு செல்லப்படும்போது சிறிய தவறு நடந்தாலே பெரிய விபரீதத்தில் கொண்டு சென்றுவிடும்.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

ஆனால் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது மிக அரிது தான். அப்படியிருந்தும் மும்பையில் பன்வேல் பகுதியில் உள்ள கியா மோட்டார்ஸின் டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து இன்று காலை செல்டோஸ் கார் விழுந்து அந்த பகுதியையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

நமக்கு தெரிந்து இந்த கியா செல்டோஸ் கார் எந்தவொரு திட்டமும் இல்லாமல் முதல் மாடிக்கு ஏற்றப்பட்டு இருக்கும். காரின் முன்புறம் பலமாக கண்ணாடியை உடைத்து கீழே முன்புறமாக விழுந்துள்ளது. இதில் காரின் கண்ணாடி, முன்புற க்ரில் உள்பட பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

இந்த விபத்து குறித்த படங்களை பார்க்கும் போது இந்த கார் மட்டுமில்லாமல் கீழே இருந்த மேலும் சில செல்டோஸ் கார்களும் பாதிப்படைந்துள்ளது போல் தெரிகிறது. மொத்தம் எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்பதை கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கணக்கிட்டு வரும். ஆனால் கண்டிப்பாக இந்த சம்பவத்தை மட்டும் அவர்களால் எளிதில் மறக்க முடியாது. இந்த சம்பவத்தால் எவரேனும் பாதிப்படைந்துள்ளாரா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

செல்டோஸ் மாடலை பற்றி சொல்ல வேண்டுமென்றால், கியா நிறுவனம் இந்த காரின் மூலமாக தான் இந்தியாவில் அறிமுகமானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காருக்கு இந்திய சந்தையில் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்தால், இதன் காத்திருப்பு காலம் 2 மாதம் வரையில் நீண்டிக்கப்பட்டது.

டீலர்ஷிப் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து விழுந்து நொறுங்கிய கியா செல்டோஸ்...

கடந்த நவம்பர் மாதத்தில் சிறந்த முறையில் விற்பனையான எஸ்யூவி கார்களில் முதலிடத்தை பிடித்துள்ள கியா செல்டோஸ், 2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.9.69 லட்சத்தில் இருந்து ரூ.16.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகள் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Sagar Patel/YouTube

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia Seltos Fall From First Floor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X