பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை தட்டிக்கேட்ட இளைஞரின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவருக்கு பாராட்டுக்களும் குவிகின்றன.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இந்தியாவின் நகர்ப்புற சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக உள்ளன. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் பின்பற்றுவதே கிடையாது. போக்குவரத்து விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளால், சாலையில் பயணம் செய்யும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இந்தியாவில் ராங் சைடில் (Wrong Side) பயணம் செய்யும் வாகனங்களை நீங்கள் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். விதிமுறைப்படி வாகனங்களை ராங் சைடில் இயக்குவது தவறு. ஆனால் வாகன ஓட்டிகள் பலர் தொடர்ந்து ராங் சைடில் வாகனங்களை இயக்கி கொண்டேதான் உள்ளனர். இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர்-அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் கேடிஎம் ட்யூக் 390 பைக்கில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அரசு பஸ் ஒன்று ராங் சைடில் வந்து கொண்டிருந்தது. தவறான பாதையில் வந்த அந்த பஸ் கேடிஎம் ட்யூக் 390 பைக்கின் மீது மோதுவது போல் வந்தது.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

ஆனால் அந்த பைக் ரைடர் நூலிழையில் தப்பித்து விட்டார். அப்போது அந்த பஸ்ஸில் இருந்த உதவியாளர், பைக் ரைடரை பார்த்து ஏதோ சொன்னது போல் தெரிகிறது. இதனால் அந்த பைக் ரைடர் உடனடியாக யூ-டர்ன் அடித்து பஸ்ஸை விரட்டி சென்றார். சிறிது தூரத்திலேயே பஸ்ஸை பிடித்து விட்ட அவர், பஸ்ஸின் முன்பாக தனது பைக்கை நிறுத்தி கொண்டார்.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இதனால் பஸ் டிரைவரால் முன்னோக்கி செல்ல முடியவில்லை. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் பஸ் முழுவதும் பயணிகள் நிரம்பியிருந்தனர். ராங் சைடில் பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவரின் அஜாக்கிரதையால் ஏதேனும் விபத்து நடைபெற்றிருந்தால், பயணிகள் அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் நல்ல வேளையாக அப்படி ஏதும் விபரீதம் நடைபெறவில்லை.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இதனிடையே பஸ்ஸின் முன்பாக தனது பைக்கை அந்த ரைடர் நிறுத்தி விட்டதால், அவருக்கும், பஸ்ஸின் உதவியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே ஏராளமான வாகன ஓட்டிகள் அங்கு குவிந்து விட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த பஸ் டிரைவர் ராங் சைடில் வந்த தனது தவறை ஒப்புக்கொண்டார்.

MOST READ: 31 லட்ச ரூபாய் பைக்கை ஓட்டி வந்தவரை தடுத்து நிறுத்திய போலீசார்... காரணம் என்னவென்று தெரியுமா?

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இதன்பின் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆனால் அதே லேனில்தான் பஸ் தொடர்ந்து பயணித்தது. கேடிஎம் ட்யூக் 390 பைக் ரைடரின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ராங் சைடில் பயணிப்பது மிகவும் அபாயகரமானது. ஆனால் கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் ராங் சைடில் சென்று கொண்டேதான் உள்ளன. கூடுதல் தொலைவு பயணிப்பதை தவிர்க்கும் நோக்கத்தில்தான் வாகன ஓட்டிகள் ராங் சைடில் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் ஒரு சில நிமிடங்களை மிச்சம் பிடிக்க முடியும். சில நேரங்களில் ஒரு சில வினாடிகள்தான்.

MOST READ: மறைந்திருக்கும் ஆபத்து தெரியுமா? வாகனங்களில் இனி இது இருக்க கூடாது... மத்திய அரசு சூப்பர் உத்தரவு

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

ஆனால் இதற்காக ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் ராங் சைடில் பயணிப்பது தவறானது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டிய நேரமிது. நீங்கள் ராங் சைடில் பயணம் செய்தால், விபத்து மட்டுமல்லாது மற்ற வாகன ஓட்டிகளுடன் இதுபோல் தேவையில்லாத வாக்குவாதமும் ஏற்படும் என்பதை உணருங்கள்.

MOST READ: தென் மாநிலங்களிலேயே தமிழகம்தான் முதலிடம்: சாதித்து காட்டும் எடப்பாடி... சூப்பரப்பு!

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இதன் மூலம் உங்கள் நேரம் வீணாவதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கும் நீங்கள் ஆளாக நேரிடும். தற்போது எல்லாம் வாகன ஓட்டிகளுக்கு இடையே சாலையில் வாக்குவாதம் ஏற்படுவது என்பது வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில் இந்த வாக்குவாதம் கை கலப்பாக மாறி விடுகிறது. வாகன ஓட்டிகள் இதனை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

அத்துடன் வாக்குவாதத்திற்கு பின்பு உடனடியாக நீங்கள் வாகனங்களை இயக்குவதும் கூட தவறானதுதான். ஏனெனில் அத்தகைய சமயங்களில் உங்கள் மனம் இயல்பாகவோ அல்லது அமைதியாகவோ இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் வாகனங்களை இயக்கினால் சாலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

எனவே இதனை மனதில் வைத்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். இதன் மூலம் சாலை விபத்துக்களில் இருந்து மட்டுமல்லாது மற்ற வாகன ஓட்டிகள் உடனான தேவையற்ற பிரச்னைகளில் இருந்தும் நீங்கள் தப்பலாம். குறிப்பாக தங்களை நம்பி வரும் பயணிகளின் பாதுகாப்பை பஸ் டிரைவர்கள் உணர வேண்டிய நேரமிது.

பயணிகள் உயிருடன் விளையாடிய அரசு பஸ் டிரைவரை இந்த இளைஞர் என்ன செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ

இதுபோல் ஏராளமான அரசு பஸ் டிரைவர்கள் தாறுமாறாக பஸ்களை ஓட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் பாதுகாப்பிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முன்னதாக அரசு பஸ் டிரைவரின் தவறை தட்டிக்கேட்ட இளைஞருக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM Duke 390 Rider Stops Bus Driving Wrong Way: Video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X