Just In
- 2 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 3 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 5 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 5 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காருக்குள் சிக்கிய சிறுவன் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு...
சிறுவன் காருக்குள் தனியாக சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு சிறுவன் மீட்கப்பட்டார். கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த பதிவு...

குழந்தைகளைக் காருக்குள்ளேயே விட்டுச் செல்லும் சம்பவம் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில், காருக்குள் சிக்கிய குழந்தையை மீட்கும் வீடியோக்களும், செய்திகளும் சமீபகாலமாக நமது வீட்டு டிவிக்களில் வந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏன்... நம்மில் சிலரின் நிஜ வாழ்க்கையிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்கலாம்.

குழந்தைகளைக் காருக்குள்ளேயே விட்டுச் செல்வது மிகவும் ஆபத்தான விஷயங்களில் ஒன்றாகும். ஏனென்றால், பல்வேறு ஆபத்துகளை அது விளைவிக்கும். கார் செயலற்ற நிலையில், கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தால், காரின் உள்பகுதியில் பிராணவாயுவின் அளவு குறையத் தொடங்கும். இந்தசூழலானது, காருக்குள் இருக்கும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும்.

கார் இயங்காத காரணத்தால், உள் பகுதியில் காற்றோட்டம் தடைபடுகிறது. இதுவே ஆபத்தான சூழ்நிலையை உருவாக்க முக்கிய காரணியாக இருக்கின்றது. இதனால், காருக்குள் இருக்கும் பிராண வாயு குறைந்து, மூச்சுத் திணறலை உண்டாக்கி மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றது. இதன்காரணமாகவே, குழந்தை மற்றும் செல்லப் பிராணிகளை காருக்குள் அடைத்துவிட்டு செல்ல வேண்டாம் என வாகன உலகின் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவம், பஞ்சாப் மாநிலத்தின் நங்கல் பகுதியில் அரங்கேறியுள்ளது. காருக்குள் சிக்கிய குழந்தையை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். இதுகுறித்த, வீடியோவை ஹூல்சல் டிவி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், காருக்குள் சுமார் 2 அல்லது 3 வயதுள்ள சிறுவன் தனியாக சிக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
காரில் சிக்கிய சிறுவனை மீட்கும் முயற்சியில், அங்கு கூடியிருந்த மக்களும், சிறுவனின் தாயாரும் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் காரில் இருந்து, பத்திரமாக மீட்கப்பட்டார். கார் ஆன் செய்யப்பட்டு, ஏசி இயங்கிக் கொண்டிருந்ததாலே எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டான்.

சிறுவன் காருக்குள் சிக்கிய இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த சம்பவமானது, தாயின் கவனக்குறைவாலயே நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று, ஷாப்பிங் செய்யும் விதமாக தாய் மற்றும் மகன் இருவரும் ஹூண்டாய் க்ரெட்டா காரில் வெளியேப் புறப்பட்டுள்ளனர். அப்போது, சாலையோர கடைக்கு அருகே காரை நிப்பாட்டிய அந்த பெண், காருக்குள் சிறுவனை விட்டுவிட்டு, காரையும், அதன் ஏசி இயக்கநிலையிலேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர், கடையிலிருந்து சிறிது நேரத்தில் வெளியே அந்த பெண் காரின் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், காரின் கதவோ திறக்கவே இல்லை. மேலும், காருக்குள் அது சென்டர் லாக் செய்யப்பட்டிருந்தது. இதனை, காருக்குள் அமர்ந்திருந்த சிறுவன், விளையாடும்போது தெரியமால் செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. இதனால், சிறுவன் உள்ளேயே சிக்கும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தின்போது, அங்கு சூழ்ந்த பொதுமக்கள் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தையை வெளியேற்றலாம் என நினைத்தனர். ஆனால், அது தோல்வியையேச் சந்தித்தது.

ஏனென்றால், தற்போது விற்பனைக்கு வரும் கார்களின் ஜன்னல் கண்ணாடிகள் லேமினேடட் என்ற முறையில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை, அவ்வளவு எளிதில் உடைத்து விடமுடியாது. திருட்டோ போன்று தவறுகளை தவிர்க்கும் விதமாக, இவை இவ்வாறு தாயரிக்கப்படுகின்றன. ஆனால், அதுவே பலருக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தி விடுகின்றன. அதேசமயம், இதுபோன்ற ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதற்கான வின்டோ பிரேக்கர் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

அது, விபத்து நேரத்தில், இயங்காமல் இருக்கும் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு வெளியேற உதவும். ஆகையால், கார் கண்ணாடியை உடைக்க முடியாத காரணத்தால், வீட்டில் இருந்த மற்றொரு சாவியைக் கொண்டு வரவைத்து கார் திறக்கப்பட்டது. இதற்கே இரண்டு மணி நேரங்கள் பிடித்துவிட்டன. அதேசமயம், இந்த சம்பவத்தின்போது, காரின் ஏசி இயக்கநிலையில் இருந்ததால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

காருக்குள் சிறுவன் சிக்கியச் சம்பவத்தால், அப்பகுதியே செய்வதறியாமல் உரைந்துபோய் நின்றது. ஒரு புறம் காருக்குள் சிறுவன் அழுதுக் கொண்டிருக்க, வெளியே, குழந்தையை மீட்க முடியாமல் தாய் அழுது கொண்டிருக்க, அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.
MOST READ: புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தில் கலக்க வரும் புதிய அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் கார்!

இதுபோன்ற இக்கட்டான சூழலைத் தவிர்க்க தான், மேலை நாடுகளில் , நிறுத்தப்பட்ட காருக்குள் குழந்தை மற்றும் செல்லப்பிராணிகளை விட்டு செல்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், பசுமை வீடு விளைவின் காரணமாக, இயக்கமற்ற நிலையில் இருக்கும் காரில், வெளிப்புறத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான வெப்ப நிலை உருவாகும். இது, காரின் கேபினுக்குள் இருக்கும் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற, சம்பவத்தால் இதுவரை மிருகங்கள் உட்பட பல பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளன.