பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை இரு சக்கர வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளாததால், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது.

By Arun

பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை இரு சக்கர வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ளாததால், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

பஸ் தொடர்பான விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுவது பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும்தான். குறிப்பாக பஸ்களை ஒட்டியே பயணித்து வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையிலான விபத்துக்களில் சிக்கி கொள்கின்றனர்.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

இதற்கு பஸ்ஸை டிரைவர்கள் கவனமாக ஓட்டாததுதான் காரணம் என எளிதாக சொல்லி விடுகிறோம். ஆனால் அப்படி நடைபெறும் விபத்துக்களுக்கு டிரைவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. ஏனெனில் அனைத்து சமயங்களிலும் பஸ் டிரைவர்கள் தவறு செய்வது கிடையாது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

பஸ் டிரைவரின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில், இரு சக்கர வாகன ஓட்டிகள் பயணிப்பதாலும் கூட சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்பட நேரிடுகிறது. டிரைவரின் கண்ணுக்கு தெரியாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் என அழைக்கப்படுகின்றன.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

அதாவது ரியர் வியூ மிரர் மற்றும் சைடு வியூ மிரர் ஆகியவற்றின் மூலமும் டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகள்தான் பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகின்றன. இந்த பகுதிகளில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா? என்பதை பஸ் டிரைவர்கள் திரும்பி பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

எனவே பஸ் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு புரிய வைப்பதற்கான முயற்சிகளை கர்நாடக மாநில அரசு எடுத்துள்ளது. இந்த விழிப்புணர்வுக்காக, கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) உருவாக்கியுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் வரும் வாகனங்களால், பஸ் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக, 2 இளம் இரு சக்கர வாகன ஓட்டிகள் மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ரியர் வியூ மிரரில் அவர்கள் பார்க்கும்போது, பஸ்ஸின் பின்னால் எந்த வாகனமும் தெரியவில்லை.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

ஆனால் உண்மையில் ஒரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் பஸ்சுக்கு அருகே இருந்தனர். எனினும் ரியர் வியூ மிரர் மூலம், அந்த 2 இளம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் அதனை பார்க்க முடியவில்லை. பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகு, அங்கு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் இருப்பது அவர்களுக்கு தெரியவருகிறது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

பஸ்சுக்கு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளால், பஸ் டிரைவர்கள் தினம் தினம் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பஸ்ஸை ஓட்டி மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளால், விபத்துக்களும் ஏற்பட நேரிடுகிறது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

பஸ் மிக நீளமாக இருப்பதாலும், ரியர் வியூ மிரர்கள் சிறியதாக இருப்பதாலும், பஸ்சுக்கு மிகவும் நெருக்கமாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளை சில சமயங்களில் டிரைவர்களால் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

இதுதவிர சில இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியவும் தவறி விடுகின்றனர். அத்துடன் வேகம், தொலைவு ஆகியவற்றை கணக்கிடாமல் பஸ்களை ஓவர் டேக் செய்ய முயலும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

எனவே பஸ் டிரைவர்களின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியை புரிந்து கொண்டு, குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து இரு சக்கர வாகனங்களை ஓட்டினால், தேவையில்லாமல் நிகழும் விபத்துக்களை தவிர்க்கலாம். இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக விபத்துக்களை குறைக்க முடியும் என KSRTC நம்புகிறது.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

அத்துடன் இந்த தகவலை அனைவருக்கும் பகிர வேண்டும் எனவும் KSRTC கேட்டு கொண்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால், விபத்துக்களுக்கு பஸ் டிரைவர்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது அனைவருக்கும் புரிய வருவதுடன், விழிப்புணர்வும் ஏற்படும்.

பஸ் டிரைவர்கள் மட்டுமே விபத்துக்கு காரணமா? அரசு வெளியிட்ட இந்த வீடியோவை பார்த்தால் உண்மை புரியும்..

இத்துடன் நின்று விடாமல் பஸ்களை எப்படி பாதுகாப்பாக இயக்க வேண்டும்? என தங்களின் டிரைவர்களுக்கும் KSRTC விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KSRTC Created a Awareness Video to Educate Two Wheeler Riders. Read in tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X